அல்லாஹ்வே கொடை கொடுக்கக்கூடியவன்...

 அல்லாஹ்வே கொடை கொடுக்கக்கூடியவன்...

அல்லாஹ்வே கொடை கொடுக்கக்கூடியவன்...

நிச்சியமாக அவன் அல்லாஹ் அவனே கொடை கொடுக்கக்கூடியவன்...

அருள் வழங்ககக்கூடியவனே.... நம்பிக்கை வழங்ககக்கூடியவனே.... உபகாரம் வழங்ககக்கூடியவனே....

எனக்கு பொருத்தத்தை தருவாயாக.... எனக்கு பாதுகாப்பை தருவாயாக.... எனக்கு இரக்கத்தையும் சந்தோசத்தையும் தருவாயாக....

எங்கள் மீது கொடையை வாரி வழங்குவாயாக எங்களை கண்ணியப்படுத்துவாயாக நீயே சிறப்பிப்பதற்கும் கொடை வழங்குவதற்கும் தகுதியானவன்.

{எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.}.

[ஸூரது ஆலு இம்ரான் 8]

«அல்லாஹ் சங்கையானவன் அவன் கொடையையும் உயர்ந்த நற்குணங்களையும் விரும்புகின்றான். மேலும் அதை முட்டாள் தனமாக பயன்படுத்துபவர்களுடன் கோவப்படுகின்றான்.». (ஆதாரம் திர்மிதி)

கொடையாளன்....

அவன் நாடியவர்களுக்கு கொடுப்பான் மேலும் அவன் நாடியவர்களுக்கு அதை தடுத்துவிடுவான்.

கொடை....

எல்லையின்றி கொடுக்கக்கூடியவன் அதனுடைய சிறப்பு மறுக்கப்படாது அவன் சிலவற்றுக்கு கூறுவான்

{'ஆகு'என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.} [ஸூரதுல் பகரா 117]

கொடையாளன்....

அல்லாஹ் உணர்வு ரீதியான வாழ்வாதரத்தையும் மேலும் கருத்து ரீதியான வாழ்வாகரத்தையும் வழங்குகின்றான். மேலும் அதைக் கொண்டு சங்கையையும் கொடையையும் வழங்குகின்றான்.

எனவேதான் அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு நல்லெண்ணங்கள், பிரயோசனமான எண்ணங்கள் மேலும் அறிவு நல்வழி ஆசிர்வாதம் துஆவை ஏற்றக்கொள்ளுதல் போன்றவைகளை வைத்திருக்கின்றான். எனவே இவைகளும் இவை அல்லாதவைகளும் கருத்து ரீதியான வாழ்வாதரங்களாகும். அல்லாஹ் அதிகமான மனிதர்களுக்கு இதைக் கொடுத்துள்ளான்.

கொடையாளன்...

அவன் கொடுத்தான் தடுத்தான் மேலும் உயர்த்தினான் தாழ்த்தினான் மேலும் அனுப்பினான் துண்டித்தான். அவனிடமே நலவுகள் இருக்கின்றன அவன் அனைத்தின் மீதும் சக்தியுள்ளவன்.

அல்லாஹ் அவன் கொடை கொடுப்பவன்...Tags: