அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...

 அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...

அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...

நிச்சியமாக அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...

மனிதன் மற்றும் ஜின் வர்க்கத்திற்கும் மேலால் அவன் அடக்கி ஆளக்கூடியவன்.

{அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்; அவன் ஞானமுள்ளவன்; நன்கறிந்தவன்.}. [ஸூரதுல் அன்ஆம் 18]

அடக்கி ஆளக்கூடியவன்

அவனுடைய படைப்பினங்களை உயர்வைக் கொண்டும் அறிவைக் கொண்டும் திட்டத்தைக் கொண்டும் அடக்கி ஆழ்ந்தான். இந்த பரந்த உலகத்திலே அவனுடைய அறிவும் அனுமதியும் இல்லாமல் எந்த விடயமும் நிகழாது.

அடக்கி ஆளக்கூடியவன்

அவனுடைய மகத்தான ஆதாரங்களைக் கொண்டு பெறுமையாளர்களாகிய மறுப்பாளர்களை அடக்கி ஆழ்ந்தான். மேலும் இரட்சித்தல் மற்றும் வணக்கக் கோட்பாடுகளுக்கு அவனே தகுதியானவன் என்ற ஆதாரங்களையும் தெளிவுபடுத்தினான். மேலும் அழகான பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் கொண்டும் தெளிவுபடுத்தினான்

அடக்கி ஆளக்கூடியவன்

அநியாயத்திற்கும் அத்துமீறலுக்கும் பெறுமையாளர்களுக்கும் அவன் அடக்கி ஆளக்கூடியவனாவான். அவர்களை அடக்கி ஆளப்பட்டவர்களாக எந்த நாட்டமும் இன்றி ஒன்று சேர்ப்பான்.

{ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.}. [ஸூரது இப்ராஹிம் 48]

அடக்கி ஆளக்கூடியவன்

அவனுடைய நாட்டத்தின்படி செய்யக்கூடிய அனைத்தும் எவ்வளவு மகத்துவமானதாக இருந்தாலும் அதை எந்த படைப்பினமும் மறுக்க முடியாது. அவன் இல்லாமையில் இருந்து உருவாக்கக்கூடியவன் பலசாளிகள் இதை அடைந்து கொண்டால் அவர்களை அது இயலாமல் ஆக்கிவிடும். அவனுடைய புதிய படைப்புக்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களுடைய நாவுகள் அடங்கி விடும்.

நிச்சியமாக அல்லாஹ் அடக்கி ஆள்பவன்....

அடக்கி ஆளக்கூடியவன்... அவன் அனைத்தையும் அடக்கி ஆளக்குடியவன். படைப்பினங்கள் அவனுக்கு அடிபணியும்.

Tags: