2 ஆதரவு வைத்தல்

 2 ஆதரவு வைத்தல்

2 ஆதரவு வைத்தல்

நபியவர்கள் கூறினார்கள் இலேசாக்குங்கள் கஷ்டப்படுத்தாதீர்கள் மேலும் நன்மாராயம் கூறுங்கள் விரட்டாதீர்கள் ஆதாரம் புகாரி

அதனுடைய விளக்கம்

ஆதரவு என்றால்

அல்லாஹ் இருப்பதையும் அவனுடைய சிறப்பையும் அவனுடைய அருட்கொடையையும் உணர்த்துதல் அவனுடைய சங்கையையும் கொடையையும் வெளிப்படுத்துவதின் மூலம் ஆறுதலடைதல். மேலும் அதில் உறுதி கொள்ளுதல். யார் நேரான வழியில் உள்ளாரோ அவரை அல்லாஹ் அவனின் பக்கமும் சுவர்க்கத்தின் பக்கமும் திருப்புகின்றான்

அல்லாஹ் கூறுகின்றான் {யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.}[ஸூரதுன் நிஸா 110]

அதனுடைய வகைகள்

ஆதரவு வைத்தல் மூன்று வகைப்படும் அதில் இரண்டு வகை புகழப்படக்கூடியது மற்றது ஏமாற்றக் கூடியதும் இகழப்படக்கூடியதுமாகும்.

1 ஆதரவு வைப்பது-அல்லாஹ்வுடைய கூலியை எதிர் பார்த்தவராக அல்லாஹ்விடமிருந்து வரும் ஒழியினால் அவனை வழிப்பட்டு அமல் செய்தல்.

2 ஆதரவு வைப்பது- ஒருவன் ஒரு பாவத்தைச் செய்து பின்னர் அந்தப் பாவத்திற்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கிடைக்க வேண்டும் என்றும் மேலும் அந்தப் பாவத்தை அழித்து விட வேண்டும் என்றும் மேலும் அதை திரையிட்டு மறைத்து விட வேண்டும் என்றும் ஆதரவு வைத்தவனாக தவ்பா செய்தல்.

3 பாவங்களையும் கெட்ட விடயங்களையும் எல்லை மீறி செய்யும் ஒருவன் அல்லாஹ்வுடைய அருளையும் பாவ மன்னிப்பையும் எந்த அமலும் இல்லாமல் எதிர்பார்க்கின்றவன். அது ஏமாற்றுதலும் மேலென்னம் வைப்பதும் மேலும் பொய்யான எதிர்ப்பார்ப்புமாகும். ஒரு போதும் இது புகழத்தக்க ஆதரவாக கருதப்படாது. முஃமீன்களின் ஆதரவு அது அமலுடன் சேர்ந்ததாகக் காணப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்}[ஸூரதுல் பகரா 218]

அதன் படித்தரங்கள்

ஆதரவு வைத்தலுக்கு சில படித்தரங்கள் உள்ளன. அவை ஒருவருக்கொருவர் மாறுபடும். அவை வருமாறு:

1 வணக்க வழிப்படாடுகள் செய்வதற்கான முயற்சியை தூண்டுகின்றது வணக்கத்தை மேற் கொள்ளக்கூடியவர்களுக்கு அது கஷ்டமானதாக இருந்தாலும் இன்பத்தைப் பெற்றுத்தருகின்றது. அது தீய பாவ காரியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.

2 தனது படைத்த இறைவனை விட்டும் திசை திருப்பக்கூடிய உள்ளம் சார்ந்த அம்சங்கள் பழக்க வழக்கம் போன்றவற்றை விட்டுவிடுவதில் முயற்சியாளர்களின் ஆதரவு

3 உள்ளங்களால் ஆதரவு வைக்கக்கூடயவர்கள்- அல்லாஹ்வை அன்பு வைப்பதுடன் அவனை சந்திப்பதற்கும் ஆதரவு வைத்தல் மேலும் அவனுடன் உள்ளத்தை ஒன்று படுத்துதல். இந்த ஆதரவு ஆதரவுகளில் சிறந்ததும் தாழ்ந்ததும் ஆகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!}.
[ஸூரதுல் கஹ்ப் 110]

மேலும் கூறுகின்றான் {யார் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக்கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.}.
[ஸூரதுல் அன்கபூத் 5]

யார் ஒன்றை ஆதரவு வைக்கின்றாரோ அதை அவர் கேட்கட்டும்

அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிவதற்கான தொடர்பு

ஆதரவு வைக்கக்கூடிய ஒருவன் தொடர்ந்தும் வழிப்பட்டவனாக இருப்பான். ஈமானை வேண்டியவனாகவும் இருப்பான். அல்லாஹ்விடமிருந்து விலகமாட்டான் மேலும் அவனுடைய அமல்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பான். மேலும் அவனுடைய கூலிகளை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பான். அவனுக்கு முடியுமான காரணங்களுக்காக செலவலிக்கின்றான். அவனுடைய இறைவனின் அருளை எதிர் பார்த்தவனாக அவன் செலவலிக்கின்றான். அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்பகளையும் அறிந்து கொள்வதற்காகவுமாகும். மென்மையான, சங்கையான, நன்றி செலுத்தக்கூடிய இரக்கமுல்ல, மன்னிக்கக்கூடிய, அன்பான ஒருவனுடன் ஒப்பந்தம் செய்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்கின்றான். அவன் இந்த உலகத்தில் ஒரு தாழ்ந்தவன் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ்விடமிருந்து வரும் உதவி தேவை என்பதையும் அவன் அறிந்துள்ளான்.

ஆதரவு வைப்பதன் பிரதிபலன்கள்

1 ஆதரவு வைப்பவருக்கு அமல்களை மேற்கொள்ளுவதற்கும் வழிப்படுவதற்குமான முயற்சி வளரும்.

2 அவருடைய நிலமைகள் மாற்றமடைந்தாலும் இருக்கமடைந்தாலும் அவருக்கு தொடர்ந்தும் வழிப்படுவதற்கான வாய்ப்பு அமைகின்றது.

3 தொடர்ந்தும் அல்லாஹ்வை முன்னோக்கக்கூடியவனாகவும் மேலும் மன திருப்தியும் மென்மையான முறையில் கேட்பது மேலும் அதில் அவசரப்படுபவனாகவும் ஆக்குகின்றது.

4 வணக்கங்கள், இடர்பாடுகள், தேவைகள் போன்றவை ஒரு அடியானுக்கு அவனுடைய இறைவனிடத்தில் வெளியாகின்றது. அல்லாஹ் கண்சிமிட்டும் நேரத்தில் அவனுடைய உபகாரத்தையும் சிறப்பையும் தேவையற்று ஆக்கிவிடுவான்.

5 அல்லாஹ் இருப்பதை அறிந்து உறுதி கொள்ளுதலும் மேலும் அவனை சங்கைப்படுத்துவதும். யார் கேட்கின்றானோ அவனுக்கு கொடையாக கொடுப்பவன் மேலும் கொடுக்கும் நேரத்தில் விசாலமாக கொடுப்பவன். மேலும் அவனிடம் கேட்கின்றவர்களையும் ஒதுங்குகின்றவர்களையும் அவன் விரும்புகின்றவன்.

6 ஆதரவு வைப்பது ஒரு அடியான் அல்லாஹ்வுடைய இரக்கத்தை உயர்த்துகின்றான் மேலும் அதனுடைய பூரணத்துவத்தையும் கொடுக்கின்றான். அவனுடைய ஆதரவுகள் அதிகரிக்கும் போது அவன் விரும்புவதை அடைந்து கொள்கின்றான். அவனுடைய அன்பு அதிகரிக்கும் போது அவனுக்கு நன்றி செலுத்துகின்றான் மேலும் அவனுடைய பொருத்தத்தை அடைந்து கொள்கின்றான். இதுதான் வேண்டப்படுவதும் மேலும் வணக்கத்தின் தூண்களுமாகும்.

ஆதரவு வைக்கக்கூடியவன் தொடர்ந்தும் ஆசை உள்ளவனாகவும் பயந்தவனாகவும் அல்லாஹ்வுடைய அருட்கொடையை பூரணப்படுத்தியவனாகவும் அல்லாஹ்வின் மீது நல்லென்னம் உடையவனாகவும் உள்ளான். ஒரு முஃமின் அவனது இறைவன் மீது நல்லென்னம் உடையவனாக இருப்பான். மாறாக தீயவன் அவனது இறைவன் மீது கெட்டென்னம் உடையவனாக இருப்பான். அவனுடைய அமலும் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வைக் கொண்டும் நல்லென்னங்களில் இருந்தும் உள்ளதுதான் நிச்சியமாக அல்லாஹ் அவனின்பால் ஒதுங்குபவருக்கு கொடுக்கத் தவருவதில்லை என்பதை அறிந்து கொள்வதாகும்.

7 ஒரு அடியானை அல்லாஹ்வுக்கு நன்றி என்ற அந்தஸ்திற்கு தூண்டக்கூடிய ஓரு ஊந்து சக்தி. அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொயைகளுக்கு நன்றி செலுத்துவதற்கு இது ஊக்கப்படுத்துகின்றது. இதுதான் அடிமைத்தனத்தின் சுருக்கம்.

8 அல்லாஹ்வுடைய பெயர் மற்றும் பண்புகளை அறிந்துகொள்ளல். அவன் அன்புடையவன், சங்கையானவன், கொடை கொடுக்கக்கூடியவன், பதிலளிக்கக்கூடியவன், அழகானவன், மேலும் தேவையற்றவன் போன்ற பண்புகளைக் கொண்டவன் இதனுடைய மகத்துவம்தான் என்ன!

9 ஆதரவு வைக்கக்கூடியதை ஒரு அடியான் அடைந்து கொள்வதற்கான காரணம். தான் விரும்பியதை அடைந்து கொள்வது மேலதிக உற்சாகம் மேலதிக கேள்விகள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றதன்மை போன்றவற்றுக்கு வழிவகுக்கின்றது. இவ்வாறுதான் ஒரு அடியான் அல்லாஹ்வை ஈமான் கொள்வதிலும் அல்லாஹ்வை நெருங்குவதிலும் தொடர் ஈடுபாட்டை காட்டிவருகின்றான்.

10 முஃமீன்கள் மறுமையில் அவர்கள் ஆதரவு வைப்பதை அடைந்து கொள்வதினால் அல்லாஹ்வைப் பார்ப்பதைக் கொண்டும், சுவர்க்கத்தைப் பெற்றக்கொள்வதைக் கொண்டும் மேலும் அவனுடைய பொருத்தத்தைக் கொண்டும் வெற்றியடைகிறான் உலகத்திலே அல்லாஹ்வை அடியார்கள் ஆதரவு வைப்பதும் மேலும் பயப்படுவதும் அவனுடைய சக்தியைக்கொண்டு நடக்கின்றது.

அதனுடைய சட்டங்களும் விழிப்பணர்வும்:

1 ஆதரவு வைப்பதாக இருந்தால் பயம் என்பது அவசியமாகும். அல்லாஹ்வை பயந்து நடக்கும் ஒரு முஃமினிடம் பயம் கட்டாயம் இருக்க வேண்டும். ஆகவே எந்த இடத்தில் அல்லாஹ்வைப் பயந்து நடக்க வேண்டுமோ அந்த இடத்தில் ஆதரவு இருக்க வேண்டும்.{உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்கு எந்த மரியாதையையும் வழங்காதிருக்கிறீர்கள்.}.
[ஸூரதுன் நூஹ் 13]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {அல்லாஹ்வின் வேதனைகளை நம்பாதோரை மன்னித்து விடுமாறு நம்பிக்கை கொண்டோருக்குக் கூறுவீராக!}.
[ஸூரதுல் ஜாஸியா 14]

அதாவது அல்லாஹ்வுடைய நிகழ்வுகளை பயப்படமாட்டார்கள் அதற்கு முன்னிருந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றை நம்பமாட்டார்கள்.

2 ஆதரவு என்பது எங்களுக்குத் தேவையான மருந்தாகும்

-உள ஆசைகள் மிகைத்து இபாதத்கள் விடுபடும் போது.

-அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் தீங்கு ஏற்படும் என்ற பயம் தனி மனிதன் மீது மிகைக்கும். மார்க்கம் குறிப்பிட்ட எல்லையை தாண்டி விடும் அவ்வாறு தாண்டிச் செல்லும் போது அதை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு முஃமீனிடத்தில் இயற்கையாகவே வரும்.

3 எதிர்ப்பார்ப்புடன் இருப்பது நிராசை அடைவதற்கு எதிரானது. நிராசை அல்லாஹ்வுடைய அருள் என்னை விட்டும் போய்விட்டதே என்று ஞாபகமூட்டிக்கொண்டே இருக்கும். இதை உள்ளத்தால் பொருத்துச் செல்ல முடியாது என்ற நிலமைக்கு இட்டுச் செல்லும். இது வழிகேட்டுக்கும் இணைவைப்பிற்கும் காரணமாக அமையும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்'' (என்றார்.)}.[ஸூரது யூஸுப் 87]

ஒரு தராசைக் கொண்டுவந்து ஒரு முஃமினுடைய பயத்தையும் ஆதரவையும் அளந்தால் இரண்டும் சமநிலையில் காணப்படும். மறுமையில் எனது நன்மைகளை எனது தந்தைக்கு கொடுக்க விரும்பமாட்டேன். ஏனென்றால் என்னுடைய தந்தையை விட எனது இறைவன்தான் எனக்குப் பெரியவன் ஆகும்.

இமாம் ஸூப்யான் அஸ்ஸவ்ரி

பயமும் ஆதரவும் இல்லாமல் ஒருவருடைய இபாதத் பூர்த்தியாகாது. பயத்தைக் கொண்டு தடுக்கப்பட்டதை தவிர்ந்து கொள்ளலாம் மேலும் ஆதரவைக் கொண்டு அதிகமாக வழிப்பட முடியும்.

இமாம் இப்னு கஸீர்



Tags: