ஈமானின் தாக்கம்:

 ஈமானின் தாக்கம்:

ஈமானின் தாக்கம்:

முஃமினுடைய வாழ்க்கையில் ஈமான் ஏற்படுத்தும் தாக்கம்

1.சுத்தமான மார்க்கத்தை காப்பாற்றுவதற்கான ஒரு முஃமீனின் அதிகமான ஆசை

அல்லாஹ் கூறுகின்றான்

{அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்}
[ஸூரது அந்நூர் 51].

ஈமான் அதனுடையவர்களை அல்லாஹ்வுடைய கடமைளுக்கு இணங்குவதற்கும் அதைப் பாதுகாப்பதற்காக விரைவதற்கும் சுமந்துள்ளது.

அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வது வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ்வுடனான வாழ்க்கை ஈமானாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்

{(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்} [ஸூரது நிஸா 65].

ஈமான் அதனுடையவர்களை சாந்தி மற்றும் அல்லாஹ்வின் பொருத்தத்திலும் சுமந்துள்ளது.

2.மறைவான மற்றும் தெளிவான இணை வைப்பை விட்டும் அல்லாஹ் தனது அடியானை காப்பாற்றியுள்ளான். எனவேதான் அல்லாஹ் துஆ கேட்பதிலோ அல்லது உதவி தேடுவதிலோ அவனையன்றி வேறு யாரிடமும் கேட்க வேண்டாம் என்று தடுத்துள்ளான். நல்லதோ கெட்டதோ அது அல்லாஹ்விடமிருந்தே வருகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {ஏ ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்வீராக} ஈமானின்பால் அழைத்து அதன் மகத்துவமான இடத்தின்பால் தூண்டுதல்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை.}[ஸூரது அன்ஆம் 17].

3 அல்லாஹ்வின் விடயத்தில் அன்பும் அல்லாஹ்வின் விடயத்தில் கோவமும் இதுதான் ஈமானின் கட்டளைப் பத்திரங்களாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம்.}[ஸூரது ஹூஜ்ராத் 10].

முஹாஜிரீன்களுக்கும் மற்றும் அன்சாரிகளுக்கும் மத்தியில் இருந்த சகோதரத்துவத்திற்கு சாட்சியாகும். மேலும் அவர்கள் அவர்களுடைய தோழர்களுக்காக உயிரையும் சொத்துக்களையும் துச்சமாக மதித்தார்கள்.

நபியவர்கள் கூறினார்கள்- «உங்களில் ஒருவர் உங்களுக்கு விரும்புவதை உங்கள் சகோதரனுக்கு விரும்பாதவரை பூரணமான முஃமினாக ஆகமாட்டார்.»(ஆதாரம்- புகாரி).

4.அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதில் பொருமையாக இருத்தலும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக அவர்களுடைய சொத்துக்களை அற்பமாக கருதுதலும்

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்}
[ஸூரது ஹூஜ்ராத் 15].

5.அல்லாஹ்வுடனும் அவனுடைய வாக்குறுதியுடனும் மேலும் அதில் இருக்கும் சந்தோசத்துடனும் உள்ளம் இணைந்துள்ளது. உலகத்தின் சுவர்க்கமானது ஈமானுடன் இணைந்திருப்பதும் மேலும் அல்லாஹ்வைப் பின்பற்றுவதும் அவனுக்காக வாக்களிக்கப்பட்ட மறுமையின் சுவர்க்கத்தை ஆதரவு வைப்பதும் வியர்வை சிந்தி களைப்புடன் செய்த அனைத்து செயல்களுக்கும் கூலியை ஏதிர் பார்ப்பதுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போருக்குச் செல்லாது தங்குவதும், அவரது உயிரை விடத் தமது உயிர்களை விரும்புவதும் மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகம், சிரமம், பசி ஏற்பட்டாலும், (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் மிதித்தாலும், எதிரியிடமிருந்து ஒரு தாக்குதலைப் பெற்றாலும் அதற்காக அவர்களுக்கு ஒரு நல்லறம் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான். அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ எதை (நல்வழியில்) செலவிட்டாலும், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குப் பரிசளிப்பதற்காக அவற்றை அல்லாஹ் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.}
[ஸூரது தவ்பா 120-121].

இவை அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டவர்களுக்கும் மேலும் அல்லாஹவிடத்தில் கொடுக்கல் வாங்கல்களில் உண்மையாக இருந்தவர்களுக்குமாகும்.

6.அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய ரஸூலுடைய நேசத்தை அடைந்து கொள்ளல்

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வும், அவனது தூதரும், மேலும் நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.}[ஸூரதுல் மாஇதா 55].

மேலும் அல்லாஹ் பொருப்பேற்கின்றான் அதாவது- அவனுடைய இரக்கம் அவனுடைய தீனுக்கான உதவி அவனுடைய நேசர்களுக்கு இரக்கம் காட்டுவது போன்ற விடயங்களையாகும். மேலும் இவை அனைத்திற்கும் மாறாக நடப்பவர்களிடமிருந்து நீங்குகின்றான். அவர்கள்தான் அல்லாஹ்வின் கோவக்காரர்ரகள் ஆவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.}
[ஸூரதுல் முஜாதலா 22].

மாறாக ஒரு முஃமின் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் மேலும் முஃமீன்களையுமே ஏற்றுக்கொள்வான். எந்த காபீர்களையும் நேசர்களாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்

{நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது}
[ஸூரது ஆலு இம்ரான் 28].

7.நல்ல குணங்களை அடைதல்

நபியவர்கள் கூறினார்கள்-

«வெக்கமும் ஈமானும் நெருங்கிய சொந்தமாகும் அவை இரண்டில் ஒன்று இல்லாமல் போனால் மற்றதும் இல்லாமல் ஆகிவிடும்.»(ஆதாரம் பைஹகிி).

ஈமானின் ஒரு பகுதிதான் மகத்தான நற்குணங்களாகும். ஒரு முஃமின் எந்தப்பிரச்சினையுமின்றி உலகத்தில் வாழ்வதற்காக தனது சகோதரனுடன் எந்தப் பிளவும் எதிர்ப்பும் இல்லாமல் அழகான முறையில் நடந்து கொள்வான். அவன்தான் முஃமினாவான். இது முஃமின் இல்லாதவரிடம் இருக்காது.8.உண்மையான சந்தோசமும் மன நிம்மதியும் இவ்வுலகில் மனிதன் சுவர்க்கத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வை தருகின்றது. ஏனெனில் அவருக்கு ஒரே இறைவனான அல்லாஹ் இருக்கிறான். ஒரே நபியான முஹம்மத் நபி இரக்கிறார். ஒரே வழியான அல்லாஹ்வுடைய பாதை இருக்கின்றது. அதே போன்று ஒரே நோக்கமான சுவனம் இருக்கின்றது.

உங்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பிப்பாருங்கள் உளவியல் மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அவர்களிடம் தூக்கமின்மை கவலை, விரக்தி, இரவில் பயப்படுதல், தனிமையில் பேசுதல் இவை போன்ற பலவிதமான முறைப்பாடுகளை உங்களுக்கு கேட்களாம். இவை அனைத்திற்கும் காரணம் அல்லாஹ்வை ஈமான் கொள்வதை விட்டும் தூரமாகி இருப்பதுதான் என்பதை உங்களுக்கு கண்கூடாக கண்டு கொள்ளலாம். அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளாமல் விலகி இருந்ததும் உலக விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனுடனே தொடர்பாக இருந்ததுமே இவற்றுக்கான காரணம் என்பதை உங்களுக்கு காணலாம். ஆன்மீகப்பகுதியை பின்பற்றுவது ஒரு மனிதனின் கட்டாயக் கடமையாகவும் தேவையாகவும் உள்ளது. இது அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வதின் மூலமும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துவதின் மூலமும் அவனை தினமும் நினைவுபடுத்துவதின் மூலமும் மலக்குமார்கள் வேதங்கள் ரஸூல்மார்கள் மறுமை நாள் நன்மை தீமை போன்ற அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றது என்பதை ஈமான் கொள்வதின் மூலமும் இந்த ஆன்மீகத் தன்மை ஒரு மனிதனிடத்தில் ஏற்படுகின்றது.

அதிகமான படைப்பினங்களும் மனிதர்களும் உள்ளத்துக்கு மருந்தூட்டுதல் உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ளுதல் அழியக்கூடிய உலகில் ஒரு சொர்க்கத்தைக் காணுதல் என்ற அனைத்து விடயங்களையும் மறந்து வாழ்கின்றனர். அவர்கள் தான் விரும்புகின்றவற்றை செய்து கொள்வதுமில்லை தனது ஆரம்பப் பாதையைத் தேடி ஓய்வடைவதுமில்லை.

ஆன்மீகப்பாதையை பின்பற்றுவது அது ஈமானின் மூலமே நடை பெறும் ஏனென்றால் ஆன்மா என்பது அல்லாஹ்விடமிருந்து வருகின்றது. உடம்பை அல்லாஹூத்தஆலா மண்னினால் படைத்துள்ளான். ஒவ்வொறு முறையும் ஆன்மீகப்பகுதி நிரம்பி வழியும் போது உங்களுடைய உள்ளம் உயர்வடைவதோடு அது அமைதியும் அடைகின்றது. அதே போல ஏனைய கீழ்த்தரமான விடயங்களை விட்டும் அது தூய்மை அடைகின்றது. இந்த ஆன்மீகப்பகுதி எப்போதெல்லாம் பொடுபோக்கான நிலமைக்கு மாறுகின்றதோ அப்போது உங்களுடைய உள்ளமானது ஒரு மிருகத்தனமான வழியை தேர்ந்தெடுக்கும் அந்நேரத்தில் உள்ளம் இருக்கமாகுவதோடு இவ்வுலகமனைத்தும் அவர் கண்களுக்கு இருண்டதாகத் தெரியும்.



Tags: