முதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்

 முதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்

முதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்

சுத்தம்:

அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மகத்துவம் ஒரு முஃமீன் சுத்தத்தை அடைவதாகும். இதன் காரணமாகத்தான் அல்லாஹ் அவனை விரும்புகின்றான்

அல்லாஹ் கூறுகின்றான் { அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!}
.
[ஸூரதுல் பகரா 222],

நபியவர்கள் கூறினார்கள்«சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும்».(ஆதாரம் முஸ்லிம்).

சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும். அது ஈமானுடைய பகுதிகளில் முக்கியமானதாகும். அல்லாஹ் அனைத்து வகையான சுத்தத்தையும் விரும்புகின்றான் அது-

உள ரீதியான சுத்தம்

அதைக் கொண்டு நாடப்படுவது அல்லாஹ்வைக் கொண்டு இணைவைப்பதும் மேலும் பாவங்களின் தாக்கத்தை விட்டும் ஆத்மாவை சுத்தப்படுத்துவதுமாகும். அது உண்மையான தவ்பாவின் மூலமே முடியும். மேலும் பெறுமை, பொறாமை, சந்தேகம், மோசடி, இணை வைப்பது போன்ற உள்ளங்களில் ஏற்படுகின்ற மாசுகளை விட்டும் சுத்தம் செய்தல். அவை அல்லாஹ்வுடைய மனத் தூய்மையைக் கொண்டும் நலவுகளை விரும்புவதைக் கொண்டும் சகிப்புத்தன்மையைக் கொண்டும் தெளிவைக் கொண்டும் உண்மையைக் கொண்டும் அல்லாஹ்வுடைய நாட்டத்தைக் கொண்டுமே சுத்தம் செய்யமுடியும்.

2- உடல் ரீதியான சுத்தம்

இதைக் கொண்டு நாடப்படுவது அலுக்குகளையும் தொடக்குகளையும் நீக்குவதாகும்.

-அலுக்குகளை நீக்குவது

–சுத்தமான நீரினால்- ஆடையிலும் உடம்பிலும் இடத்திலும் இருந்து நஜீஸ்களை நீக்குவது ஆகும் அதற்கு பல சட்டங்கள் உண்டு.

-தொடக்கை நீக்குவது

அதைக் கொண்டு நாடப்படுவது வுழு தயம்மும் குளிப்பு போன்றவையாகும். தொழும் போது, குர்ஆன் ஓதும் போது, அல்லாஹ்வுடைய வீட்டை சுற்றி வரும் போது, அல்லது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும் நேரங்களிலும் இவை அல்லாத நேரங்களிலும் ஆகும்.

நபியவர்கள் கூறினார்கள் சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும். ஆதாரம் முஸ்லிம்

தொழுகை

அல்லாஹ்வுடைய ஏகத்துவக் கோட்பாடு தொழுகையில் அடியானுக்கும் அவனுடைய இறைவனுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதில் ஒரு அடியான் அவனுடைய இறைவனுக்கு வழிப்படுவதையும் அன்பையும் அவனை அடிபணிவதையும் அவனை சாந்திப்படுத்துவதையும் அறிவிக்கின்றது. இதனால்தான் இது இஸ்லாத்தின் தூண்களான இரண்டு கலிமாக்களுக்கும் அடுத்ததாக அமைந்துள்ளது. அது இஸ்லாத்தின் தூணாகவும் மேலும் இறையச்சத்தின் ஒளியாகவும் உள்ளது. அதில் ஆத்மா சாந்தியடைந்து உள்ளம் விரிவடைகிறது மேலும் உள்ளமும் சாந்தியடைகிறது. கெட்ட செயல்களை விரட்ட மோசமான விடயங்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றது. தக்பீரில் ஆரம்பித்து ஸலாம் கொடுப்பதில் முடிவடைகின்ற குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அமல்களாகும்.

தொழுகையை விடுபவனும் அதை மறுக்கக்கூடியவனும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவன் பொய்ப்பிக்கின்றான். மேலும் குர்ஆனையும் மறுக்கின்றான். இது இஸ்லாத்தின் அடிப்படையில் குறை ஏற்படுத்துகின்றது. யார் அதனுடைய கடமைத் தன்மையை அறிந்து அதை சோம்பேரியாக விடுகின்றானோ அவன் அவனுடைய ஆத்மாவை பாரிய ஒரு அபாயத்திற்கு இட்டுச்செல்கின்றான் மேலும் இதற்கு கடுமையாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

நபியவர்கள் கூறினார்கள் «ஒரு மனிதனுக்கும் இணைவைப்பிற்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்.».(ஆதாரம் முஸ்லிம்).

இன்னும் சிலர் கூறுகின்றனர் இது இணைவைப்பதாகும் ஆனால் அது பெரிய இணைவைப்பாகாது. இதை நிராகரித்தால் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடும். அல்லது பெரிய பாவங்களில் ஒன்றாகிவிடும்.

தொழுகைக்கு பல மகத்துவமான தாக்கங்கள் உள்ளன அவையாவன-

நபியவர்கள் கூறினார்கள் தொழுகை ஒரு ஒளியாகும். ஆதாரம் பைககி

1 வெறுக்கப்பட்ட கெட்ட விடயங்களை விட்டும் தடுக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான் { (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.}.[ஸூரதுல் அன்கபூத் 45].

2 இரண்டு கலிமாக்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான அமலாகும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் «நான் ரஸூலுல்லாஹ்விடம் அமல்களில் சிறந்து எது என்று கேட்டேன் அதற்கவர் தொழுகையை நேரத்தில் தொழுவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்தவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதாகும் என்று கூறினார்கள்.».
(ஆதாரம் முஸ்லிம்).

இது அடியானையும் அல்லாஹ்வையும் நெருக்கப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

3 தொழுகை பாவங்களை கழுகி அழித்துவிடும்

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபியவர்கள் கூறினார்கள் «ஐவேலைத் தொழுகைக்கான உதாரணம் உங்கள் வாயிலுக்கு அருகில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது அதில் ஒருவர் ஐவேலை குளிப்பது போன்றதாகும்.».
(ஆதாரம் முஸ்லிம்).

4 தொழுகை தொழுபவருக்கு உலகத்திலும் மறுமையிலும் ஒளியைக் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றி கூறினார்கள் «தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவனுக்கு எந்ரத ஒரு ஒளியும் பிரகாசமும் வெற்றியும் இல்லை மேலும் அவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான்.».(ஆதாரம் அஹ்மத்).

மேலும் கூறுகினார்கள் «தொழுகை ஒரு ஒளியாகும்».(ஆதாரம் பைககிி).

5 அல்லாஹ் தொழுகையைக் கொண்டு அவனுடைய படித்தரங்களை உயரத்துகின்றான் மேலும் பாவங்களை நீக்கிவிடுவான்.

ஸவ்பான் என்பவர் நபியவர்கள் அவருக்கு கூறியதாக கூறுகின்றார்

«நீ அதிகமாக அல்லாஹ்வை ஸுஜூத் செய் நீ ஒரு ஸுஜூத் செய்தால் அல்லாஹ் உனது ஒரு படித்தரத்தை உயர்த்தி உன்னை விட்டும் ஒரு பாவத்தை நீக்கி விடுவான்.»
(ஆதாரம் முஸ்லிம்).

6 தொழுகை நபியின் இரக்கத்தைக் கொண்டு சுவர்க்கத்திற்கு நுளைவதற்கான மகத்தான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

ரபீஅத் இப்னு கஃப் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் «நான் நபியவர்களுடன் இரவு தூங்கினேன் நபியவர்கள் வுழு செய்வதற்கும் வேறு தேவைகளுக்கும் நான் தண்ணீர் கொண்டு சென்றேன். அவர் ஏதாவது கேட்குமாறு சொன்னார்கள் சுவனத்தில் உங்களோடு சேர்ந்து இருக்கவேண்டும் என்று கேட்டார்கள் அதற்கவர் வேறெதுவும் இல்லையா என்று கேட்டார்கள் அதுதான் எனக்கு வேண்டும் என்றேன் அதற்கு நபியவர்கள் அதிகமாக சுஜூத் செய்வீராக என்று கூறினார்கள்.».
(ஆதாரம் முஸ்லிம்).

நநிச்சியமாக தொழுகை பலமான அல்லாஹ்வுக்கும் பலகீனமான அடியானுக்கும் இடையிலான தொடர்பாகும். அல்லாஹ்வுடைய சக்தியைக் கொண்டு பலகீனமான ஒருவன் சக்தி பெறுகின்றான் மேலும் அவனை ஞாபகம் செய்வது அதிகரிக்கின்றது. அவனுடைன் உள்ளம் ஒன்றுபடுகின்றது. அது தொழுகையிலே அதிகமாக நாடப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்

{என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!}.[ஸூரது தாஹா 14]

ஸகாத்

ஸகாத் என்பது ஒரு ஆத்மாக்கும் செல்வத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு தூய்மையும் வழர்த்தியும் ஆகும்.

வளர்ப்பு மற்றும் தூய்மை என்பது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அடியானுடைய ஆத்மா சுத்தமடைவதாகும். அது அவனுடைய செல்வத்தை தூய்மையானதாகவும் மேலும் ஸகாத்தை சுத்தமானதாகவும் ஆக்குகின்றது. ஸகாத் என்பது ஒரு பணக்காரன் அவனுடைய செல்வத்தில் ஏழைகளுக்கு செலுத்தக்கூடிய ஒரு கடமையாகும். அதன் நுற்பங்களில் இருந்தும் உள்ளதுதான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்றுக் கொள்வதற்கும் மேலும் அவனுடைய ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்கும் மேலும் தேவை உடையவர்களுக்கு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கொடுப்பதாகும்.

ஸகாத்திற்கு இஸ்லாத்திலே பாரிய முக்கியத்துவம் உண்டு. எனவே மார்க்கத்தில் அதனுடைய நுற்பம் இருப்பதுடன் அது வெளிரங்கமாகவே அதனுடைய முக்கியத்துவத்தை அறிவித்து வந்துள்ளது.

1 ஒரு மனிதனுடைய ஆத்மாவை கஞ்சத்தனத்திலிருந்தும் பேராசைகளில் இருந்தும் சுத்தப்படுத்துகின்றது.

2 ஏழைகளுக்கு ஆறுதல் அளித்தல் மேலும் தேவை உள்ளவர்களுடைய தேவைகளையும் பின்தங்கிய தடுக்கப்பட்டவர்களுடைய தேவைகளையும் இல்லாமல் ஆக்குதல்.

3 மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய சந்தோசத்தையும் நிலை நிருத்துவதற்காக பொதுவான ஒரு நலத்திட்டத்தை மேற் கொள்ளுதல்.

4 வியாபாரிகளிடமும் பணக்காரர்களிடமும் நிறைந்து காணப்படும் செல்வங்களை கட்டுப்படுத்துதல். ஒரு கூட்டத்தாரிடம் மாத்திரம் செல்வம் வரையருக்கப்படாமல் இருப்பதற்காக வேண்டியாகும் இல்லாவிட்டால் அது பணக்காரர்களிடம் மாத்திரம் இருந்துவிடும்.

5 இஸ்லாமிய சமூகத்தை அது ஒரு குடும்பத்தைப் போன்று ஆக்கிவிடும் அதிலே சக்திவாய்ந்தவன் இயலாதவன் மீதும் பணக்காரன் கஷ்டப்படுபவன் மீதும் இரக்கம் காட்டுவான்.

6 ஸகாத் பணக்காரர்களின் மீது உள்ளத்தில் இருக்கக்கூடிய சினம் மற்றும் கோபத்தையும் நீக்கிவிடும். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகள் மீது இருக்கும் பொறாமை வெறுப்பு போன்றவற்றையும் நீக்கிவிடும்.

7 சொத்துக்களுக்கு குற்றங்கள் நிகழ்வதை விட்டும் ஸக்காத்தின் மூலம் பாதுகாக்கப்படும். உதாரணமாக- களவு கொள்ளை சூரையாடுதல் போன்றவற்றைவிட்டும் பதுகாப்பாகும் .

8 ஸக்காத் சொத்துக்களை தூய்மையாக்கும் அதாவது பெறுகச் செய்யும்.

ஸக்காத்தை கடமையாக்கி குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் வெளிப்படையாக வந்துள்ளது. இஸ்லாத்தின் தூண்களில் இதுவும் ஒன்றாகும் அதன் மீதே இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மார்க்கத்தின் தூண்களின் மூன்றாவது தூணாக ஸக்காத் இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!}.[ஸூரதுல் பகரா 43],

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்}.
[ஸூரதுல் பகரா 110]

ஜிப்ரீல் (அலை) அவர்களின் ஹதீஸிலே வருகின்றது «இஸ்லாம் என்றால் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்றும் மேலும் முஹம்மத் (ஸல்) அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் மேலும் தொழுகையை நிலை நாட்டுவதும் ஸக்காத் கொடுப்பதும் நோன்பு நோற்பதும் அல்லாஹ்வுடைய வீட்டை முடியுமானவர்கள் தரிசிப்பதுமாகும்.».
(ஆதாரம் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள் «இஸ்லாம் 5 விடயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்றும் மேலும் முஹம்மத் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் மேலும் தொழுகையை நிலை நாட்டுவதும் ஸக்காத் கொடுப்பதும் ஹஜ் செய்வதும் மேலும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்.».
(ஆதாரம் புகாரி).

இந்த ஹதீஸ் ஸக்காத் இஸ்லாத்தின் தூண்களில் நின்றும் ஒரு தூணாகும் என்பதை தெளிவாக அறிவிக்கின்றது. இது ஒரு மகத்தான ஒரு கட்டிடமாகும் இது இல்லாமல் இஸ்லாம் பூர்த்தியடையாது.

நோன்பு

அல்லாஹ் நோன்பை கடமையாக்கி மேலும் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். அதை பற்றிப் பிடித்து -அல்லாஹ்வை வணங்குவதாக நினைத்து- காலையில் பஃஜ்ர் உதயமாகியதில் இருந்து சூரியன் மறையும் வரையிலும் நோற்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! }.
[ஸூரதுல் பகரா 187],

ஒரு அடியானுடைய ஈமான் உள்ளத்திலே நிலைத்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கான அவனுடைய ஏகத்துவமும் அல்லாஹ் அவனுக்கு விதியாக்கியவைகளை வழிப்படுவதின் காரணத்திலே உள்ளது. அல்லாஹ்வின் கீழ்வரும் வசனத்திலே அதை தெளிவுபடுத்த முடியும். {நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.}.[ஸூரதுல் பகரா 183]

ஒரு ஏகத்துவவாதி நோன்பைக் கொண்டு வெற்றி பெறுகின்றான். அதே போல் அல்லாஹ் அவனின் பக்கம் விரைகின்றான்.

அல்லாஹ் ஹதீஸூல் குத்ஸியில் கூறுகின்றான் «ஆதமுடைய மக்களின் செயல்கள் அனைத்திற்கும் கூலி அவனுக்குறியது நோன்பைத் தவிர அது எனக்குறியது அதற்கு நானே கூலியாகின்றேன்...».
(ஆதாரம் புகாரி).

நோன்பு ஒரு அடியானின் மீது அதிகமான தாக்கங்களை செலுத்துகின்றது அவையாவன-

நோன்பு ஒரு ஆத்மாவிலே ஈமானைக் கட்டக்கூடிய ஒரு பாடசாலையாகும்.

1 நோன்பு அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையிலான ஒரு தொடர்பாகும். ஒரு முஃமினுடைய உள்ளத்தில் உண்மையான கண்கானிப்புக்கான வித்தை இடுகின்றன. இதன் போது அவனுக்கு எந்த முகஸ்துதிகளும் வர முடியாமல் போகும். அது ஒரு முஃமினிடத்தில் அல்லாஹ்வுடைய பயத்தையும் கண்கானிப்பையும் ஏற்படுத்துகின்றது. இதுவே ஒரு உயர்ந்த நோக்கமும் ஒரு உயர்ந்த ஒரு லட்சியம். அதிகமான மக்களின் ஆசைகளை சுருக்கியதாக இது இருக்கும்.

2 அனைத்து மனிதர்களையும் ஒன்றுபடுத்தி மேலும் சமத்துவத்தையும் நீதியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் முஃமீன்களை இரக்க உணர்வு உள்ளவர்களாகவும் உபாகார குணம் உள்ளவர்களாகவும் மாற்றுகின்றது. மேலும் சமூகத்தையும் தீங்கிலிருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கின்றது.

3 ஒரு முஸ்லிமை அவனுடைய சகோதரனுடைய கஷ்டத்தை உணர வைக்கின்றது. மேலும் இது ஏழைகளுக்கு உபகாரம் செய்வதற்கும் செலவழிப்பதற்கும் அவனை தூண்டுகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு இடையில் சகோதரத்துவத்தையும் இரக்கத்தையும் உறுதிப்படுத்கின்றது.

4 அது சுய கட்டுப்பாட்டுக்காக நற்செயல்களை பயிற்சியளிக்கின்றது. மேலும் கேட்பவர்களையும் கஷ்டத்தில் இருப்பவர்களையும் சுமக்கின்றது.

5 அது ஒரு மனிதனை பாவத்தில் விழுவதை விட்டும் பாதுகாக்கும். மேலும் அதிகமான நலவுகளையும் பெற்றுத்தரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் அவன் எனக்காக சாப்பிடுவதையும் குடிப்பதையும் மேலும் அவனுடைய இச்சைகளையும் எணக்காக விட்டு விட்டான் எனவே நோன்பு என்னுடையதாகும் அதற்கு நானே கூலி வழங்குவேன் மேலும் அதனுடைய கூலிகளை பத்து மடங்காக வழங்குவேன்.».
(ஆதாரம் புகாரி).

ஹஜ்

அல்லாஹ்வுடைய ஏகத்துவம் ஹஜ் உடைய நேரத்திலே பிரதிபலிக்கின்றது. ஹஜ் வணக்கம் அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தை அதிகரிக்கின்றது. மேலும் அதில் ஈமானின் பூரணத்துவம் பிதிபலிக்கின்றது. ஒரு ஹாஜி ஹஜ் உடைய நேரத்திலே ஏகத்துவத்தை அறிவிக்கின்றான். அவன் ஹஜ்ஜை தொடங்கியதிலிருந்து யா அல்லாஹ் நான் உனக்கு அடிபணிகின்றேன் உனக்கு எந்த வித இணையும் இல்லை நான் உனக்கு அடிபணிகின்றேன் என்று கூறுவான். மாறாக அவன் ஹஜ்ஜை முடித்து விட்டு மீளும் போது அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் மீளுவான். அவன் ஏகத்துவத்தில் விழுந்தவனாகவும் அதை அறிவித்தவனாகவும் இருப்பான். ஹஜ் என்றால் அது அல்லாஹ்வுடைய இல்லத்தை ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றும் நோக்கில் நாடிச் செல்வதாகும். அல்லாஹ்விடமிருந்து வந்தது போலவும் மேலும் நபியவர்கள் ஹஜ் செய்து காட்டியதும் போன்றும் நடப்பதாகும். அது குர்ஆன் ஹதீஸீன் மூலம் அல்லாஹ்விடமிருந்து அவனின் அடியார்களுக்காக வந்த ஒரு கடமையாகும். மேலும் இஜ்மாவாலும் உறுதி செய்யப்பட்டதாகும்.

அடியார்களுடைய வாழ்க்கையில் ஹஜ்ஜின் தாக்கம்-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் கஃபாவை வளம் வருவதையும், «ஸபா மர்வாவிற்கு இடையில் ஓடுவதையும், ஜிமாராவில் ஷைத்தானுக்கு கல்லெறிவதையும் அவனுடைய ஞாபகத்திற்காக ஆக்கியுள்ளான்.».
(ஆதாரம் அஹ்மத்).

1 பாவங்களையும் குற்றங்களையும் நீக்குவதற்கான காரணமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நீ அறிந்து கொள்ளவில்லையா இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும் அதே போன்று ஹிஜ்ரத்தும் ஹஜ்ஜும் முன்னைய பாவங்களை மன்னித்துவிடும்.».(ஆதாரம் முஸ்லிம்).

2 ஹஜ் அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு அடிபணிவதாகும். மேலும் அவனுடைய குடும்பத்தை பிரிந்திருப்பதும் குழந்தைகளை விடுவதும் ஆடைகளை விடுவதுமாகும். அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு வழிப்பட்டவனாகவும் அவனுடைய ஏகத்துவத்தை அறிவித்தவனாகவும் இருப்பான். இதுதான் வழிப்படுவதிலே மிகவும் மகத்துவமானது.

3 ஹஜ் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கும் மேலும் சுவனம் நுளைவதற்கும் காரணமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கமாகும்.».(ஆதாரம் புகாரி முஸ்லிம்).

4 ஹஜ் என்பது நீதி சமத்துவம் போன்ற கோட்பாடுகளை வெளியாக்கும் ஒரு செயலாகும். அரபாவுடைய நிலையிலே ஒவ்வோறு மனிதரும் ஒரே சமநிலையில் நிற்பார்கள் அவர்களுக்கு மத்தியில் எந்த உலக குறுக்கீடுகள் வந்தாலும் அவர்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை. அவர்களிடம் அல்லாஹ்வுடைய பயபக்தியிலும் ஏகத்துவத்திலுமே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

5 ஒருவருக்கு ஒருவர் உதவி ஒத்தாசைகள் செய்து கொள்ளுதல் பரஸ்பரத்துடன் நடந்து கொள்ளுதல் போன்றவைகள் ஹஜ்ஜுடைய நேரத்தில் உறுதிப்படுத்தப்படுகின்றது. எந்தளவுக்கு என்றால் அறிமுகங்கள் பலப்படுகின்றது கலந்து ஆலோசனைகள் நிறைவு பெறுகின்றன கருத்துப் பறிமாற்றங்களும் நடைபெறுகின்றது. மேலும் இது சமூக எழுச்சிக்கு வித்திடுவதைப் போன்று தலைமைத்துவ அந்தஸ்துகளும் உயர்வடைகின்றன.

6 ஹஜ் மனத்தூய்மையின் பக்கமும் ஏகத்துவத்தின் பக்கமும் அழைக்கும். இதன் பின்னர் அவருடைய வாழ்க்கை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் ஒருமைப்படுத்தவும் முடியாது மேலும் அவனைத் தவிர வேறு யாரையும் அழைக்கவும் முடியாது.Tags: