அல்லாஹ்விடம் அடியானின் தேவை

 அல்லாஹ்விடம் அடியானின் தேவை

அல்லாஹ்விடம் அடியானின் தேவை

எனது அடியான்

{அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு புதிய படைப்பைக் கொண்டு வருவான்} (ஸூரது பாதிர் 15).

அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்:

«என் அடியார்கள! அநியாயம் செய்வதை என் மீது ஹராமாக்கிக் கொண்டதைப் போலவே உங்களுக்கும் ஹராமாக்கியுள்ளேன் ஆகவே உங்களில் எவரும் அநியாயத்தின் அருகில் கூட அணுகவேண்டாம்

என் அடியார்களே உங்களில் எவர்கள் என்னால் நேர்வழி அடையப்பெற்றார்களோ அவர்களே ஜெய சீலர்கள் மற்றவர்கள் வழிதவறியவர்கள் ஆகவே நீங்கள் நேர்வழி பெற என்னிடம் பிராத்தனை புரியுங்கள் நிச்சயமாக உங்களின் பிராத்தனைகளை நான் ஏற்று கொள்கிறவனாக இருக்கிறேன்

என் அடியார்களே நான் உங்களில் எவருக்கு இரணம் அளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்றவர்கள் பசியாளிகளாக இருக்கிறார்கள் ஆகவே உங்களுக்குரிய இரணத்தை என்னிடம் கேளுங்கள் நிச்சயமாக நான் இரணம் அளிப்பதில் மிகச் சிறந்தவனாகவும் நிகரற்றவனாகவும் இருக்கிறேன்

என் அடியார்களே உங்களில் எவர்களுக்கு நான் ஆடை அளித்துள்ளேனோ அவர்களைத் தவிர ஏனையோர்கள் நிர்வாணஸ்தர்கள் ஆகவே உங்களின் உடைகளுக்கும் என்னிடமே பிராத்தனை புரியுங்கள் ஏனெனில் திண்ணமாக நான் உங்களின் தேவைகளை நிறைவு செய்யும் கிருபையாளனாக இருக்கிறேன்

என் அடியார்களே நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் எனவே உங்களின் பாவங்களுக்காக என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் ஏனெனில் நான் உங்களின் பாவங்களை மன்னித்து கிருபை செய்வதில் அளவற்ற அருளாளனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறேன்

என் அடியார்களே என் தண்டணையைத் தாங்கி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடையாது ஆகவே என் தண்டனை ஏற்படும் முன்னே அதனை விட்டும் என்னிடம் பாதுகாப்பு தேடிகொள்ளுங்கள் ஏனெனில் நான் பாதுகாப்போரில் மிக சிறந்த பாதுகாவலனாக இருக்கிறேன்

என் அடியார்களே என்னை தவிர வேறு எந்த பொருளினாலும் உங்களுக்கு எவ்விதப் பயனையும் அளித்து விட முடியாது எனவே உங்களின் எல்லா வகையான நலனுக்கும் பலனுக்கும் என்னையே பொறுப்பாளனாக்குங்கள் ஏனெனில் நிச்சயமாக நான் பொறுப்பாளர்களிலெல்லாம் மிகச்சிறந்த பொறுப்பாளனாக இருக்கிறேன்

என் அடியார்களே நீங்களாே உங்களுக்கு முன்னுள்ளோர்களோ பின்னுள்ளவர்களோ மற்ற ஜின் இனங்களோ எவராக இருப்பினும் சரியே என்னையன்றி என்னால் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் தங்களை ஆதரித்துப் பாதுகாக்கும் என்று நம்புவீர்களேயானால் அதனால் எனக்கொன்றும் நட்டமில்லை உங்களுக்கு நீங்களே நட்டத்தை உண்டு பண்ணிக் கொள்கிறீர்கள் நெறி தவறி அநியாய வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களை நிச்சயமாக நான் நேசிக்கவே மாட்டேன்

என் அடியார்களே நீங்களும் ஜின்களும் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு பொருளையும் வகைக்கு ஒன்றாகத் தனி தனியாக என்னிடம் கேட்டு அதை நான் உங்களுக்கு கொடுப்பேனேயானாலும் எனனுடைய கஜானா இம்மியளவு கூட குறைந்துவிடாது ஏனெனில் என்னுடைய கஜானா எடுக்க எடுக்க குறையாதது

என் அடியார்களே உங்களுக்கு நன்மைகளை தருவதும் தீமைகளை தருவதும் உங்களின் செய்கைகள் தான் நான் உங்களோடு பின்னிப்பிணைந்து உங்களின் ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குகிறேன் உங்களுக்களித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் உங்களின் செயலுக்கு தக்க கூலியை கியாமத்து நாளில் குறைவின்றி கொடுப்பேன்

அந்நாளில் நல்லவை செய்து நலம் பெற்ற நல்லோர்கள் தங்களின் நாயனை உளமாரப் போற்றிபுகழ்வார்கள் வாயார வாழ்த்திடுவார்கள்

தீயவை செய்து திக்கி திணறித் திண்டாடும் தீயோர்கள் தம்மைத்தாமே நொந்து கொண்டு துடிப்பார்கள் கண்ணீர் வடிப்பார்கள்» (ஆதாரம்- முஸ்லிம்).

«என் அடியார்களே உங்களுக்கு நன்மைகளை தருவதும் தீமைகளை தருவதும் உங்களின் செய்கைகள் தான் நான் உங்களோடு பின்னிப்பிணைந்து உங்களின் ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குகிறேன் உங்களுக்களித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் உங்களின் செயலுக்கு தக்க கூலியை கியாமத்து நாளில் குறைவின்றி கொடுப்பேன்

அந்நாளில் நல்லவை செய்து நலம் பெற்ற நல்லோர்கள் தங்களின் நாயனை உளமாரப் போற்றிபுகழ்வார்கள் வாயார வாழ்த்திடுவார்கள்

தீயவை செய்து திக்கி திணறித் திண்டாடும் தீயோர்கள் தம்மைத்தாமே நொந்து கொண்டு துடிப்பார்கள் கண்ணீர் வடிப்பார்கள்» (ஆதாரம்- முஸ்லிம்).

நீ அல்லாஹ்வை நினைவு படுத்து அல்லாஹ் உன்னை நினைவுபடுத்துவான்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறுகிறார்கள் ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் இருந்தேன்

«நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களை தன் வாகனத்தில் பின்னே ஏற்றி செல்லும் போது, ஏ! சிறுவனே உனக்கு சில வார்த்தைகளை கற்றுத்தறுகின்றேன், நீ அல்லாஹ்வின் சட்டங்களை பாதுகாத்துக் கொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அவனை (உதவியை) நீ உன் முன்னே கண்டுகொள்வாய். நீ ஏதும் கேட்டால் அவனிடமே கேள். உதவி தேடுவதானாலும் அவனிடமே தேடு. மேலும் சமூகத்தவர் அனைவரும் உனக்கு ஒறு நலவை செய்ய ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் விதித்ததைத் தவிர எந்த நலவையும் அவர்களால் செய்யமுடியாது. மேலும் சமூகத்தவர் அனைவரும் உனக்கு ஒறு தீங்கு செய்ய ஒன்றுசேர்ந்தாலும் அல்லாஹ் விதித்ததைத் தவிர எந்த தீங்கையும் அவர்களால் செய்யமுடியாது. எழுது கோள்கள் உயர்ந்த்விட்டன. ஏடுகள் காய்ந்துவிட்டன.’ என்று கூறினார்கள்»(ஆதாரம்- திர்மதிி).

அல்லாஹ்: யார் அவனை அதிகமாக அறிகின்றானோ அவனே அதிகம் பயப்படுவான்

Tags: