அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளல்.

 அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளல்.

அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளல்.

அல்லாஹூத்தஆலா வீணுக்காக தனது அடியார்களை படைக்கவில்லை அவர்களை வெறுமனே விட்டு விடவுமில்லை அவர்களுக்கு தனது ரஸூல்மார்களை அனுப்பி தன்னைப்பற்றியும் தன்னுடைய மகத்துவத்தைப் பற்றியும் தன்னால் வழங்கப்பட இருப்பதைப்பற்றியும் கற்றுக்கொடுத்தான். அல்லாஹ் அவர்களுக்கு அவர்களில் இருந்தே சிறந்தவர்களைத் தேரந்தெடத்து அனுப்பினான். மூஸா ஈஸா இப்ராஹிம் நூஹ் போன்றவர்களை அவர்களில் இருந்தே தேர்ந்தெடுத்து அனுப்பினான். தன்னுடைய தூதுத்துவத்தை இருதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு முடித்துக்கொண்டான். தான் அனுப்பிய தூதுவர்களுடைய உண்மை நிலையை பிரதிபலிப்பதற்காக அவர்களுக்கு பல அத்தாட்சிகளையும் வழங்கினான். அவர்கள் நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள் மேலும் தூதுத்துவத்தை எத்தி வைத்தார்கள். மனிதர்களுக்கு தன்னை படைத்தவன் பற்றியும் தன்னுடைய இறைவன் பற்றியும் அறிவித்தார்கள். எனவே ரஸூல்மார்களையும் அவர்கள் கொண்டு வந்ததையும் யார் நம்பவில்லையோ அவர் அல்லாஹ்வை நம்பியவராக ஆகமாட்டார்.{இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள்.}
[ஸூரதுல் பகரா 285].

இவர்கள்தான் அல்லாஹ்விடம் இருந்து வந்த ரஸூர்மார்களும் எத்திவைப்பவர்களும் ஆவார்கள். நாம் அனைவரும் அதை நம்புகின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான் {அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்}[ஸூரதுல் பகரா 285].

மனிதனுடைய வாழ்க்கை ஒழிமயமாக இருப்பதற்கு ரஸூல்மார்களுடன் வேதங்களையும் அனுப்பினான். இப்ராஹிம் (அலை) அவர்களுடன் சுஹுபுகளையும் தாவுத் (அலை) அவர்களுடன் தபூர் வேதத்தையும் மூஸா (அலை) அவர்களுடன் தவ்ராத்தையும் ஈஸா (அலை) அவர்களுடன் இன்ஜீலையும் மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் புனிதமான குர்ஆனையும் அனுப்பினான்.

அல்லாஹ் கூறுகின்றான் {(இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.}
[ஸூரது ஹூத் 1].

அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் ஒழியாகவும் நேர்வழியாகவும் அதை ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் {இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!}[அன்ஆம் 155].

மேலும் கூறுகின்றான் {மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு தக்க சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.}
[ஸூரது நிஸா 174].

அல்லாஹ் நபிமார்களிலும் ரஸூல்மார்களிலும் கடைசியானவராக மனிதர்களில் சிறந்தவரான முஹம்மத் நபியை ஆக்கினான். அவருடைய தூதுத்துவத்தைக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை மேலும் முஹம்மத் அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி சொல்கிறேன் என்பதை என்ற வார்த்தையைக்கொண்டு அவனுடைய ஒருமைப்பாட்டை ஈமான் கொள்வதை தெரியப்படுத்துகின்றான். அல்லாஹ் அவரை உலகத்துக்கு ஒரு பொக்கிஷமாக அனுப்பினான். அவர் மனிதர்களை இருளில் இருந்து வெளிச்சத்துக்கும், மடமையிலிருந்து அறிவின்பாலும், வழிகேட்டிலிருந்து நேர்வழி மற்றும் ஈமானின்பாலும் வெளியாக்கினார்கள். அவருடைய பொருப்பை நிறைவேற்றி மக்களை நேர்வழிப்படுத்தினார் அவர் உம்மத்தின்பால் இதில் அதிக ஆர்வம் காட்டக்கூடியவராக இருந்தார்.

அல்லாஹ் கூறுகின்றான்

{உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.}[ஸூரது தவ்பா 128].

அல்லாஹ் அவனுடைய நபியும் ரஸூலுமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தேவையான உரிமைகளை வழங்கினான். அது மனிதர்களில் சிறந்தவர் என்றும் மற்றும் தலைமைத்துவமும் ஆகும்.

நபியவர்கள் கூறினார்கள் «நான் ஆதமுடைய மக்களின் தலைவனாகும் அதில் எந்தவித பெறுமையும் இல்லை.»(ஆதாரம் இப்னு மாஜா).

நபி (ஸல்) அவர்களின் உரிமைகள்

1.ஈமான் என்றால் அது அல்லாஹ்வின் அடியார்களும் ரஸுல்மார்களும் ஆகும். அல்லாஹ் அவர்களை உலகத்திற்கு அருளாக அனுப்பி வைத்தான். அவர்கள் தூதுத்துவத்தை நிறைவேற்றி மார்க்கத்தை எத்தி வைத்தனர்.

அல்லாஹ் கூறுகின்றான்

{எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள்!}[ஸூரது தகாபுன் 8].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.»(ஆதாரம் முல்லிம்).

2.அல்லாஹ்விடமிருந்து வந்ததை ஏற்றுக்கொள்ளுதல் உண்மைப்படுத்துதல். எந்த சந்தேகமும் இல்லாமல் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று உறுதி கொள்ளல்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாதவர்கள்}[ஸூரதுல் ஹூஜ்ராத் 15].

அல்லாஹ் கூறுகின்றான் {(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.}[நிஸா 65].

3.முஹம்மத் (ஸல்) அவர்களுடைய அன்பு

அல்லாஹ் கூறுகின்றான் {"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!}[ஸூரது தவ்பா 24].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «''உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'»(ஆதாரம் புகாரி).

4.அவருடைய பயபக்தியும் கண்ணியமும்

அல்லாஹ் கூறுகின்றான் {நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவதற்காகவும், அவனுக்கு உதவி செய்து அவனைக் கண்ணியப்படுத்திடவும், (நபியை அனுப்பினோம்).}[ஸூரதுல் பத்ஹ் 9].

மேலும் கூறுகின்றான் {இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.}[ஸூரது அஃராப் 157].

5.அவருடைய அஹ்லு பைத்தினருக்கான அன்பும் நல்லுறவும் மதுப்பீடும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அதன் வழியில் நடந்தவர்கள். கீழ் வரக்கூடிய ஹதீஸீலே எங்கள் முஹம்மத் நபியின் உபதேசம் விளங்குகின்றது. «எனது குடும்பத்தைப் பற்றி அல்லாஹ் கூறினானா? எனது குடும்பத்தைப் பற்றி அல்லாஹ் கூறினானா? எனது குடும்பத்தைப் பற்றி அல்லாஹ் கூறினானா?»(ஆதாரம் முஸ்லிம்).

நபியின் குடும்பத்தினர்- அவர்கள் மனிதர்களில் சிறப்பானவர்கள் அவரின் மனைவியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினரும் மேலும் சதகா ஹராமான அவருடன் நெருங்கியவர்களுமாகும். அவர்களை குறை கூறுவதும் ஏசுவதும் கூடாது. மேலும் அவர்களுக்கு தவறாக துஆ செய்தல் அல்லது அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்களிடம் துஆ செய்யவும் கூடாது.

6.ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினார்களே அப்படிப்பட்ட அவர்களின் தோழர்களின் மீது அன்பு கொள்ளுதல். அவர்களிலே தீய விடயங்களில் மூழ்குவது கூடாது. அல்லாஹ் அவர்களை புகழ்ந்துள்ளான்.

7.அல்லாஹ்வை ஈமான் கொண்டு அதை உண்மைப்படுத்திய ஸஹாபாக்களின் வரலாற்றில் தீய விடயங்களில் மூழ்குவது கூடாது அல்லாஹ் அவர்களை புகழ்ந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் {முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும்.}[ஸூரது பத்ஹ் 29].

அவர்களுடைய விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «இறைத்தூதர் . அவர்கள் கூறினார்கள் என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும், என் தோழர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.»
(ஆதாரம் முஸ்லிம்).

நேர்வழி பெற்ற தலைவர்களான ஸஹாபாக்களின் சிறப்பு- அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) அலி (ரழி) மற்றும் ஏனைய ஸஹபாக்கள் போன்ரவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக

அல்லாஹ் கூறுகின்றான் {ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.}[ஸூரது தவ்பா 100].

இவர்கள் அனைவரும் ரஸூலூல்லாஹ்விடமிருந்து அறிவையும் மார்க்கத்தையம் எங்களிடத்தில் சேர்த்தவர்களாகும்.



Tags: