அல்லாஹ்:

 அல்லாஹ்:

அல்லாஹ்:

அவனே வணங்கப்படக்கூடியவன் அவனே புகழுக்குறியவன்

வானமும் வானங்களில் உள்ளவையும் மேலும் பூமியும் பூமியில் உள்ளவையும் அவனை துதிக்கின்றன.

இரவும் அது சூழ்ந்து கொள்ளக்கூடியதும் பகழும் அதில் வெளிப்படக்கூடியதும் நிலத்தில் உள்ளவைகளும் கடலில் உள்ளவைகளும் இது போன்ற அனைத்தும் அவனைத் துதிக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான் {அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்!}
[ஸூரதுல் இஸ்ரா 44].

அல்லாஹ் எவருக்கும் தெரிந்திராத அனைத்தையும் அவன் அறிந்தவன் உள்ளங்கள் அவனை அறிந்திடும் அவனை அறிவதால் ஆத்மாக்கள் அமைதியுறும்.

உள்ளங்கள் அவனை வணங்கிடும் ஆன்மாக்கள் அவனின் மன்னிப்பிற்காய் ஏங்கி நிற்கும் படைப்பினங்கள் அவனை நினைவு கூறுவதால் உள அமைதி பெறும்.

அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் பிளவுகளையும் தேவை உள்ள தன்மையாயும் இயல்பாகவே உருவாக்கி உருவாக்கி உள்ளான்.

அல்லாஹ் தனது இறைமைத்தன்மைக்கு அனைத்து உயரிய பண்புகளையும் கற்றுக்கொடுத்துள்ளான்.

அல்லாஹ்வுக்கு அடியார்களின் தேவை

கஷ்டம் கவலைகளின் பால் ஒதுங்கக்கூடிய தேவை உடையவனாக ஒரு அடியான் இருக்கின்றான். அதற்காகவே அவன் உறுவாக்கப்பட்டுள்ளான். எனவே அவன் அனைத்து வேலைகளிலும் தனது இறைவனின் தேவை உடையவனாக இருக்கின்றான். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடியவனாகவும் இருக்கின்றான்.

ஒரு அடியானுக்கு அல்லாஹ்விடம் தேவை ஏற்பட்டால் அவன் அவனுடை கடமைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான் மேலும் அல்லாஹ்விடத்தில் மன உறுதியுடனும் பொருமையுடனும் இருப்பதால் அவனை அல்லாஹ் படைப்பினங்களுக்கு தலைவனாகவும் ஆக்கினான். எனவே அவன் பின்பற்றப்படக்கூடிய தலைவனாக ஆகினான்.

{அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நமது வசனங்களை உறுதியாக நம்பியபோது நமது கட்டளைப்படி வழிகாட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்} [ஸூரது ஸஜ்தா 24].

இதனால்தான் அல்லாஹ் பொருமையும் உள்ளச்சத்தையும் மார்க்கத்தின் தலைமைத்துவமாக ஆக்கியுள்ளான் .

படைப்பினங்கள் படைப்பாளன் அல்லாஹ்வுடன் ஒரு தொடர்பிலே உறுவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது அழகான முறையில் அன்பு காட்டுவதற்கும் மேலும் கண்ணியப்படுத்துவதற்கும் உறுவாக்கப்பட்டுள்ளனர். அவன்தான் அல்லாஹ்.

அல்லாஹ் எந்த ஒரு அடியானை கண்ணியப்படுத்துகின்றானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை லேசாக்குவான்.

அறிவு அதைக் கொண்டு கண்ணியப்படுத்தப்படுகின்றது.

அறிவினுடைய சிறப்பு அதனை அதனை அறிந்து கொள்பவரின் சிறப்பில்தான் தங்கியுள்ளது. அல்லாஹ்வைத் தவிர அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் நுன்னறிவையும் படைப்பினங்கள் மீதான தனது உறிமைகளையும் அறிவித்துக் கொடுப்பதில் சிறந்தவன் யாருமில்லை. இதனால்தான் ஏகத்துவமானது மார்க்கத்தின் கேந்திரஸ்தலமாக இருக்கின்றது. அதே போன்று குர்ஆனில் 1/3 க்கு சமனாகக்கூடிய அந்த சூறாவும் ஏகத்துவத்தின் தெளிவைத்தான் எடுத்துக்கூறுகின்றது

ஈமானைத் தவிர அதிகரிக்கக்கூடிய அனைத்தும் தீர்ந்து விடும் அல்லாஹ்வைத் தவிர உதவி செய்பவர்களும் பக்கபலமாக இருப்பவர்களும் கை விட்டு விடுவார்கள்

அனைத்திற்கும் ஆதாரம் உண்டு

அல்லாஹ் அவனுடைய படைப்பினங்களை வைத்து அவன் இருப்பதையும் அவனுடைய ஒருமைப்பாட்டையும் அவனுடைய பூரணத்துவத்தையும் மேலும் மகிமையையும் கண்ணியத்தையும் அத்தாட்சியாக வைத்திருக்கின்றான். எனவே அந்த அத்தாட்சிகளைப் பார்த்து சிந்திக்குமாறு ஏவுகின்றான். சிந்திப்பவர்களுக்கும் புத்தி உள்ளவர்களுக்கும் இதில் அத்தாட்சி இருப்பதாக நாம் அறிவித்தோம்.

நாங்கள் தெளிவான விடயங்களை குறிப்பிடக்கூடிய குர்ஆன் வசனங்களை சற்று நோக்குவோம்

{உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?}[ஸூரதுத் தாரியாத் 20-21].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

{வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்!'' என்று கூறுவீராக!}
[ஸூரது யூனுஸ் 101].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

{உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும்507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா? உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்கு தக்க சான்றுகள் உள்ளன.}
[ஸூரது யூனுஸ் 3-6].

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் {இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்கு தக்க சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)}
[ஸூரது ஆலு இம்ரான் 190-191].

மேலும் கூறுகின்றான் {உங்களைப் படைத்திருப்பதிலும், ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன}[ஸூரது அல் ஜாசியா 4].

மேலும் கூறுகின்றான் {அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும்}
[ஸூரதுல் ஹஜ் 46].

மேலும் கூறுகினறான்

{அவர்களுக்கு மேலே உள்ள வானத் தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் மேலும் கூறுகின்றான்

{அவர்களுக்கு மேலே உள்ள வானத் தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை} [ஸூரதுல் காப் 6].

மேலும் கூறுகின்றான்

{இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும்}[அந்நம்ல் 88].

மேலும் கூறுகின்றான்

{அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன}[ஸூரது தாஹா 54].



Tags: