அல்லாஹ் ஒருவன்...

 அல்லாஹ் ஒருவன்...

அல்லாஹ் ஒருவன்...

நிச்சியமாக அல்லாஹ் ஒருவன்...

ஒருமைப்பாட்டுள்ள தன்மையுள்ளவனும் மேலும் ஒருமைப்பாட்டு பெயர்களை பண்புகளை உடையவனுமே

தேவையற்றவன் ஒருவனே உன்னிடத்தில் நாம் மனத்தூய்மையையும் அன்பையும் ஆசைகளையும் கேட்கின்றோம்.

ஒருவன்

அவனுடைய தன்மையிலும் பெயர்களிலும் பண்புகளிலும் அவன் ஒருவனாவான். அவனுக்கு போட்டியாகவோ ஒப்பாகவோ யாருமில்லை மேலும் அவனைப் போன்றும் அவனுடைய தோற்றத்திலும் யாருமில்லை.

{அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?} [ஸூரது மர்யம் 65]

ஒருவன்

வணக்கத்திற்கு தகுதியான வணக்க கோட்பாட்டிலே ஒருவனாக இருக்கின்றான். அல்லாஹ்வே வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வுக்கு செலுத்தப்பட வேண்டிய வணக்கங்களில் குறைவாகவோ அதிகமாகவோ வேறு யாருக்கும் திருப்பக் கூடாது.

ஒருவன்

அவன் தனித்தவன் வணங்கப்படும் ஒரே இறட்சகன் அனைத்து உள்ளங்களும் அவன் தனித்தவன் என்றே சாட்சி கூறுகின்றன. பார்வைகளும் அவன் எவ்வித குறைகளும் அற்றவன் என்றே கூறுகின்றன.

ஒருவன்

அல்லாஹ் அவனுடைய அடியார்களை ஏகத்துவத்தில் இயற்கையாகவே வைத்துள்ளான். அவனுக்கு இணையாக யாருமில்லை. ஒருவன் அவனுடைய விடயத்திலே ஈர்க்கப்பட்டால் அவன் வெற்றி பெறுகின்றான். அவன் அல்லாதவர்களை வணங்காவிட்டால் அவன் சந்தோசப்படுகின்றான். அவனுக்கு இணை கற்பிக்கவில்லை என்றால் அவன் வெற்றி பெறுகின்றான்.

நிச்சியமாக அல்லாஹ் ஒருவன்

ஒருவன்... அனைத்து பூரணமான தன்மைகளிலும் அவன் ஒருமைப்படுத்தப்படுகின்றான். அவனுக்கு எந்தக் கூட்டும் இணையாக சேர்க்கப்படமாட்டாது. எனவே ஒரு அடியான் அல்லாஹ்வை சொல்லாலும் செயலாலும் புத்தியாலும் ஒருமைப்படுத்த வேண்டும். அவனுடைய பொதுவான பூரணமான விடயங்களைக் கொண்டு அவனை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். மேலும் அவனை வணக்கத்தின் வகைகளைக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும்.

Tags: