2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:

 2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:

2 இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள்:

உலகம் அனைத்தும் தலைமையகமாகும் மேலும் உண்மையானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது மேலும் ஒரு முஃமீன் அல்லாஹ் இருப்பதை மொழிகின்றான்.

{"வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர். "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!'' என்று அவர்கள் கேட்டனர்.}
[ஸூரது இப்ராஹிம் 10].

அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆதாரம் வைத்திருக்கின்றானே அவனைப் பற்றி எவ்வாறு ஆதாரம் கேட்க முடியும்.

இறைவன் இருப்பதற்கான ஆதாரத்தை மறுத்தால் கீழ் வரும் ஆதரங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்

ஒரு முஃமின்- அல்லாஹ்தான் சக்திவாய்ந்த இறைவன் என்பதை ஏற்றுக் கொள்வான் மேலும் அவன்தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்றும் ஏற்றுக் கொள்வான். நீ அல்லாஹ்வையும் அவனுடைய அருட்கொடையையும் மேலும் அவனுடைய சிறப்பையும் தவிர வேறு ஒன்றையும் புகழ மாட்டாய் மேலும் நீ இரண்டு நிலமைகளில் அல்லாஹ்விடம் தேவை உள்ளவனாக உள்ளாய்

இயற்கையான ஆதாரம்

படைப்பினங்கள் அல்லாஹ்வின்பால் ஈமான் கொள்வதிலே உருவாக்கப்பட்டுள்ளது. யார் ஒருவன் அல்லாஹ்வை அவனுடைய புத்தியிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் துடைத்தெரிகிறானோ அவனிடமே இந்த இயற்கை திரும்பும். அல்லாஹ் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களில் மிகவும் மகத்துவமானது.

நபியவர்கள் கூறினார்கள் «ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர்.»(ஆதாரம் புகாரி).

அனைத்து படைப்பினங்களும் ஏகத்துவத்தின் இயற்கைத் தன்மையில் உறுதியாக உள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் { (முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.}[ஸூரதுர் ரூம் 30].

இவை அனைத்தும் படைத்த இறைவன் அல்லாஹ் இருப்பதற்கான அடையாளமாகும்.

அல்லாஹ் இருப்பதற்கான உயரிய ஆதாரம் இயற்கையான ஆதாரமாகும். ஷைத்தான் யாரை வழி கெடுக்கிறானோ அவனைத் தவிர எனவே அல்லாஹ் கூறுகின்றான் {இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான்.} [ஸூரதுர் ரூம் 30].

பின்னர் கூறுகின்றான்{(முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக!}[ஸூரதுர் ரூம் 30].

மனிதனுடைய சீரான இயல்பான தன்மை அல்லாஹ் இருப்பதை ஏற்றுக் கொள்வதாகும். இருந்தாலும் ஷைதான் யாரை வழிகோடுக்கிறானோ அவருக்கு இந்த விடயம் தென்படாமல் இருப்பதோடு அவர் இதைப் பற்றி உணராமலும் இருப்பார். படுபாதாலத்தில் விழுகின்ற போது அவருடைய கைகளும் கண்களும் உள்ளமும் வானத்தை நோக்கி அல்லாஹ்விடமே இயல்பான நிலையில் கேட்பதற்கு முனையும்.

அல்லாஹ் என்ற வார்த்தை ஒரு மனிதனின் இயல்பு நிலையில் கல்வெட்டுகளாக பதியப்பட்டுள்ளது. எனவே அதற்கு எவ்வித ஆதாரங்களும் தேவையில்லை.

புத்தி ரீதியான ஆதாரம்

படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கான உயரிய ஆதாரம் புத்தியால் சிந்திப்பதாகும். அதை மடையனைத் தவிர வேறு யாராலும் மறுக்க முடியாது.

புத்தி சார்ந்த ஆதாரங்களில் வருவது-

1 அனைத்து படைப்பினங்களுக்கும் ஒரு படைப்பாளன் உண்டு இந்த படைப்பினங்ளுக்கு --முந்திய அல்லது பிந்திய—ஒரு படைப்பாளியை பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவை படைப்பாளனாக பெற்றுக் கொள்ள முடியாது. தற்காலிகமாகவும் பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவை படைப்பாளனாக பெற்றுக் கொள்ள முடியாது ஏனென்றால் ஒரு பொருள் தன்னைத் தானே படைத்துக்கொள்ள முடியாது மேலும் அவன் ஆரம்பத்தில் இல்லாமல் இருந்தவன் அவன் எவ்வாறு படைப்பாளனாக முடியும். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதனை நிகழ்துபவர் இருப்பது அவசியமாகும். அந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் சீரான தோற்றத்திலும் ஒன்றொடு ஒன்று பொருந்திக் காணப்படுவதும் காரணங்களுக்கும் காரணங்களை ஏற்படுத்துவதற்கு மத்தியிலும் உலகத்தில் தோன்றக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கு மத்தியில் ஏற்படக்கூடியவையும் தற்செயலாக நடந்துள்ளது என்று மறுக்கின்றனர். ஒவ்வொரு படைப்பினத்திற்கும் படைப்பாளன் இருக்க வேண்டும். இந்தப் படைப்பினங்கள் அனைத்தும் தானாகவே உருவாகின என்ற அம்சத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கு தற்செயலாக நடைபெறும் என்ற அம்சம் இருக்காது. எனவே அகிலங்களைப் படைத்த இறைவன்தான் இதைப் படைத்திருக்கின்றான் என்பது தெளிவாகும். இதைப் பற்றித்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

{எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா?}. [ஸூரதுத் தூர் 35]

அதாவது ஒரு படைப்பாளன் இல்லாமல் எந்த படைப்பும் படைக்கப்படவில்லை. அவர்கள் அவர்களையே படைத்துக் கொள்ளவும் இல்லை. எனவே அவர்களுடைய படைப்பாளன் அல்லாஹ்வாகும். இதனால்தான் ஹூபைர் இப்னு மத்அம் கேட்ட போது நபியவர்கள் ஸூரதுத் தூரை ஓதிக்காட்டினார்கள். {எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களா?}. [ஸூரதுத் தூர் 35-37],

ஜூபைர் என்பவர் இணை வைப்பாளராக இருந்த நேரத்தில் கூறினார் «எனது உள்ளம் பறப்பதற்கு நாடுகின்றது». (ஆதாரம் புகாரி).

2 உலகத்திலும் படைப்பினங்களிலும் அல்லாஹ்வின் வெளிரங்கமான அடையாளங்கள்.

{"வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்!'' என்று கூறுவீராக!}. [ஸூரது யூனுஸ் 101],

வானங்களையும் பூமியையும் பார்த்தால் அல்லாஹ்தான் படைத்த இறைவன் என்பதை அது தெளிவுபடுத்தும். மேலும் அல்லாஹ்வின் இறைமைத் தன்மையை உறுதிப்படுத்தும். நாட்டுப்புற ஒரு அரபியிடம் நீ எப்படி இறைவனை அறிந்து கொண்டாய் என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் ஒரு கால்தடம் நடந்து செல்வதை அறிவிக்கும் ஒரு ஒட்டக்ககுட்டி ஒட்டகம் இருப்பதை அறிவிக்கும் வானம் உயர்ந்ததாகவும் பூமி விரிந்ததாகவும் கடல்கள் அலைகள் உள்ளதாகவும் காணப்படுகின்றது. இவை பார்ப்பவனும் கேட்பவனும் இருப்பதை உங்களுக்கு அறிவிக்கவில்லையா என்று கேட்டார்?!

மனித இனம் ஒரு இயலாமையில் இருக்கின்றது உலகிலே பொருளாராத ரீதியிலே அவர்களுடைய அறிவு மட்டம் சுருக்கப்பட்டிருந்தது இந்த இயலாமையை நீக்குவதற்கு அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வதே போதுமானதாக இருந்தது.

3 உலக விடயங்களை ஒழுங்குபடுத்தி அதற்கென பல சட்டங்களையும் இட்டான். இது அடக்கி ஆழ்வதற்கு ஒரு இறைவன் மற்றும் ஒரு அரசன் இருக்கிறான் என்பதற்கான ஒரு ஆதாரமாகும். படைப்பினங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை இந்த உலகத்தை பரிபாலனம் செய்வதற்கு இரண்டு கடவுல்கள் இருப்பது அபூர்வமானது. அவ்வாரே வணங்கப்படுவதற்கும் இரண்டு கடவுல்கள் இருப்பதும் அபூர்வமான விடயமாகும். இந்த உலகத்தில் ஒரே மாதிரி படைப்பதற்கு இரண்டு பேர் இருப்பதும் அபூர்வமான விடயமாகும் ஒரே மாதிரி படைக்கக்கூடியவர்கள் இரு கடவுல்கள் இவ்வுலகில் இருப்பதானது ஒருவருடைய தனித்துவத்தையும் இயல்புத்தன்மைகளையும் கடவுல்தன்மை போன்றவற்றையும் பாதிக்கின்றது.

மார்க்க ரீதியான ஆதாரம்

அனைத்து மார்க்கமும் ஒரு படைப்பாளன் இருப்பதையும் மேலும் அவனுடைய பூரணமான அறிவு, நுட்பம், அருள் போன்றவை இருப்பதையும் ஏற்றுக் கொள்கின்றது. இந்த மார்க்கத்திற்கும் ஒரு சட்டமளிப்பவர் அவசியமாகும். எனவே இந்த மார்கத்தின் சட்டமளிப்பவன் அல்லாஹ்வாகும்

அல்லாஹ் கூறுகின்றான். { மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்க அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்! ள்}
[ஸூரதுல் பகரா 21-22],

வேதங்கள் அனைத்தும் இதைத்தான் கூறுகின்றன

புத்தி ரீதியான ஆதாரம்

படைத்தவன் இருப்பதற்கான தெளிவான ஆதாரங்களில் நின்றும் உள்ளதுதான் பார்வை உள்ள அனைவரையும் தொடக்கூடிய வெளிரங்கமான பொதுவான ஆதாரமாகும்.

அவைகளில் இருந்தும் உள்ளது

1 அழைப்புக்கு பதிலழித்தல்- ஒரு மனிதன் அல்லாஹ்வை அழைக்கின்றான் அவன் கூறுகின்றான் எனது இறைவா என்று சில விடயங்களை கேட்கின்றான். அதற்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான். இது இறைவன் இருக்கின்றான் என்பதற்கான ஒரு வெளிரங்கமான அடையாளமாகும். அல்லாஹ் அவனுடைய ஆத்மாவை விட்டு விடாமல் அவனுக்கு பதிலளிக்கின்றான். இதை கண்கூடாக காண முடிகின்றது. எங்களுடைய காலங்களிலும் எங்களுக்கு முன்னைய காலங்களிலும் இவ்வாரான அதிகமான உதாரணங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். நிச்சியமாக அல்லாஹ் அவர்களுக்கு பதிலளித்தான். இது படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கான பொதுவான ஆதாரமாகும்.

குர்ஆனில் அதிகமான இடங்களில் வந்துள்ளது.

அதில் இருந்தும் உள்ளதுதான்

{"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.}. [ஸூரதுல் அன்பியா 83-84 ],

இவை அல்லாமல் அதிகமான ஆயத்துகள் உள்ளன.

நாஸ்தீகம் என்பது நினைவில் ஏற்படக்கூடிய ஒரு கோளாரும் புத்தியில் ஏற்படக்கூடிய ஒரு நோயுமாகும்.

2 படைப்பினங்களுக்கு நேர்வழி கிடைத்தால் அதனுடைய வாழ்க்கை சந்தோசமாக அமையும் யார் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து பால் குடிக்கும் நேரத்தில் நேர்வழி பெறுகிறான் ஒரு மனிதனுக்கு அவன் பிறந்த நேரத்தில் அவனுடைய தாயின் பால் மடிக்கு யார் வழி காட்டியது எந்தக் கண்ணும் பார்க்க முடியாத பூமிக்கு அடியில் இருக்கும் நீரை ஹூத்ஹூத் பறவைக்கு காட்டியது யார்

அதைத்தான் அல்லாஹ் கூறுகின்றான்

{ "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.}. [ஸூரது தாஹா 50].

3 ரஸூல்மார்களையும் நபிமார்களையும் கொண்டு அனுப்பிய அத்தாட்சிகள். அவை நபிமார்களையும் ரஸூல்மார்களையும் கொண்டு அல்லாஹ் அற்புதங்களைக் காட்டினான். மேலும் அவர்களை வேறு கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்தான். ஒவ்வொறு நபியையும் அல்லாஹ் அற்புதமாகவே அவனுடைய கூட்டாத்தாரிடம் அனுப்பினான். படைத்த ஒருவனான வணக்கத்துக்கு தகுதியான இறைவனிடத்தில் தாம் எதற்காக அனுப்பப்பட்டார்களோ அதை உருதிப்படுத்தினார்கள்.

நாஸ்தீகம் என்பது நினைவில் ஏற்படக்கூடிய ஒரு கோளாரும் புத்தியில் ஏற்படக்கூடிய ஒரு நோயுமாகும். உள்ளத்திற்கு ஒரு இருட்டாகவும் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாகவும் உள்ளது.

Tags: