அல்லாஹ் அபயமளிப்பவன் இரட்சிப்பவன்...

 அல்லாஹ் அபயமளிப்பவன் இரட்சிப்பவன்...

அல்லாஹ் அபயமளிப்பவன் இரட்சிப்பவன்...

நிச்சியமாக அல்லாஹ் அபயமளிப்பவன் இரட்சிப்பவன்...

{அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்;}
[ஸூரதுல் ஹஷ்ர் 23]

அபயமளிப்பவன்...

அவனுடைய அடியார்களுக்கு மத்தியிலே அவனுடைய பாதுகாப்பை பரப்பியுள்ளான். மேலும் அவனுடைய படைப்பினங்களுக்கு மத்தியிலும் பாதுகாப்பை பரப்பியுள்ளான். மேலும் வஹியைக் கொண்டு அவர்களை அமைதிப்படுத்தினான்.

{பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.}. [ஸூரது குரைஷ் 4]

அபயமளிப்பவன்...

அவனுடைய படைப்பினங்களின் மூலம் நடக்கக்கூடிய அனைத்தையும் அவன் பார்த்துக்கொண்டும் இரட்சித்துக் கொண்டும் அபமளித்துக் கொண்டும் இருக்கின்றான்.

அபயமளிக்கக்கூடியவன்...

கூலியிலிருந்து எதுவும் குறையாது. தண்டனை எதுவும் அதிகரிக்காது. கண்ணியத்திலும் கண்ணியப்படுத்துவதிலும் மேலும் நல்லவனாக இருப்பதிலும் நல்லவைகளை செய்வதிலும் அவன்தான் முதலாவதாகும்.

இரட்சிப்பவன்

அவனுடைய அடியார்களை அவன் இரட்சித்தான். அவர்களை அடக்கி கட்டுப்படுத்தினான். அவர்களிடம் இருந்து வெளியாகும் செயல்களையும் நிலமைகளையும் பார்த்து கண்கானித்துக்கொண்டிருக்கின்றான். அவன் அனைத்தையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். அவனுக்கு அனைத்து விடயங்களும் இலேசானதாக இருக்கின்றது. மேலும் அவனிடம் அனைத்தும் தேவை உள்ளதாக இருக்கின்றது.

{அவனைப் போல் எதுவும் இல்லை. }. [ஸூரது அஷ்ஷூரா 11]

நிச்சியமாக அல்லாஹ் அபயமளிப்பவன் இரட்சிப்பவன்.

அபயமளிப்பவன்... அல்லாஹ் பூரணமான அழகான கண்ணியமான வர்ண்ணைகளைக் கொண்டு அவனை புகழ்ந்துள்ளான். அவன் அவனுடைய தூதர்களை அனுப்பி சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு அவனுடைய வேதங்களை இரக்கினான். அவர்களின் வருகையை சரிப்படுத்தி உண்மைப்படுத்தி அறிவிக்ககூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு அவனுடைய தூதுவர்களை உண்மைப்படுத்தினான்.

இரட்சிப்பவன்...

மறைவான விடயங்களையும் உள்ளங்களின் இரகசியங்களையும் அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய அறிவு அனைத்தையும் சூழ்ந்த்தாக உள்ளது.Tags: