அல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.

 அல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.

அல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.

அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்விடத்தில் மீள வேண்டும். அவனிடமே மீளும் தளம் உள்ளது. இது அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வதில் அடிப்படைத் தூணாகும். அதாவது ஈமானின் தூண்களில் ஒன்று. ஈமானின் தூண்களில் ஒன்று மறுமை நாளைக்கொண்டு ஈமான் கொள்ளுதல். ஈமானின் தூண்களை ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடக்கும் ரீதியாக ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு பதில் சொன்னது இதை உறுதிப்படுத்துகிறது. அவருக்கு கூறினார் «அல்லாஹ்வைக் கொண்டு அவனுடைய மலக்குமார்களைக் கொண்டும் அவனுடைய வேதங்களைக் கொண்டும் அவனுடைய ரஸூல்மார்களைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் அதில் இருக்கும் நலவு கெடுதிகளைக் கொண்டம் ஈமான் கொள்ள வேண்டும்.» (ஆதாரம் முஸ்லிம்).

மறுமை நாள் என்று பெயர் சொல்லப்படுவது அதற்குப் பின் ஒரு நாள் இல்லை என்பதனாலாகும். சுவர்க்கவாசிகள் அவர்களுடைய இடத்திலும் நரகவாசிகள் அவர்களுடைய இடத்திலும் இருப்பார்கள். அதனுடைய இடத்தையும் மகத்துவத்தையும் அதில் நடக்க இருப்பதையும் பற்றிக் கூறி குர்ஆனிலே பல பெயர்கள் சூட்டி வந்துள்ளது. அதில்-

நிகழக்கூடிய நாள்- அதில் நிகழக்கூடியதை உறுதிப்படுத்தி வந்துள்ளது.

சிலர் உயர்த்தப்படுவார்கள் சிலர் தாழ்த்தப்படுவார்கள்- அதாவது ஒரு கூட்டத்தினர் சுவர்க்கத்திற்கு உயர்த்தப்படுவர் இன்னொரு கூட்டத்தினர் நரகத்திற்கு தாழ்த்தப்படுவர்.

கேள்வி மற்றும் கூலி கொடுக்கப்படும் நாள்,

உண்மைப்படுத்தப்படக்கூடிய நாள்- அதாவது அல்லாஹ்வுடைய விடயங்களை உண்மைப்படுத்தப்படக்கூடிய நாள்

அனர்த்த நாள்- அந்த நாள் புறட்டப்படும் போது அதிலே ஏற்படும் அனர்த்தம்

சத்தமான நாள்- காது கேளாதவர்களையும் எழுப்பக்கூடிய சூர் ஊதப்படும்.

வாக்குறுதி நாள்- காபீர்களுக்கு வாக்களிக்கப்பட்டது உண்மைப்படுத்தப்படும் நாள்

கைசேத நாள்- கைசேதங்கள் இருக்கக்கூடிய நாள்

ஒன்று சேர்த்தப்படக்கூடிய நாள்- அனைவரும் ஒரே இடத்தில் சேர்த்தப்படக்கூடிய நாள்

நெருங்குகின்ற நாள்- கடுமையான நெருக்கம்

அழைக்கப்படும் நாள்- சுவர்க்கவாசிகள் சுவர்க்கவாசிகள் என்றும் நரகவாசிகள் நரகவாசிகள் என்றும் அழைக்கப்படுவர்.

மலட்டு நாள்- அந்த நாளுக்கு பிறகு இன்னொரு நாள் இல்லை

மறுமை வீடு, மீளக்கூடிய வீடு

முறியக்கூடிய நாள்- மக்களை உடைத்து விடும்

மேலும் இவை அல்லாத பெயர்களும் உண்டு

மறுமை நாளைக் கொண்டு ஈமான் கொள்வதில் உள்ளடங்குபவை

முதலாவது: மரணித்தின் பின் உள்ளதை ஈமான் கொள்ளுதல்

கப்றுடைய சோதனைகள்

ஒரு மையத்தை அடக்கிய பின் அவனுடைய இறைவன் மற்றும் மார்க்கம் மற்றும் அவனுடைய நபி ஆகியவற்றைப் பற்றி கேட்கப்படும். ஈமான் கொண்டவர்கள் அதில் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் எனது இறைவன் அல்லாஹ் எனது மார்க்கம் இஸ்லாம் எனது நபி முஹம்மத் என்று கூறுவார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை வழிகெடுத்து விடுவான். நிராகரித்தவன் அய்யோ அய்யோ எனக்குத் தெரியாது என்று கூறுவான். சந்தேக்கேகக்காரர்களும் நயவஞ்சகர்களும் குறைவான மனிதர்கள் சொன்ன விடயத்தை நான் அறியமாட்டேன் என்று கூறுவார்கள்.

கப்ரின் வேதனையும் அதன் பிரச்சினையும்

முஃமீன்களுக்கு கீழ்படியாதவர்களுக்கும் நிராகரித்தவருக்கும் நயவஞ்சகர்களுக்கும் அநியாயக்காரர்களுக்குமே கப்ருடைய வேதனை உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான் {அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).}
[ஸூரது அன்ஆம் 93].

அல்லாஹ் பிர்அவ்னுடைய குடும்பத்தைப் பற்றி கூறுகின்றான் {காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)}
[ஸூரது காஃபிர் 46].

ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் நபியவர்கள் கூரியதாக அறிவிக்கின்றார்கள்

«நீங்கள் அடக்கம் செய்யப்படாவிட்டால் நான் கேட்கின்ற இந்த கப்ரு வேதனையை நீங்களும் கேட்க வேண்டும் என நான் அல்லாஹ்விடம் துஆ கேட்டிருப்பேன். அதன் பிறகு நேருக்கு நேராக வந்து நின்று நபியவர்கள் கூறினார்கள் கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் அப்பொழுது நாங்கள் கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம் என்று கூறினோம். மேலும் நபியவர்கள் நரக வேதனையை விட்டும் பாதுகாப்பு தேடுங்கள் என்று கூறினார்கள் நாங்களும் நரக வேதனையை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம் என்று கூறினோம். மேலும் நபியவர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் பிரச்சினைகளை விட்டும் பாதுகாப்பு தேடுங்கள் என்று கூறிய போது நாங்களும் வெளிப்படையாக மறைமுகமாக ஏற்படும் பிரச்சினைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம் என்று கூறினோம். பின்னர் நபியவர்கள் தஜ்ஜாலுடைய பிரச்சினையை விட்டும் பாதுகாப்பு தேடுமாறு கூறினார்கள்.» (ஆதாரம் முஸ்லிம்).

உன்மையான முஃமீன்களுக்கு கப்ரில் இருக்கும் அருட் கொடைகள்

அல்லாஹ் கூறுகின்றான் {"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!'' எனக் கூறுவார்கள்.}
[ஸூரது புஸ்ஸிலத் 30].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்
{அது (உயிர்) ஒருவனது தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்.எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் (இம்மார்க்கத்தை) கடைப்பிடிக்காது இருந்தால், அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அதை (உயிரை) திரும்பக் கொண்டு வரலாமே!. அவர் இறைவனுக்கு நெருக்கமானோரில் ஒருவராக இருந்தால், அவருக்கு உணவும், நறுமணமும், சுகமான சொர்க்கச் சோலையும் உள்ளனஅவர் வலப்புறத்தைச் சேர்ந்தோராக இருந்தால் வலப்புறத்தாரிடமிருந்து உமக்கு ஸலாம் பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் கருகுவதும் விருந்தாகும். இது உறுதியான உண்மை எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!}
[ஸூரதுல் வாகிஆ 83-96].

கப்றுடைய இரு மலக்குமார்களிடமும் ஒரு முஃமீன் பதிலளிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அழைப்பார் அவர் கூறுவார் என்னுடைய அடியான் உண்மை கூறிவிட்டான் அவனுக்காக சுவனத்தில் ஒரு விரிப்பை விரியுங்கள் அவருக்கு சுவனத்தில் உள்ள ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள் அவருக்கு சுவனத்தின் வாசல்கள் அனைத்தையும் திறந்து விடுங்கள். அந்த சுவனத்திலிருந்த வாடைகளும் காற்றும் வரட்டும் அந்த கப்ரையும் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு விசாலமாக்கி விடுங்கள்.»
(ஆதாரம் அஹ்மத்).

உஸ்மான் (ரழி) அவர்கள் ஒரு கப்ரின் அருகில் சென்றால் தனது தாடி நனையுமளவிற்கு அழுவார்கள். அப்பொழுது அவர்களிடம் சொர்க்க நரகத்தை பற்றி கூறப்பட்டால் நீங்கள் அழமாட்டீர்கள் ஏன் இதற்காக வேண்டி அழுகுறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நபியவர்கள் சொன்னார்கள் நிச்சியமாக கப்ரானது மறுமை நாளுக்கான வீடுகளில் முதலாவது வீடாகும். யார் இதில் வெற்றி அடைகிறாரோ அதன் பிறகு வரக்கூடிய அனைத்து வெற்றிகளும் அவருக்கு இலகுவாக அமையும். யார் இதில் வெற்றி பெறவில்லையோ அதற்கு பின் வரக்கூடிய அனைத்தும் கஷ்டமாக அமையும். என நபியவர்கள் கூறியதாக உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்னார்கள் மேலும் நபியவர்கள் சொன்னார்கள் கப்ருடைய கொடுமைக் காட்சிகளைத்தவிர வேறு எந்த கொடுமைக் காட்சிகளையும் நான் கண்டதில்லை என்று கூறியதாக சொன்னார்கள்..(ஆதாரம் அஹ்மத்).

இரண்டாவது: எழுப்புவதை ஈமான் கொள்ளுதல்

இரண்டாவது சூர் ஊதப்படும் போது மரணித்தவர்கள் எழுப்பாட்டப்படுவார்கள். ஹத்னா செய்யப்படாதவர்களாகவும் ஆடை அனியாதவர்களாகவும் செருப்பு அனியாதவர்களாகவும் அல்லாஹ்வுக்காக அவர்கள் எழும்புவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் {முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.}
[ஸூரதுல் அன்பியா 104].

எழுப்புவது உறுதியானதாகும் குர்ஆன் ஹதீஸ் மற்றும் முஸ்லிம்கள் அனவரினதும் ஒன்றுபட்ட கருத்தாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள். பின்னர் கியாமத் நாளில் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.}
[ஸூரது முஃமினூன் 15-16].

நபியவர்கள் கூறினார்கள்

«மனிதர்கள் ஆடை அணியாதவர்களாகவும் செருப்பு அணியாதவர்களாகவும் ஒன்று கூட்டப்படுவார்கள்»(புகாரி முஸ்லிம்).

இது நடக்கும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கின்றனர். ஏனென்றால் மார்க்கம் நிர்ணயித்துள்ளது அல்லாஹ் படைப்பினங்களுக்கு இந்த மீளும் தளத்தை ஆக்கயுள்ளது அவனுடைய தூதர் கூறியதை அவன் ஏற்று நடந்ததற்கான கூலியை வழங்கவதற்காகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா?}
[ஸூரது முஃமினூன் 115].

அல்லாஹ் அவனுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கூறுகின்றான்

{(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன்}[ஸூரதுல் கஸஸ் 85].

மூன்றாவது: கியாமத்து நாளின் அடையாளத்தை நம்புதல் மேலும் அதன் நிபந்தனைகள்

அது மறுமை நாள் நிகழுவதற்கு முன்னர் நடக்கும் நிகழ்வுகளாகும் மேலும் அது மறுமை நாள் நிகழப்போகிறது என்பதை அறிவிக்கும். மார்க்கம் அந்த அடையைளங்களை பெரிய அடையாளம் சிறிய அடையாளம் என இரண்டாகப் பிரித்துள்ளது.

சிறிய அடையாளங்கள்:

அது கியாமத் நாள் வருவதற்கு முந்திய அடையாளங்களாகும் நீண்ட காலங்களுக்கு இது நடைபெறும் இன்னும் சிலவை நடைபெற்று முடிந்து விடும். இன்னும் சிலவை வெளியாகி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். இன்னும் சில அடையாளங்கள் தற்போது நடக்காது மாறாக அது நபியவர்கள் அறிவித்தது போன்று பிறகு நடக்கும். உதாரணமாக- நபி அனுப்பப்படுதல், அவர் மரணித்தல், பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல், பிரச்சினைகள் தோன்றுதல், நம்பிக்கை மறைந்துவிடுதல், அறிவு மறைந்து மடமை வெளியாகுதல், வட்டியும் விபச்சாரமும் பரவுதல், இசைகள் வெளியாகுதல், அதிகமாக மது அருந்துதல், ஆடு மேய்ப்பவர்கள் அடுக்கு மாடிகள் கட்டுதல், குழந்தைகள் தனது தாய்மார்களை அடிமையைப் போன்று நடத்தி அவர்களை நோவினை செய்தல். கொலை அதிகரித்தல், பூமி நடுக்கம் அதிகரித்தல், பிளவுகள் மாறுதல்கள் இட்டுக்கட்டல்கள் போன்றவை அதிகரித்தல், ஆடை அணிந்து நிர்வானமாக சுற்றுபவர்கள் அதிகரித்தல். பொய் சாட்சிகள் அதிகரித்தல் உண்மை சாட்சிகள் மறைந்துவிடுதல். இவை அல்லாத இன்னும் பல குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ளன.

பெரிய அடையாளங்கள்:

இவை பெரிய அடையாளங்களாகும் இவை மறுமை நாள் நெருங்குவதையும் மேலும் குறைந்த காலப்பகுதியே இருக்கின்றது என்பதையும் அறிவிக்கும்.

அவை 10 அடையாளங்களாகும். அவையாவன- தஜ்ஜால் ,ஈஸா (அலை) இரங்குவது, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வருவது, இதில் 3 வகையான கிரகணங்களாகும்- கிழக்குக் கிரகணம், மேற்குக் கிரகணம், அராபிய கீபகற்பத்தில் ஏற்படும் கிரகணம் போன்றவையாகும் மேலும் புகை மண்டலம் வெளியாகுதல் சூரியன் மேற்கிலே உதித்தல் கால் நடை பேசும் மனிதர்களை ஒரு நெருப்பு ஒரே இடத்தில் ஒன்று கூட்டும் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதில் ஒன்று நிகழ்ந்துவிட்டால் மற்ற அனைத்தும் தொடர்ந்து நிகழும்

நான்காவது: கியாமத்து நாளின் பயங்கரமான நிலமையையும் அதன் நிகழ்வுகளையும் ஈமான் கொள்ளுதல் உதரணமாக:

1 மலைகளை துண்டாக உடைத்து அதை மண்ணாக மாற்றுவான் அவை பூமிக்கு சமமானதாக இருக்கும்

அல்லாஹ் கூறுகின்றான்- {மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும்.}[ஸூரதுன் நம்ல் 88].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்-{மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்}[ஸூரதுல் வாகிஆ 5-6].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் { மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.}[ஸூரதுல் மஆரிஜ் 9].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்குவான்'' என்று கூறுவீராக! பின்னர் அதை வெட்டவெளிப் பொட்டலாக ஆக்குவான். அதில் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்!}[ஸூரது தாஹா 105-107].

2 கடல்கள் கொதிக்க வைக்கப்படும் அது தீ மூட்டப்பட்டதாக இருக்கும் இந்தக் கடல்கள் பூமியின் அதிகமான பகுதிகளை மூடிக்கொள்ளும் அந்நாளில் தீ மூட்டப்படும்

அல்லாஹ் கூறுகின்றான் { கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது,} [ஸூரது இன்பிதார் 3]

{கடல்கள் தீ மூட்டப்படும்போது,} [ஸூரது தக்வீர் 6].

3 வானமும் பூமியும் மக்களுக்காக இயல்பு நிலைக்கு மாற்றப்படும் எந்த அடையாளமும் இல்லாத அந்தப் பூமியில் அவர்கள் எழுப்பப்படுவார்கள்

அல்லாஹ் கூறுகின்றான் {அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.}
[ஸூரது இப்ராஹிம் 48].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «((உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் 'அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது' என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.» (புகாரி முஸ்லிம்).

எவ்வித அடையளமும் இன்றி வெள்ளை நிற தூய மாவைப் போன்று ஆகி விடும்

மக்கள் ஒரு புதுவிதமான இயல்பு நிலையைக் காண்பார்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்திருப்பதைக் காண்பார்கள் அவர்களுடைய உள்ளங்கள் தடுமாறிக்கொண்டு இருக்கும்

அல்லாஹ் கூறுகின்றான் {பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்}[ஸூரதுல் கியாமா 7-10].

5 சூர் உதப்படுவதாவது அதுவே மனிதனின் கடைசியாகும். அந்நாள் வரும் போது சூர் உதப்படும் அந்த சூர் உதப்பட்டால் வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் அழிந்துவிடும். {ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். }[ஸூரது ஸூமர் 68].

அது ஒரு பயங்கரமான சத்தமாகும். ஒரு மனிதன் அந்த சத்தத்தை கேட்டால் அவகாசம் கேட்க முடியாது அவனுடைய குடும்பத்தினரிடமோ சொந்தக்காரர்களிடமோ மீள முடியாது. {ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும். அப்போது மரண சாசனம் கூறவும் அவர்களுக்கு இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.}[ஸூரது யாஸின் 49-50].

மேலும் நபியவர்கள் கூறினார்கள் «பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகிவிடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவர்.» (ஆதாரம் முஸ்லிம்).

6 பூமியில் ஒன்று கூட்டுவது என்பது அல்லாஹ்வின் ஆரம்ப படைப்பிலிருந்து கடைசி படைப்பு வரையிலாகும். அந்நாளில் மிருகங்கள் ஜின்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர்களில் முதலாவதிலிருந்த கடைசிவரைக்கும் ஒன்று கூட்டப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான் {மறுமையின்1 வேதனையை அஞ்சுவோருக்கு இதில் தக்க பாடம் உள்ளது. அதுவே மக்கள் ஒன்று திரட்டப்படும் நாள்! அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்!} [ஸூரதுல் ஹூத் 103]

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {"முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின்1 குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று கூறுவீராக} [ஸூரதுல் வாகிஆ 49-50]

7-மனிதர்கள் அந்நாளிலே படைக்கப்பட்டவாரே ஆடை இல்லாமல் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அந்த பயங்கரமான நிலமையில் அவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் «நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்' என்று கூறினார்கள்.»
(ஆதாரம் புகாரி).

8.அநியாயம் செய்தவர்களிலிருந்து அநியாயம் செய்யப்பட்டவருக்கு பலிக்குப்பலி வாங்குதல் அது மிருகங்களாக இருந்தாலும் சரியே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «(உங்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு) உரிய கடமைகள் மறுமை நாளில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடு (முட்டியதற்காக) கணக்குத் தீர்க்கப்டும்»(ஆதாரம் முஸ்லிம்).

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார் «ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் சமரசம் செய்து) அதிலிருந்து அவர் (இவ்வுலம்லேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவற்றை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விம்தாசாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்).»
(ஆதாரம் புகாரி).

9 மனிதர்களுக்கு அவர்களுடைய அமல்களுக்கு ஏற்ப வியர்வையால் மூழ்கடிப்பதற்காக சூரியன் நெருக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.»(ஆதாரம் முஸ்லிம்).

10 சிலருடைய பட்டோலைகள் வலக்கையிலும் இன்னும் சிலரது பட்டோலை இடக்கையிலும் கொடுக்கப்படும். மனிதன் அந்நேரத்தில் அவனுடைய பட்டோலை கொடுக்கப்படும் வரைக்கும் குழப்பமடைந்தவனாகவும் பயந்தவனாகவும் இருப்பான். முஃமீன்கள் அவர்களுடைய பட்டோலைகள் வலது கையில் கொடுக்கப்படும் போது அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் நன்மராயம் கூறப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் நிராகரித்தவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் பட்டோலை இடது கையில் கொடுக்கப்படும் போது அவர்களுக்கு ஏமாற்றம் அதிகரிக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான் {.எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார் அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்) புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.}
[ஸூரது அல் ஹாக்கா 19-29].

11 மக்கள் பயத்திலும் கலக்கத்திலும் இருப்பார்கள் அந்நாளில் ஒரு மனிதன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வானே தவிர இன்னொருவரிடம் கேட்கமாட்டான்.

அல்லாஹ் கூறுகின்றான் {செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது}
[ஸூரது அஷ்ஷுஅரா 88].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் { மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான் அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.}
[ஸூரது அபஸ 34].

ஐந்தாவது- கேள்வி கேட்பதையும் கூலி கொடுப்பதையும் ஈமான் கொள்ளுதல்.

ஒரு அடியான் அவனுடைய செயல்களுக்கு கேள்வி கேட்டு கூலி கொடுக்கப்படுவான்.

அல்லாஹ் கூறுகின்றான்

{ அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.}[ஸூரது அல்ஹஃஷியா 25-26].

மேலும் கூறுகிறான் {நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.}[ஸூரதுல் அன்ஆம் 106].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {கியாமத் நாளுக்காக1 நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.}[ஸூரதுல் அன்பியா 47].

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

«அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' » (புகாரி முஸ்லிம்).

{இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர் கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.}
[ஸூரது ஹூத் 18].

அல்லாஹ் கூறியதை ரஸூல் (ஸல்) அவர்கள் உண்மைப்படுத்தினார்கள் «அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.»
(புகாரி முஸ்லிம்).

அமல்களுக்கு கேள்வி கேட்கப்பட்டு கூலி வழங்கப்படுவது உறுதி என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர். அதுதான் மார்க்கத்தின் நியதியுமாகும். நிச்சியமாக அல்லாஹ்

ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களுக்கு கூறப்பட்டது ஸஹாபாக்களை விடவும் அதிகமாக நல்லமல்கள் செய்யக்கூடியவர்களாக தாபிஈன்களை நாம் கண்டோம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு முந்தியவர்களா என்று கேட்டனர் அதற்கு ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் அவர்கள் வணங்குவார்கள் ஆனால் அவர்களுடைய உள்ளங்களில் உலக ஆசை இருக்கும் ஆனால் ஸஹாபாக்கள் வணங்குவார்கள் அவர்களுடைய உள்ளங்களில் மறுமை இருக்கும் என்றார்கள்.

வேதங்களை இறக்கினான் மேலும் ரஸூல்மார்களையம் அனுப்பினான் அவர்களைக் கொண்டு ஈமான் கொண்டு மேலும் அவர்களை பின்பற்றுவதையும் கடமையாக்கினான். யார் அவர்களை ஈமான் கொண்டு பின்பற்றவில்லையோ அவர்களை கடுமையாக எச்சரிக்கின்றான். அங்கே எந்த கேள்வி கணக்கும் கூலியும் இருக்காது மாறாக வீனாகவே இருக்கும் அல்லாஹ் அதை விட்டும் தூய்மையானவன்.

அல்லாஹ் அதை கீழ் வரும் ஆயத்தில் சுட்டிக்காட்டுகின்றான் {யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (நமக்குத்) தெரியும் என்பதால் அவர்களுக்கு விளக்குவோம். நாம் கவனிக்காமல் இல்லை.}
[ஸூரதுல் அஃராப் 6-7].

ஆறாவது- சுவர்க்க நரகத்தைக் கொண்டு ஈமான் கொள்ளுதல்

அவை இரண்டும் படைப்பினங்களுக்காக உருவாக்கப்படும் இடமாகும். சுவர்க்கமானது அது அல்லாஹ் எதைக் கொண்டு ஈமான் கொள்ளுமாறு கடமையாக்கினானோ அதை அவனுக்குப் பயந்து ஈமான் கொண்ட முஃமீன்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஒரு சந்தோசமான இடமாகும். அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பின்பற்றினார்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் அவனுடைய ரஸூலை பின்பற்றியவராகவும் இருப்பார்கள். அதிலே பலதரப்பட்ட இன்பங்கள் உள்ளன. எந்தக் கண்களும் கண்டிராத எந்தக் காதுகளும் கேட்டராத எந்த ஒரு உள்ளமும் நினைத்துப்பார்திராத இன்பங்கள் உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி அத்ன் எனும் சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.}
[ஸூரது அல் பய்யினா 7-8].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.}[ஸூரது ஸஜ்தா 17].

மேலும் சிறந்த சந்தோசம் அல்லாஹ்வை சுவனத்தில் பார்க்கக் கிடைப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்}[ஸூரதுல் கியாமா 22-23].

அல்லாஹ் கூறுகின்றான் { நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு.}[ஸூரது யூனுஸ் 26].

நன்மை- அது சுவர்க்கம்

அதிகம்-அது அல்லாஹ்வைப் பார்ப்பது

நபியவர்கள் கூறினார்கள்

«சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுளைந்த பின் அல்லாஹ் அவர்களிடம் நீங்கள் விரும்புகின்ற ஒன்றை நான் காட்டட்டுமா என்று கேட்பான் இறைவா எங்களுடைய முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா எங்களை சுவர்க்கத்திற்குள் நுளையவைக்கவில்லையா நரகத்திலிருந்தும் எங்ளை நீ பாதுகாக்கவில்லையா இதுவே எங்களுக்கப் போதும் என்பார்கள். பின்னர் நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ் திரையை நீக்கி விடுவான். அல்லாஹ்வைக் காண்பது அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்ததில் சிறந்ததாக இருக்கும் என நபியவர்கள் சொன்னார்கள். பின்னர் நபியவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.» (ஆதாரம் முஸ்லிம்). { நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு.}[ஸூரது யூனுஸ் 26].
நரகத்தைப் பொருத்தவரையில் அது வேதனை தரக்கூடிய ஒரு இடமாகும் அல்லாஹ் அதை அவனுடைய ரஸூலுக்கு மாறு செய்து அவனை நிராகரித்த அநியாயக்காரர்களாகிய நிராகரிப்பாளர்களுக்காக தயார் செய்து வைத்துள்ளான். அதிலே பலதரப்பட்ட வேதனைகள் உள்ளன

அல்லாஹ் கூறுகின்றான் { (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!} [ஸூரது ஆலு இம்ரான் 131].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.}
[ஸூரதுல் கஹ்ப் 29].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் { (ஏகஇறைவனை) மறுப்போரை அல்லாஹ் சபித்து விட்டான்.அவர்களுக்கு நரகத்தையும் தயாரித்துள்ளான். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். எந்தப் பொறுப்பாளனையோ, உதவியாளனையோ காண மாட்டார்கள். அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.}
[ஸூரதுல் அஹ்தாப் 64-66].

மிகவும் குறைந்த வேதனை (அல்லாஹ் காப்பாற்றுவானாக) நபியவர்கள் சொல்லிக் காட்டினார்கள் «மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும். »(ஆதாரம் புகாரி).

மறுமை நாளைக் கொண்டு ஈமான் கொள்வதின் பிரயோசனங்கள்

1 ஈமான்களின் தூண்களிலிருந்து ஒரு தூண் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஏனென்றால் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வது மறுமை நாளைக்கொண்டு ஈமான் கொள்வதினால் உறுதியாகின்றது. இது ஈமானின் தூண்களில் இருந்தும் உள்ளதாகும். இதனால்தான் அல்லாஹ் ஈமான் கொள்ளாதவருடன் போர் செய்வதை கடமையாக்கி உள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் {வேதம் கொடுக்கப்பட்டோரில்அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாதவர்களுடன் , போரிடுங்கள்}[ஸூரது தவ்பா 29].

2 உலகத்திலும் மறுமையிலும் பாதுகாப்பாகும். மேலும் மகத்தான கூலியைக்கொண்டு வாக்களிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் {கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்}[ஸூரது யூனுஸ் 62].

3 மகத்தான கூலியைக்கொண்ட வாக்கறுதியளிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.}
[ஸூரதுல் பகரா 62].

4 நல்லவற்றை செய்வதற்காக தூண்டுதல்

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.}[ஸூரது நிஸா 59].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியவர்களே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்.}
[ஸூரது தவ்பா 18].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது}[ஸூரதுல் அஹ்தாப் 21].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் { உங்களுக்கு (அதாவது) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.}[ஸூரதுல் மும்தஹினா 6].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது.} [ஸூரது தலாக் 2].

ஆயிஷா ரழி அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்து உனது உள்ளத்தை இலகு படுத்திக் கொள்வதற்கு நீ மௌத்தை நினைவு கூறு என்றார்கள்.

5 ததீய செயல்களை செய்வதை விட்டும் தடுத்தல்

எங்களுடைய இறைவன் கூறுகிறான் {அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை}[ஸூரதுல் பகரா 228].

மேலும் அவன் கூறுகின்றான் {பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது.}[ஸூரது பகரா 232].

மேலும் அவன் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது தமது உள்ளங்களில் சந்தேகம் கொள்வோரே உம்மிடம் அனுமதி கேட்பார்கள். அவர்கள் தமது சந்தேகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.}[ஸூரது தவ்பா 44-45].

இதனால்தான் அந்நாளைக்கொண்டு யார் ஈமான் கொள்ளவில்லையோ அவன் தயக்கமின்றி தடுக்கப்பட்ட விடயங்களை செய்வான். அதிலே அவன் வெக்கப்படமாட்டான். {தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.}[ஸூரது அல் மாஊன் 1-3].

ஹஸன் (ரழி) அவர்கள் கூறினார்கள் யார் மௌத்தை அறிந்து கொள்கிராரோ அவருக்கு உலக கஷ்டங்கள் குறைந்து விடும்.

6 மமறுமையின் சந்தோசத்தையும் அதனுடைய கூலியையும் ஆதரவு வைத்தவனாக ஒரு முஃமீன் இவ்வுலகில் தப்பிப் போனதை விட்டு விடுவான். சுவர்க்கமே மகத்தான வெற்றியாகும். இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு ஏமாற்றக்கூடிய இன்பமாகும்

அல்லாஹ் கூறுகின்றான் {ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை}[ஸூரது ஆலு இம்ரான் 185].

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {"என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' எனக் கூறுவீராக! அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.}[ஸூரதுல் அன்ஆம் 15-16].

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.}[ஸூரதுல் அஃலா 17].

உள்ளம் சீரடைவது, வெற்றியடைவது, சந்தோசமடைவது ,சிகிச்சைப் பெறுவது, அமைதியடைவது அல்லாஹ்வை வணங்குவதாலும் அவனின்பால் நெருங்கி அன்பு வைப்பதின் மூலமும் ஆகும்.

ஷைஹூல் இஸ்லாம்Tags: