அல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...

 அல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...

அல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...

நிச்சியமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்.

அவனுடைய படைப்பினங்கள் மீது அல்லாஹ்வே விசாரணை செய்பவன்... அனைத்து விடயங்களுக்கும் அவனே போதுமானவனாகும்...

{தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? } [ஸூரா அஸ்ஸூமர் 36]

அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன் ஆகும் அவன் சிறந்த பொருப்பாளனாவான். அதை இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பை சந்திக்கும் போது கூறினார்கள். அவருக்கு அது குளிராகவும் சாந்தமாகவும் இருந்தது. அதை ஸஹாபாக்களும் கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்

{ "மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர்.}. [ஸூரா ஆலு இம்ரான் 173]

அவர்கள் கூறினார்கள்

{"எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். }. [ஸூரா ஆலு இம்ரான் 173-174]

விசாரணை செய்பவன்... அவன் அடியார்களை மிகவும் அறிந்தவன். அவன் மீது நம்பிக்கை வைப்பவனுக்கு அவன் போதுமானவனாகும். நல்லவைகளையும் தீயவைகளையும் அவனுடைய அடியார்களுக்கு பிரித்துக் காட்டியுள்ளான். செயல்களையும் அதனுடைய கண்ணியத்தையும் கணக்கிடுவதோடு அவனுடைய அறிவுக்கும் நுட்பத்திற்கும் ஏற்ப செயற்படுகின்றான்.

அல்லாஹ் அவனுடைய அடியார்களை விசாரணை செய்யக்கூடியவனாகும். அவர்களுடைய செயல்களைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள். அவர்கள் அவர்களுடைய செயல்களில் நன்மை செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு அதற்கு கூலி வழங்கப்படும். அவர்கள் தீமை செய்திருந்தால் அதற்கும் அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்படும்.

{அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.}. [ஸூரதுல் அன்ஆம் 62]

விசாரணை செய்பவன்

அவனுடைய படைப்பினங்களின் மறைமுகமான வெளிரங்கமான செயல்களை கணக்கிடுவதில் அவன் சூழ்ந்து கொண்டான்.

எனது இறைவா.. போதுமாக்ககூடியவனே எங்களுடைய முக்கியமான விடயங்களை எங்களுக்கு போதுமாக்கித் தருவாயாக.. எங்களுடைய நேர்வழியை எங்களுக்கு வெளிக்காட்டுவாயாக. சங்கையானவனே நலவுகளை எங்களுக்கு அதிகரித்து தருவாயாக.

{அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.}. [ஸூரதுன் நிஸா 6]

நிச்சியமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...

போதுமானவன்... அடியார்களுக்குத் தேவையான அனைத்தையும் அல்லாஹ் பூர்த்தியாக்கிக் கொடுக்கின்றான். குறிப்பாக அவனை ஈமான் கொண்டு அவனிடமே தனது பாரங்கள் அனைத்தையும் சுமத்தி உலக மார்க்க தேவைகளை அவனிடமே கூறுபவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான்.

Tags: