அல்லாஹ் அடக்கியாளக்கூடியவன்....

 அல்லாஹ் அடக்கியாளக்கூடியவன்....

அல்லாஹ் அடக்கியாளக்கூடியவன்....

அல்லாஹ் அவன் அடக்கியாளக்கூடியவன்...

{அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்} [ஸூரதுல் ஹஷ்ர் 23]

அடக்கியாளக்கூடியவன்...

நோவினைப்படுபவருக்கு ஆருதல் அளிப்பவனும் கைதிக்கு உதவியளிப்பவனும் ஏழையினுடைய ஏழ்மையை போக்குபவனும் கஷ்டப்டக்கூடியவனின் கஷ்டங்களை நீக்குபவனும் பாவம் செய்து விட்டு பாவமன்னிப்ப கேட்பவர்களை மன்னிப்பவனும் தண்டணைக்குறியவனை விடுவிப்பவனும் தனக்குப் பயந்து தன்னை அதிகமாக நேசிக்கும் உள்ளங்களை ஆதரிப்பவனுமாகும்.

அடக்கியாளக்கூடியவன்....

அவனுடைய உயர்வு பூர்த்தியடைகின்றது மேலும் அவனுடைய அருள் அனைத்துக்கும் மகத்துவமாகின்றது.

உயருள்ளவன் அவனுக்கே உரிய பண்புகளை ஒன்றுபடுத்தியவனாகவும் மேலும் நிலைத்திருக்கக்கூடிவன் என்ற பண்பை ஒன்றுபடுத்தியவனாகவும் இருக்கின்றான்.

அடக்கியாளக்கூடியவன்...

அனைத்தும் விடயங்களும் அவனுக்கு நெருங்குகி அடிபணிகின்றது. ஒரு விடயம் அவனை இன்னுமொறு விடயத்தை விட்டும் பராமுகமாக்காது.

அடக்கியாளக்கூடியவன்...

அடக்கியாளும் தன்மையை உடையவனும் அரசாட்சி, ராஜ்யம், மகத்துவம் புகழ் போன்றவற்றுக்கும் உரியவனுமாகும்.

அடக்கியாளக்கூடியவன்....

அதிகாரம் இருக்கும் அனைவரும் அவனுக்கு முன்னால் தாழ்ந்து விடுவார்கள். பெரும் பெரும் தலைகள் கூட அவனுக்கு முன்னால் சுக்கு நூராகிவிடும் பல அரசர்களும் பல கண்ணியமானவர்களும் அவனுக்கு முன்னால் சிறுமை அடந்து விடுவார்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் அவனுக்கு முன்னால் நொந்து போவார்கள்

நிச்சியமாக அல்லாஹ் அடக்கியாளக்கூடியவன்...

அடக்கியாளக்கூடியவன்.. என்றால் மிகவும் உயர்ந்தவன் என்று கருத்தாகும். மேலும் அடக்கியாளக்கூடியவன் என்ற கருத்தும் காணப்படுகின்றது. மற்றும் இரக்கமுள்ளவன் என்ற கருத்தும் உள்ளது. அவன் உடைந்த உள்ளங்களுக்கும் பலகீனமானவர்களுக்கும் இரக்கம் காட்டக்கூடியவன். யார் அவன் பக்கம் ஒதுங்குகின்றாரோ அவருக்கும் இரக்கம் காட்டக்கூடியவன்.

Tags: