அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:

 அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:

அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் «இஸ்லாம் 5 விடயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது அவையாவன- அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உறியவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுதல் மேலும் தொழுகையை நிலை நாட்டுதல் ஸகாத் கொடுத்தல் ஹஜ் செய்தல் நோன்பு நோற்றலுமாகும்.»
(ஆதாரம் புகாரி)

நபியவர்கள் கூறினார்கள் «நானும் எனக்கு முன்னைய நபிமார்களும் கூறிய நல்ல விடயம் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை மேலும் அவன் தனித்தவன் அவனுக்கு இணையாக யாருமில்லை ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது மேலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது அவன் அனைத்தின் மீதும் சக்தியுடையவன்.».
(ஆதாரம் திர்மதி)

மேலும் கூறினார்கள்

«அல்லாஹ்வுடைய தூதர் நூஹ் (அலை) அவர்கள் தநதை மரண வேலையில் தனது இரு புதல்வர்களுக்கும் கூறினார்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற கலிமாவை மொழியுமாறு நான் உனக்கு கட்டளை இடுகின்றேன். ஏழு வானங்கள் மற்றும் ஏழு பூமிகளையும் ஒரு தட்டிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற கலிமாவை ஒரு தட்டிலும் வைத்தால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற கலிமா உள்ள பக்கம் கனத்து விடும். ஏழு வானங்களும் மற்றும் ஏழு பூமிகளும் எதுவுமே ஊடுருவ முடியாத வட்டமாக இருந்தாலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற கலிமா அதை உடைத்து விடும்.».
(ஆதாரம் புகாரி)

அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்ற வார்த்தையால் அல்லாஹ் சுவர்க்கத்தை அழகு படுத்துகின்றான். மேலும் நெருப்பை அதிகரித்துள்ளான்.

அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்ற வார்த்தைக்கான நிபந்தனைகள்

1 அறிவு அதன் பொருள்:

இந்த வார்த்தையை கூறுபவன் அதனுடைய கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வை உறுதிப்படுத்தி அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை தடுப்பதை உள்ளடக்குகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்பதை அறிந்து கொள்வீராக! }.[ஸூரது முஹம்மத் 19]

2 உறுதி:

அதனுடைய கருத்து இந்த சொல்லை சொல்லுபவனுடைய உள்ளத்தில் சந்தேகம் அல்லது அவை போன்றவையோ விழக்கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான் { அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்}.
[ஸூரதுல் ஹூஜ்ராத் 15]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் யார் எவ்வித சந்தேகமும் இல்லாமல் சாட்சி சொல்கிறாரோ அவர் சுவர்க்கத்தில் நுளைந்தவராக அல்லாஹ்வை சந்திப்பார்.».
(ஆதாரம் முஸ்லிம்)

3 உள்ளத்தின் மூலமும் நாவின் மூலமும் இந்த சொல்லை ஏற்றுக் கொள்ளுதல்:

ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் கருத்து மறுப்பதற்கும் பெறுமையடிப்பதற்கும் எதிர் கருத்தாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம். "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.}.[ஸூரது ஸாப்பாத் 34-35]

4 அதில் அறிவித்ததை ஏற்றுக்கொள்ளல்:

அதனுடைய கருத்து ஒரு அடியான் அல்லாஹ் ஏவியவாறு அமல் செய்யக்கூடியவனாக இருத்தல் வேண்டும். அவன் தடுத்ததை தவிர்ந்து கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் {நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.}.[ஸூரது லுக்மான் 22]

உண்மையிலே அடிமைத்துவம் என்பது அது உள்ளத்திலும் அவனை வணங்குவதிலும் அந்த அடிமைத்துவம் எற்படுகின்றது. யார் அவனை வணங்கி அவனுக்கு அடிமைப்படுகின்றானோ அவனே உண்மையான அடியானாகும்.

5 உண்மை:

அதனுடைய கருத்து சொல்லக்கூடிய ஒருவன் உள்ளத்தால் உண்மையாக சொல்ல வேண்டும். அவனுடைய உள்ளமும் நாவும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.}.
[ஸூரதுல் பகரா 8-9]

6 உளத்தூய்மை

இந்த சொல்லைக் கொண்டு அலலாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.}.[ஸூரதுல் பகரா 165]

7 இரக்கம் இந்த வார்த்தை நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அமல்கள் செய்யக்கூடியவர்களுக்கே இது பாவிக்கப்படுகின்றது. மேலும் அதை முறிப்பவர்களுடன் அல்லாஹ் கோவம் கொள்கிறான்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். }.
[ஸூரதுல் பகரா 165]

அல்லாஹ்வுடனான அன்பு அதிகரிக்கும் போது அவர்களுடைய வணக்கங்களும் சுதந்திரமும் அதிகரிக்கும்.

இது அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன் கருத்தாகும். அதற்குறிய நிபந்தனைகள் அல்லாஹ்விடத்தில் வெற்றிக்குக் காரணமாக அமையும். ஹஸனுல் பஸரி ரஹ் அவர்களிடம் கூறப்பட்டது சில மனிதர்கள் அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்று கூறினால் சுவனம் நுளைந்து விடுவார் என்று கூறுகிறார்களே அதற்கவர் யார் அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்று கூறி அதனுடைய உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றுகிராரோ அவர் சுவர்க்கம் நுளைவார் என்று கூறினார்.

அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்று கூறுவது மாத்திரம் ஒருவனுக்கு பிரயோசனம் அளிக்காது மாறாக அவன் அதனுடைய நிபந்தனைகளுக்கு ஏற்ப அமலும் செய்ய வேண்டும். மேலே கூறியது போன்று எவன் ஒருவன் அமலை விட்டு விட்டு மொழிகிறானோ அவனுடைய மொழிதல் அவன் அமல் என்ற வார்த்தையை நெருங்கும்வரைக்கும் பிரயோசனம் அளிக்காது.

அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்ற வார்த்தையை முறிக்கக்கூடியது.

1 இனை வைப்பது- அதைக் கொண்டு நாடுவது

பெரிய இணைவைப்பையாகும் இது மார்க்கத்தை விட்டும் வெளியாக்கிவிடும். யார் இதிலே மரணிக்கிறாரோ அவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அது அல்லாஹ்வுக்கு வணங்குவதிலும் இறட்சித்தலிலும் மேலும் பெயரிலும் குணத்திலும் இணையாக ஆக்குவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்{தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.}.[ஸூரது நிஸா 116]

அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆக் கேட்பது ஒருவருக்கு அவசியமாகும். ஏவப்பட்டவாறு அனுமதிக்கப்பட்டவாறு துஆ இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வார்த்தையிலிருந்து இதை கண்டுகொள்ள முடியும். {அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்}.[ஸூரது அஃராப் 180]

இமாம் அபூ ஹனீபா ரஹ்

மேலும் கூறுகின்றான் {"நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது}.[ஸூரது ஸுமர் 65-66]

2 யார் அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் மத்தியில் தரகர் ஒருவரை உருவாக்கி அவனிடம் துஆ கேட்பது அவர்களிடம் புகழிடம் கேட்பது அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இபாதத்தைக் கொண்டு அவனை நெருங்குதல் போன்றவையை ஆக்குவது வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கோட்பாட்டை உடைத்துவிடும்

3 யார் இணைவைப்பவர்களை நிராகரிக்கவில்லையோ அல்லது அவர்களுடைய நிராகரிப்பு போக்கை சரி என்று ஏற்றுக் கொண்டாலோ நிச்சியமாக அவன் இஸ்லாத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை பொருந்திக் கொள்ளாத சமூகத்தின் மீது சந்தேகத்தில் உள்ளான். யார் அல்லாஹ் அல்லாதவரை வணங்குவதிலோ அல்லது வணக்க வழிபாடுகளில் சிலவற்றை செலுத்துவதிலோ சந்தேகம் கொண்டால் அல்லது யூதர்கள், கிரஸ்தவர்கள், மற்றும் சிலை வணங்கிகளின் இணை வைப்பிலே சந்தேகப்பட்டால் அல்லது அவர்கள் நரகில் இருப்பதை சந்தேகப்பட்டால் இணைவைப்பாளர்களின் நிராகரிக்கப்பட்ட செயல்கள் என்று ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை சரி என்று சொன்னாலோ அவன் நிராகரித்து விட்டான்.

4 நபியுடைய நேர்வழியை விட ஏனைய நேர்வழிதான் பூரணமானது என்றும் மேலும் அவருடைய சட்டத்தை விட ஏனைய சட்டங்கள்தான் சிறந்தது என்றும் யார் நம்புகின்றாரோ அவர் நிராகரித்துவிட்டார். அவர்கள் இஸ்லாத்தின் மார்க்க சட்டத்தை விட அவர்களுடைய பரம்பரை சட்டங்களை சிறப்பிப்பார்கள். அல்லது அவர்களுடைய சட்டங்கள் கூடுமென்று ஏற்றுக் கொள்வார்கள் . அல்லது அது இஸ்லாமிய சட்டத்தை போன்றது என்று நினைப்பது இவை அனைத்தும் அல்லாஹ்வை நிராகரிப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.}.[ஸூரதுல் மாஇதா 44]

மேலும் கூறுகின்றான் {முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்}.[ஸூரது நிஸா 65]

5 ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததை வெறுத்து அமல் செய்கின்றானோ அவன் நிராகரித்து விட்டான். மேலும் யார் தொழுகையை வெறுத்து அமல் செய்கிறாரோ அவர் நிராகரித்து விட்டார். ஏனென்றால் அவன் அல்லாஹ்வுடைய கட்டளைகளை விரும்பமாட்டான். வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்ற வார்த்தையின் நிபந்தனைகளில் ஒன்றுதான் அல்லாஹ்விடமிருந்து வந்த அனைத்தையும் அன்பு வைப்பதாகும். ரஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததை வெறுக்கின்றாரோ அவர் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்ற கருத்தை அவர் உண்மைப்படுத்தவில்லை. அவர் கொண்டு வந்த அனைத்தும் சாந்தியை வேண்டி நிற்கின்றது. மேலும் உள்ளம் அதைக் கொண்டு விரிவடைகின்றது.

6 யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் சிலதை அல்லது தண்டனைகளை கூலிகளை பரிகசிக்கின்றாரோ அவர் நிராகரித்து விட்டார். ஏனென்றால் அவர் இந்த மார்கத்தை கண்ணியப்படுத்தவில்லை எனவே அவர் மீது மார்கத்தை கண்ணியப்படுத்துவதும் மேலும் அதைக் கொண்டு வந்தவரை கண்ணியப்படுத்துவதும் கடமையாகும். எனவே அல்லாஹ் சில சட்டங்களை மனிதர்களுக்கு வைத்தான்- அவர்கள் முஃமீன்களாக இருந்தார்கள்- எனவே சிவர் ரஸூல் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய தோழர்களையும் நிரகாரித்து பரிகசித்தனர்.

அல்லாஹ் பின்வருமாறு கூறிகின்றான் {அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக! சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள். }.
[ஸூரதுத் தவ்பா 65-66]

ஆரம்பத்தில் முஃமீன்களாக இருந்து கொண்டு நிராகரிப்பு செய்பவர்களுக்கான அல்லாஹ்வின் சட்டம்

அல்லாஹ் கூறுகின்றான்.{ நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள்}[ஸூரதுத் தவ்பா 66]

ஆரம்பத்தில் கூறியதை கூறுவதற்கு முன் அவர்களுக்கு ஈமான் உறுதியாக்கப்பட்டு விட்டது. கேளிக்கைக்காகவும் பரிகாசத்திற்காகவும் விளையாட்டிற்காகவும் அவர்கள் அதைக் கூறி நிராகரித்து விட்டார்கள். அதைக் கொண்டு அவர்கள் சிக்களான பாதையை துண்டிக்க நாடினார்கள்.

7 சூனியம்:

அது ஒரு உறுதியாகும் மேலும் ஒரு முடிச்சாகும் அது உள்ளத்திலும் உடம்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அதன் மூலம் கொலை செய்யவும் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை உண்டு பண்ணவும் முடியும். இது ஒரு நிராகரிப்பாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {"இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.}.[ஸூரதுல் பகரா 102]

அதாவது பங்கு

அதற்கு முன் கூறுகின்றான் { எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை}.[ஸூரதுல் பகரா 102]

மேலும் நபியவர்கள் கூறுகினார்கள் «அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஒடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)».(ஆதாரம் புகாரி)

மேலும் கூறுகினார் «யார் ஒரு முடிச்சை ஊதுகின்றாரோ அவர் சூனியம் செய்தவராவார். யார் சூனியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராவார். யார் கழுத்தில் ஏதாவது தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுகின்றார்.».
(ஆதாரம் நஸஈ)

சூனியத்தில் நின்றும் உள்ளதுதான் நட்சத்திரத்தைக் கொண்டு சூனியம் பார்ப்பது. பூமியின் நிலமைகளைக் கொண்டு கோள்களின் மூலம் வழி பார்ப்பதாகும்.

அபூ தாவுத் (ரழி) அறிவிக்கிறார்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக கூறகிறார்கள் «யார் வான சாஸ்திரத்தை அறிந்துள்ளாரோ அவர் சூனியத்தின் ஒரு பகுதியை அறிந்துள்ளார் அது அதிகரித்துக் கொண்டே செல்லும்.».
(ஆதாரம் பைஹகிி)

அல்லாஹ் கூறுகின்றான் {அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)}.[ஸூரது தாஹா 65]

சூனியத்தில் நின்றும் உள்ளதுதான் திசை திருப்பி இரக்கத்தை ஏற்படுத்துதல் அன்பு செலுத்தக்கூடிய இருவருக்கு மத்தியில் பிரித்து அவர்கள் இருவருடைய அன்பையும் வேறு சிலருக்கு திருப்புதல்.

பிரயோசனமான அறிவு ஒரு அடியான் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை சுமந்திருப்பதாகும். மற்றும் மனிதாபிமான முறையில் பணிவிடை செய்வதும். மேலும் அவர்களுக்கு உபகாரம் செய்வதுமாகும். மோசமான அறிவு இணை வைப்பை சுமந்திருப்பதும் மேலும் மனிதனுக்கு தீங்கிலைப்பதும் அவனுக்கு நோவினை செய்வதுமாகும்.

8 இணைவைப்பாளர்களின் வெளிப்பாடும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான உதவியும். அதைப் பற்றி கீழே கூறப்படுகின்றது

அல்லாஹ் கூறுகின்றான்

{உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே.}.[ஸூரதுல் மாஇதா 51]

ஒத்துப்போகக்கூடாத விடயத்தில் ஒத்துப்போகுதல் – சேர்ந்து செல்லுதல் என்றால் அவர்கள் பக்கம் சாய்தல் தோழமை கொள்ளுதல் இரக்கம் வைத்தல் போன்றவை இணைவைத்தலுக்கு உட்பட்ட பெரிய பாவங்களாகும். சேர்ந்து நடத்தல் என்பது முஸ்லிம்களுக்கு எதிராக உதவி செய்தலும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்வதுமாகும். நயவஞ்சகர்களைப் போலவாகும். உலக விடயங்களை இணைவைப்பவர்கள் பொருப்பேற்றால் அவர்களுடைய தோழர்கள் கடும் அபாயமானவர்களாக இருப்பார்கள்.

9 முஹம்மத் (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தை விட்டும் வெளியேறுவதற்கு யார் நினைக்கிறாரோ அவர் நிராகரித்து விட்டார். அனைத்து மார்க்கங்களும் இல்லாமாக்கப்பட்டு முஹம்மத் ஸல் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இருந்தாலே அல்லாஹ் அவனை ஏற்றுக் கொள்கிறான்.

அல்லாஹ் கூறுகின்றான் { அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே.}.
[ஸூரது ஆலு இம்ரான் 19]

மேலும் கூறுகின்றான் {இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.}.
[ஸூரது ஆலு இம்ரான் 85]

மேலும் கூறுகின்றான் { "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!}.[ஸூரது ஆலு இம்ரான் 31-32]

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.».
(ஆதாரம் முஸ்லிம்)

முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய –அவர்களிடமிருந்த- நேசர்கள் மடைமயினால் வெளியாகிச் சென்றதற்கான உதாரணங்கள் இது நிராகரிப்பதற்கு நெருங்கியதாகும். மேலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும்.

உள்ளம் சீறாக இல்லையென்றால் அல்லாஹ்வை விட்டும் பிரண்டு அவனை புறக்கனிப்பான். அவன் இணைவைப்பாளனாக ஆகிவிடுவான்

10 யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புறக்கனிக்கிறானோ மேலும் அதைக் கொண்டு அமல் செய்யவில்லயோ அவன் நிராகரித்தவன் ஆவான். மொத்தமாக யார் அதைக் கொண்டு அமல் செய்வதை புறக்கனிக்கிறாரோ அவனை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன் அவன் நிராகரிப்பிலே இருப்பான். அவனை இஸ்லாத்திற்கோ அல்லது அதை கற்பதற்கோ அழைக்கப்பட்டு அவன் மறுத்தால் அல்லது அதை கற்று ஏற்றுக் கொண்டு அமல் செய்யாமல் மறுத்தால் அவன் நிராகரித்து விட்டான்.

தொடர்ந்து ஒரு விடயத்தில் ஈடுபடுபவன் தோழ்வி அடைந்தவர் மேலும் பயந்தவர் இவர்கள் வேண்டுமென்றே செய்வதனால் இவர்களுக்கு இடையில் இஸ்லாத்தை விட்டும் தூரமாகுவதில் எந்தவித வேறுபாடும் இல்லை. கடுமையாக வெறுப்பவனைத் தவிர அவர்கள் நாவினால் மட்டுமே பதிலளிப்பார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் {மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.}
[ஸூரது நஹ்ல் 106]

யார் நிராகரிப்பை வெறுத்து பின்னர் அதை பொருந்தியவாறு செய்கிறாரோ அவர் நிராகரித்து விட்டார். நிச்சியமாக அதைக் கொண்டு உள்ளம் விரிவடையும். மேலும் யார் ஈமான் கொண்டு அவனுடைய ஆத்மாவை அமைதிப்படுத்தியதுடன் மரணத்தின் அபாயத்தை தடுப்பதற்காக செய்கிறானோ அவன் தப்பி விட்டான். அதில் பிரச்சினை இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான்

{அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர}.[ஸூரது ஆலு இம்ரான் 28]

அறிவு என்பது பழம் தரக்கூடிய மரத்தைப் போன்றது அதில் அனைத்து நற்செயலும் அழகாக இருக்கும், நல்லமல்களும் இருக்கும் மற்றும் புகழப்படக்கூடிய வர்ணனைகளும் இருக்கும். மடமை என்பது பழம் தரக்கூடிய மரத்தைப் போல அதில் கெட்ட குணங்கள் இருக்கும், மேலும் இகழப்படக்கூடிய வர்ணணைகளும் இருக்கும்.

Tags: