3 பயம்

 3 பயம்

3 பயம்

{அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்.}
[ஸூரது ஆலு அம்ரான் 30]

அதன் விளக்கம்

பயம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த மகத்துவமான உள்ளம் சமபந்தமான விடயமாகும்.. அல்லாஹ் கூறுகின்றான் {தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!}.
[ஸூரது ஆலு இம்ரான் 175]

இந்த ஆயத்திலே அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரம் பயப்பட வேண்டும் என்று கடமையாக்கி உள்ளான். அது ஈமானின் அத்தியவசியமான ஒன்று என்பது உறுதியாகின்றது. மேலும் ஒரு முஃமினுடைய ஈமானின் அளவுதான் அல்லாஹ்வின் மீது அவனுடைய பயமும் இருக்கும்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்

«நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த ஆயத்தைப் பற்றி கேட்டேன்»
{தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் }«அவர்கள் மது அருந்தக்கூடியவர்களாகவும் களவெடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர் அதற்கு நபியவர்கள் கூறினார்கள் இல்லை அபூ பக்கரின் மகளே மாறாக அவர்கள் நோன்பு நோற்கின்றனர் தொழுகின்றனர் மேலும் உண்மை பேசக்கூடியவர்களாகவும் அவர்கள் முன்னோக்காத ஒன்றை பயப்படக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.»
(ஆதாரம் திர்மதி)

அல்லாஹ்வுக்கான பயம்

1 அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் போன்றவற்றை அறிவதனாலும் மக்கத்துவப்படுத்தவதாலும் ஏற்படுகின்றது. {தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர்.}
[ஸூரதுன் நஹ்ல் 50]

2 அல்லாஹ் வெறுக்கும் போக்குகளில் பயம் ஆகிவிடும். எனவே மோசமான ஒதுங்குமிடமான நரகத்தில் கடுமையான வேதனை அவனுக்கு உண்டு. அவர்கள் ஒதுங்குமிடம் மிகவும் கெட்டது.

3 அனைத்தும் அல்லாஹ்வுக்கு தெரியும் என்பதை அறிந்தும் மேலும் அதை அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அறிந்தும் அல்லாஹ்வுக்கு அதற்கு தண்டனை தருவதற்கு சக்தி இருக்கின்றது என்று அறிந்தும் அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளில் குறை விட்டு விட்டார்களே என்று உணர்வார்கள். இது ஒரு சிறிய பாவம் என்று கருதாமல் அதை ஒரு பெரிய பாவமாகாக் கருதி அதை செய்யாமல் விட்டு விட வேண்டும்.

4 அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எவன் புறக்கனித்து மாறுசெய்து அல்லாஹ்வையும் அவன் அனுப்பிய நபியையும் விட்டு விடுகின்றானோ அவனையும் அல்லாஹ் கடுமையாக எச்சரித்துக் கூறுகின்றான்.

5 அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ரஸூலைப் பற்றியும் மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பேசுகின்றான்.

6 அல்லாஹ்வுடைய கண்ணியத்தைப் பற்றி சிந்தித்தல். எனவே அது சிந்திப்பவர்களை அல்லாஹ்வுடைய கண்ணியத்தின் மீதும் அவனின் பெறுமையின் மீதும் விழ வைக்கும். அல்லாஹ் எச்சரித்த விடயங்களை அறிந்து அவனுடைய மகத்துவத்தை யார் உள்ளத்தால் ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வை பயந்து விட்டார் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்.}

[ஸூரது ஆலு இம்ரான் 28]

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன்.}
[ஸூரது அஸ்ஸுமர் 67]

அல்லாஹ்வைப் பயப்படுவதற்கு அவனைப் பற்றி அறிவது அவசியமாகும். மேலும் அவனைப் பற்றி அறிவதற்கு அவனைப் பயப்படுவது அவசியமாகும். மேலும் அவனைப் பயப்படுவதற்கு அவனை வழிப்படுவது அவசியமாகும்.

7 மரணத்தைப் பற்றியும் அதன் கடுமையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அது தவிர்க்க முடியாததாகும். {நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.}.[ஸூரதுல் ஜுமுஆ 8]

இது அல்லாஹ்வைப் பயப்படுவதை கடமையாக்குகின்றது

நபியவர்கள் கூறினார்கள் «ஆசைகளை உடைத்தெறியக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். யார் ஒருவர் மரணத்தை நினைவு கூறுகின்றாரோ அவர் நெருக்கடிமிக்க வாழ்க்கையிலிருந்து ஒரு நல்ல நிலமைக்கு வருவார். மேலும் அளவுக்கு மீறிய ஆசைகள் உடைந்து போகும்.». (ஆதாரம் தபரானி).

8 மரணத்திற்கு பின்னால் உள்ளவற்றையும் மேலும் கப்ரைப் பற்றியும் அதன் நிலமைகளைப் பற்றியும் சிந்தித்தல். ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்«நான் உங்களை கப்ருகளை சந்திப்பதை தடுத்திருந்தேன் நீங்கள் அதை தரிசிப்பீராக அது உங்களை உலகத்தில் பற்றட்ட தன்மையையும் மேலும் மறுமையையும் நினைவுபடுத்தும்.». (ஆதாரம் இப்னு மாஜா)

பரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் «ஒரு முறை நாம் ரஸூல் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் இருந்தோம். அவர் கப்ரின் பக்கத்தில் அமர்ந்து அடக்கம் செய்யப்படும் வரை அழுதார்கள். பின்னர் எனது சகோதரர்களே இதே போன்று உங்களுக்கும் உண்டு நீங்களும் தயார் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.».(ஆதாரம் இப்னு மாஜா)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.}.
[ஸூரது லுக்மான் 33]

9 மனிதர்கள் அற்பமாகக் கருதக்கூடிய பாவங்களுக்கான தண்டனையை சிந்தித்தல். ரஸுலுல்லாஹ் ஒரு சமூகத்தை உதாரணம் காட்டினார்கள். அவர்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி ஒவ்வொருவரும் சில பல குச்சிகளைத் தோடிக்கொண்டு வந்தார்கள். ரொட்டி சுடுவதற்கான அளவு அவர்கள் சேகரித்து வந்தார்கள். அங்கே அந்தக் குச்சிகளுக்கும் நெருப்புக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அதே போல் பாவத்திற்கும் பாவம் செய்பவர்களுடைய தோழ்கள் சுடுபடுவதற்கும் இடையில் தொடர்புகள் உள்ளன. {அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம்}.[ஸூரதுன் நிஸா 56]

10 ஒரு அடியான் அவனுக்கும் தவ்பாவுக்கும் இடையிலான நிலமை மரணம் வருவதாகும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் அவன் கைசேதப்படுவான் ஆனால் அது அவனுக்கு பிரயோசனம் அளிக்காது.

அல்லாஹ் கூறுகின்றான் { முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான்.}. [ஸூரதுல் அல் முஃமினூன் 99]

அவன் மேலும் கூறுகின்றான் { நட்டம் ஏற்படுத்தும் நாளைப் பற்றி எச்சரிப்பீராக!}.
[ஸூரது மர்யம் 39]

11 இருதி நேரத்தில் சிந்தித்தல்

அல்லாஹ் கூறுகின்றான் {மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது}.[ஸூரதுல் அன்பால் 50].

12 அல்லாஹ்வுடைய பயத்தையும் அச்சத்தையும் தேடித்தரும் அமர்வில் அமர்தல்.

அல்லாஹ் கூறுகின்றான் {தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! }.
[ஸூரதுல் கஹ்ப் 28]

அல்லாஹ்வுடைய பயம் இரண்டு விடயங்களை வேண்டி நிற்கின்றது-

அ- அவனது வேதனைகளிலிருந்து பயப்படுதல்-

இணைவைப்பாளர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் மேலும் அவனுக்கு வழிப்படாமலும் பயப்படாமலும் அவனுக்கு மாறு செய்து கொண்டும் இருப்பவர்களுக்கு கடுமையாக வாக்கழிக்கப்பட்டுள்ளது.

ஆ- அல்லாஹ்வைப் பயப்படுதல்

அல்லாஹ்வை அறிந்தவர்களும் மேலும் உலமாக்களும் பயப்படுவதாகும். {அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்.}.
[ஸூரது ஆலு இம்ரான் 28]

அல்லாஹ்வை அறிந்து கொள்வது அதிகரிக்கும் போது அவன் மீது இருக்கும் பயமும் அதிகரிக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. }.
[ஸூரது ஃபாதிர் 28]

அவனுடைய இரட்சகனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் முழுமையாக அறிந்து கொள்ளும் போது அதன் தாக்கமாக அவன் மீது பயம் ஏற்படுகின்றது.

அல்லாஹ்வை பயப்படுவதினால் ஏற்படும் பிரயோசனங்கள்-

அ- இவ்வுலக பிரயோசனங்கள்

1 அது பூமியில் நிம்மதியாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் மேலும் ஈமானையும் அமைதியையும் அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளது. நீ வாக்களிக்கப்பட்டதை அடைந்தால் நீ அதிகமாக உறுதிப்படுத்தப்படுவாய்.

அல்லாஹ் கூறுகின்றான் { "உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். "அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இ(ந்தச் செய்தியான)து, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது}.
[ஸூரது இப்ராஹிம் 13-14]

2 நல்லமல்களின்பாலும் உளத்தூய்மையின்பாலும் தூண்டுகின்றது. உலகத்தில் மாறாக வேண்டுவது கூடாது. மேலும் மறுமையிலே அதற்கு கூலி குறைக்கப்படவும் மாட்டாது.

அல்லாஹ் கூறுகின்றான்

{''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.) ''எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை1 நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனவும் கூறுவார்கள்.)}.[ஸூரதுல் இன்ஸான் 9-10]

மேலும் கூறுகின்றான் { (இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.}.
[ஸூரதுன் நூர் 36-37]

அதாவது நிர்கதிக்கு உள்ளாகுதல் மேலும் பிரலுதல். இது அவனை அமல் செய்வதற்கு தூண்டுகிறது. அவர்கள் அழிவை வெறுத்து வெற்றியை நாடுவார்கள். பட்டோலைகள் இடது கைகளில் கொடுக்கப்படுவதை பயப்படுவார்கள்.

உள்ளத்தில் பயம் இருந்தால் அது இச்சையின் இடத்தை எரித்துவிடும். அதில் இருந்தும் உள்ளதுதான் உள்ளத்தை உலகத்தை விட்டும் விரட்டிவிடும். யார் அல்லாஹ்வைப் பயப்படுகின்றானோ அது அனைத்து நல்ல விடயங்கள் மீதும் பயம் இருப்பதை அறிவிக்கும்.

ஆ- மறுமைக்கான பிரயோசனம்

1 மறுமை நாளில் ஒரு அடியான் அர்ஷூடைய நிழலில் இருப்பான்

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் «ஒரு பெண்னின் அழகின் காரணமாக அவளிடம் ஒரு மனிதன் ஸினா செய்ய வேண்டுகின்றான் அவள் அதற்கு நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று கூறினால்....» (ஆதாரம் புகாரி).

இந்த ஹதீஸிலே அந்தப் பெண் வெளிரங்கமாக நாவால் கூறி அந்த செயலை விட்டும் விரட்டுகின்றால் எனவே அவன் அவனைப் பற்றி சிந்திக்கின்றான். அங்கே நிலை மாறுகின்றது அவனுடைய நிலமையை அறிவித்த பின் அவளிடம் அவன் செல்லவில்லை. «அந்த மனிதன் தொடர்ந்தும் அல்லாஹ்வின் நினைவில் இருந்தான் அவனுடைய கண்கள் கண்ணீர் வடித்தன...».(ஆதாரம் புகாரி).

அல்லாஹ்வின் பயத்தினால் அழும் கண்களை மறுமை நாளில் நரக நெருப்பு தீண்டாது.

2 நிச்சியமாக அது மன்னிப்பின் காரணங்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், 'உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்' என்று கேட்டார். அவர்கள், 'சிறந்த தந்தையாக இருந்தீர்கள்' என்று பதில் கூறினர். அதற்கு அவர், 'நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்' என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) 'இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?' என்று கேட்டான். அவர், 'உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)' என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான்.» (ஆதாரம் புகாரி)

அல்லாஹ் அவர்களுடைய மடமையை நீக்குகின்றான் மேலும் அல்லாஹ்வை பயப்படுவதனால் அவனுக்கு ஆசிர்வாதம் வழங்குகின்றான். அவ்வாரு இல்லாமல் யார் மறுமையில் எழுப்புவதை மறுக்கின்றாரோ அவர் நிராகரித்தவர் ஆவார்.

3 யார் பயப்படுகின்றாரோ அவரை அது சுவர்க்கத்திற்கு அனுப்பும்.

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் «யார் பாதைகளில் இருக்கக்கூடிய இடைஞ்சலான பொருட்களுக்கு பயப்படுகின்றானோ அவன் வேகமாக செல்வான் அவ்வாறு யார் வேகமாக செல்கின்றானோ அவன் வீட்டை அடைந்து கொள்வான். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய வியாபாரப் பொருட்கள் வெகுமதியானது. அல்லாஹ்வுடைய வியாபார பொருட்கள் சுவர்க்கமாகும்.».(ஆதாரம் திர்மதிி).

4 மறுமை நாளில் அவருக்கு பாதுகாப்பு உண்டு. ரஸூல் (ஸல்) அவர்கள் ஹதீஸூல் குத்ஸியில் கூறுகின்றார் «எனது அடியானிடம் இரண்டு பயங்களையும் இரண்டு அச்சமற்ற தன்மையையும் ஒன்று சேர்க்கமாட்டேன். அவன் என்னை இவ்வுலகில் பயந்தால் நான் அவனை மறுமையில் அச்சமற்றவனாக ஆக்குவேன்.».(ஆதாரம் பைஹகி).

5 அல்லாஹ் முஃமீனான அடியார்களுக்காக வர்ணித்த இடத்திற்குல் அவர்கள் நுளைவார்கள்.

கீழ்வரும் அல்லாஹ்வின் வார்த்தையைப் போல {முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்,}.
[ஸூரதுல் அஹ்ஸாப் 35]

அதனுடைய அனைத்து சிறப்பான வார்த்தைகளும் அதனுடைய உடமைகளை பெற முற்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.}.[லூரதுஸ் ஸஜ்தா 16]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் { இரவு நேரங்களில் ஸஜ்தாச் செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா? (அல்லது அவ்வாறு இல்லாதவரா?) அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.}.
[ஸூரது அஸ்ஸூமர் 9]

மேலும் கூறுகின்றான் {அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள். அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.}.
[ஸூரதுல் மஆரிஜ் 27-28].

அல்லாஹ் அவனுடைய நெருக்கமான அடியார்களை புகழ்கின்றான். அவர்கள்தான் நபிமார்களாவார்கள் அவர்கள் அல்லாஹ்வை மிகவும் பயந்தவர்கள். {அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர்.} [ஸூரதுல் அன்பியா 90].

மலக்குமார்கள் எப்பெழுதும் அல்லாஹ்வை பயந்தவர்களாகவே இருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் { தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.}.[ஸூரதுன் நஹ்ல் 50].

6 திருப் பொருத்தம் என்பது அல்லாஹ்விடம் இருந்தும் உள்ளதாகும். {அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.}.[ஸூரதுல் பய்யினா 8].

அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவன் மீதுள்ள பயம்

அல்லாஹ்வை அறிந்தவர்களுடைய அமல்கள் சிறந்ததாக இருக்கும் மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பார்கள். அதிலிருந்து அல்லாஹ்வை யார் பயப்படுவார்களோ அவர்களுடைய பயம் கடுமையானதாக இருக்கும். அதற்கான உதாரணங்கள் சில-

நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்றேன். அழுகையின் காரணத்தால் கொதிக்கும் பாத்திரத்தில் ஏற்படும் சப்தம் போன்று அவர்களின் நெஞ்சிலிருந்து இரைச்சல் வந்து கொண்டிருந்தது

ஆதாரம் அஹ்மத் அபூ தாவூத் நஸாஈ

அபூ பக்கர் (ரழி) அவர்கள் நாவை பிடித்தவர்களாக கூறினார்கள் «இதுதான் பிறரை அழித்துவிடக்கூடிய பல விடயங்களை கொண்டு வந்தது.».

மேலும் கூறினார் «நான் ஒரு உண்ணப்படக்க்கூடிய பொருளாக இருக்கக்கூடாதா என்று கூறுவார்கள்».

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கன் கூறுகின்றார்கள் «நான் ஒரு ஞாபகப்படாத்தப்படக்கூடிய ஒரு பொருளாக இருக்கக்கூடாதா. எனது தாய் என்னைப் பெற்றிருக்கக்கூடாதா என்று கூறுவார்கள்».

மேலும் கூறுவார்கள் «காணாமல் சென்ற ஒட்டகமொன்று ஒரு நீர் நிலையின் பக்கத்தில் மரணித்தால் அதையும் அல்லாஹ் என்னிடம் மறுமையில் கேட்பான் என்று நான் பயப்படுகின்றேன்.».

மேலும் கூறினார் «ஒரு அழைப்பாளர் வானத்திலிருந்து அழைப்பார் அவர் மக்களே அனைவரும் சுவர்க்கத்தில் நுளைவீராக ஒருவரைத் தவிர என்று கூறுவார் நான் அந்த ஒருவன் நானோ என்று பயப்படுகிறேன் என்று கூறினார்கள் ».

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் «நான் மரணித்தால் மறுபடியும் எழுப்பப்படாமல் இருப்பதை ஆசைப்படுகிறேன்.».

அவர் இரவை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்காகவும் தொழுவதற்காகவும் குர்ஆன் ஓதுவதற்காகவும் பிரித்துக் கொள்வார்கள்.

முஃமீன்களுடைய தாய் ஆயிஷா (ரழி) அவர்கள் அல்லாஹ்வுடைய இந்த வசனத்தை ஓதுவார்கள் {அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து நெருப்பின் வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றினான்.}[ஸூரதுத் தூர் 27]

அவருடைய தொழுகையிலே அவர் மீண்டும் மீண்டும் அழுவார்கள். {அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)}.[ஸூரதுல் மாயிதா 118].

பயப்படுவதன் சட்டங்களும் அதன் விழிப்புணர்வுகளும்

1 பயப்படுவது குறிப்பாக்கப்பட்டுள்ளது. யார் அல்லாஹ்வை பயப்படுகிறாரோ அவர் அவனை மிகவும் அறிந்து கொள்வார். {அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.}.[ஸூரதுல் ஃபாதிர் 28].

அறிவோடு கூடிய அச்சம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உங்களை விட அல்லாஹ்வை பயப்படுபவனாக இருக்கின்றேன் மேலும் உங்களை விட அதிகமாக நான் பயப்படுகின்றேன்».(ஆதாரம் முஸலிம்).

அறிவின் அளவு அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் அவனுடைய பண்புகளையும் மேலும் அவனுடைய பூரணத்துவத்தையும் அவனுடைய மகத்துவத்தையும் அறிவதிலே உள்ளது. மேலும் பயத்தையும் அச்சத்தையும் அறிவதிலும் உள்ளது.

2 பயம் முயற்சி செய்வதையும் அமல் செய்வதையும் மேலும் கைசேதத்துடனும் கலக்கத்துனும் தவ்பா செய்வதையும் தூண்டினால் அது பிரயோசனமாக இருக்கும். குற்றத்தை வெறுப்பது மேலும் அல்லாஹ்வின் வாக்குருதியை உண்மைப்படுத்துவது போன்றவையை அறிவதனாலும் மேலும் அல்லாஹ்வைப் பற்றி அறிவதாலும் பயம் வளர்ச்சியடையும். மேலும் அல்லாஹ்வின் மீது பயம் இருப்பதாக கற்பனை செய்ய முடியாது. நன்மை செய்வதோ அல்லது அதற்கு முயற்சிப்பதோ ஒழுங்கான முறையில் செய்யமுடியாது.

3 அல்லாஹ்வைப் பயப்படுவது கடமைகளில் இருந்தும் ஒரு கடமையாகும். அது ஈமானை வேண்டி நிற்கின்றது. இது நல் வழியினூடாத வந்ததும் மேலும் உள்ளத்திற்கு பிரயோசனமளிக்கக்கூடியதாகவும் உள்ளது. அது ஒவ்வொறு மனிதன் மீதும் கடமையாகும். அதனால் கேட்ட விடயங்கள், உலக விடயங்கள், மோசமான ஆசைகள், போடு போக்குகள் போன்றவையை விட்டும் தடுக்கின்றது.

{அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்}. [ஸூரது ஃபாதிர் 28]. யார் அல்லாஹ்வை பயப்படுகின்றானோ அவனுக்கு யாரும் தீங்கு செய்யமாட்டான். மேலும் யார் அல்லாஹ் அல்லாதவரை பயப்படுகின்றாரோ அவருக்கு யாரும் பிரயோசனமளிக்கமாட்டார்கள்.

அல் ஃபுழைல் இப்னு இயாழ்Tags: