அல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...

 அல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...

அல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...

நிச்சியமாக அல்லாஹ் அவன் உண்மையான அரசன்

{(அவன்) பேரரசன்; தூயவன்} [ஸூரதுல் ஹஷ்ர் 23]

உண்மையான அரசன்

அவன் பெறுமைக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். அவன் அவனுடைய அடியார்களின் விடயங்களை திட்டமிடுகின்றான். மேலும் அதன்படி நடக்க வைக்கின்றான். அவர்கள் அவனுடைய அடியாரகளாகும் மேலும் அவன் பக்கம் தேவை உடையவர்களாகவும் இருக்கின்றனர். அவனே அரசன் ஆட்சியும் அவனுடையதே.

பொதுவாக ஆட்சி அவனுக்குறியது. இவிவுலக அரசர்களும் தலைவர்களும் அவனுக்கு அடிமைகளாகும். வானங்கள் மற்றும் பூமியின் நலவுகள் அவனுடைய கொடையின் மூலமும் சிறப்பின் மூலமும் நடக்கின்றன.

{வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.}

[ஸூரதுல் பகரா 255]

அரசனும் அரசாட்சியும்... அவனுக்கே உரியது. அவன் ஆட்சி என்ற பண்பைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான். அந்த வர்ணனையானது மகத்துவம் பெறுமை திட்டமிடல் மேலும் அடக்கியாளும் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டதாகும். கூலி வழங்குவது கட்டளையிடுவது போன்றவைகள் அல்லாஹ்வுக்கே உரியதாகும். உயர்ந்த மற்றும் தாழ்ந்த அனைத்து அறிவாளிகளும் அவனுக்கே உரியவர்களாவர். அவர்கள் அனைவரும் அடிமைகளும் ஆளப்படக்கூடுயவர்களும் ஆவர். மேலும் அனைவரும் அவன்பால் கட்டாயத்தில் உள்ளனர்.

உண்மையான அரசன்

எந்த கேள்வி கணக்கும் இல்லாமல் கொடுப்பான். மேலும் அவனுடைய அடியார்களுக்கு கொடையாக கூலி கொடுப்பான். இதனால் அவனுடைய ஆட்சியில் எந்தக் குறையும் ஏற்படாது. ஹதீஸூல் குத்ஸியில் வந்துள்ளது.

{உங்கள் மூதாதைகளும் மனிதர்களும் ஜின்களும் ஒரு பெரிய மலையின் மீது ஏறி என்னிடம் கேட்டாள் ஒவ்வொறுவரும் என்ன கேட்பார்களோ அவைகளை வழங்கிவிடுவேன் அது என்னிடத்தில் எந்தக்குறையையும் ஏற்படுத்தாது கடலிலே ஒரு ஊசியை போட்டு எடுக்கும் போது எவ்வாறு இருக்குமோ அவ்வாறுதான் நான் கொடுப்பதும் இருக்கும்.}.(ஆதாரம் முஸ்லிம்)

உண்மையான அரசன்

அவன் நாடியவர்களுக்கு அரசாட்சியை கொடுப்பான்.

அல்லாஹ் கூறுகின்றான்

{ "அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!}[ஸூரது ஆலு இமரான் 26

ஆட்சி செய்யக்கூடியவன்

அவனுடைய படைப்பினங்களுக்கு அவன் அரசன். இம்மையிலும் மறுமையிலும் அவர்களை அதிலே இருக்க வைக்கின்றான். அதன்பால் ஆசை வைக்கின்றார்கள். அதிலே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். மேலும் அவர்களிடத்தில் அல்லாஹ்விடம் வேண்டுவதற்கும் அழைப்பதற்கும் இறைஞ்சுவதற்கும் ஆசை அதிகரிக்கின்றது.

நிச்சியமாக அல்லாஹ் அவன் அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...Tags: