அல்லாஹ்வுடைய திருப் பெயரையும் பண்புகளையும் விளங்குவதன் விதியும் விளிப்புணர்வும்

 அல்லாஹ்வுடைய திருப் பெயரையும் பண்புகளையும் விளங்குவதன் விதியும் விளிப்புணர்வும்

அல்லாஹ்வுடைய திருப் பெயரையும் பண்புகளையும் விளங்குவதன் விதியும் விளிப்புணர்வும்

{அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.}. [ஸூரது அஷ்ஷூரா 11]

1 அல்லாஹ்வுடைய அனைத்து பெயர்களும் அழகானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. }. [ஸூரதுல் அஃராப் 180]

அல்லாஹ்வுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அவனை வனங்குவதற்காகவும் அவனை விரும்புவதற்காகவும் அவனை பயப்படுவதற்காகவும் மேலும் அவனிடம் ஒதுங்குவதற்காகவும் அறிந்து வைத்துள்ளோம்.

2 அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் இரண்டு அடிப்படையான விடயங்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றது. அவை இரண்டுக்கும் அப்பால் மூன்றாவதாக ஒன்றுமில்லை அவையிரண்டும்- அல்லாஹ்வுடைய குர்ஆனும் அவனுடைய ரஸூலின் ஹதீஸூமாகும். இவை இரண்டிலும் அல்லாமல் வேறு எதிலும் அல்லாஹ்வுடைய திருப் பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்த முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் உறுதிப்படுத்தியதை நாங்களும் உறுதிப்படுத்துகின்றோம். அவனுடைய பூரணத்துவத்திற்கு விரோதமானவர்களையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். இவை இரண்டிலும் உறுதி செய்து வரவில்லை என்றால் அந்த சொல்லை குறைகூறாமல் அவ்வாரே நிறுத்தி விட வேண்டும். அவை இரண்டிலும் உறுதி செய்து வரவில்லை என்றால் அதை குறை கூறவோ உறுதி செய்யவோ கூடாது. மாறாக அதன் கருத்து அதிலே தனிப்பட்டு இருக்கும். அல்லாஹ்வுக்கு தகுந்த உரிமையை கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அதன் கருத்து தகுந்ததாக இல்லை என்று கருதினால் அதற்கு மறுப்பு தெரிவிப்பது கடமையாகும்.

3 பேச்சு என்பது அல்லாஹ்வின் பண்புகளில் இருந்தும் உள்ளதாகும். அது அவனுக்கான தனிப்படையான பேச்சாகும். அதே போன்று அவனுக்கென இருக்கும் பண்புகளை நாம் எவ்வாறு என்று அறியமாட்டோம். மேலும் நாங்கள் அவனுடைய அழகான பண்புகளையும் எவ்வாறு என்று அறியமாட்டோம். என்றாலும் எந்த விதமான உதாரணமும் மாதிரியும் மறுத்தலும் திரிவுபடுத்தலும் இல்லாமல் உறுதியாக நம்பி அங்கீகரித்துள்ளோம்.

4 அல்லாஹ்வுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் பொய்யான அல்லது வினாவான கருத்துக்கள் அல்லாமல் உண்மையானதாகவே உள்ளது. அது அல்லாஹ்வுக்கே உரிய பூரணமான நிலையான பண்புகளை அறிவிக்கின்றன. உதாரணமாக- சக்திமிக்கவன், மிகவும் அறிந்தவன், நுட்பமானவன், கேட்டகக்கூடியவன், பார்க்கக்கூடியவன் போன்றவைகளாகும். இந்த பெயர்கள் அல்லாஹ்வுக்கே உரிய பண்புகளை அறிவிக்கின்றன. மேலும் அல்லாஹ் அதைக்கொண்டு சக்தியையும், அறிவையும், நுட்பத்தையும், கேட்பது, பார்ப்பது போன்ற விடயங்களையும் மேற்கொள்கின்றான்.

5 அல்லாஹ் அவனை குறைகளை விட்டும் இயாலமலாக்க முடியாத அளவுக்கு தூய்மைப்படுத்துகின்றான். அவனுக்கு கூறப்படும் அனைத்து குறைகளை விட்டும் அவன் தூய்மையாகிவிட்டான். ஒவ்வொரு சிறப்பியல்பும் விரிவாக பூரணத்துவத்தை உறுதிப்படுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்

{அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;பார்ப்பவன்.}. [ஸூரது அஷ்ஷூரா 11]

6 அல்லாஹ்வுடைய பெயர்களை ஈமான் கொள்ளுதல். பெயரைக் கொண்டும் பண்பைக் கொண்டும் ஈமான் கொள்வதை வேண்டி நிற்கின்றது. அந்தப் பெயர்கள் ஒவ்வொரு கருத்தைக் கொண்டுள்ளது. பெயர் ஒத்துப் போகக்கூடிய தாக்கங்களை ஈமான் கொள்ளுதல் வேண்டும். அல்லாஹ்வுடைய இரக்கமுள்ளவன் என்ற பெயர் அல்லாஹ்வின் இரக்கத்தன்மையை உள்ளடக்கியுள்ளது. அவனுடைய அடியார்களுக்கு அவனுடைய ரஹ்மத்தை வழங்குவதால் இந்தப் பெயர் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் விளங்குவதற்கு உதவக்கூடிய முக்கியமான விளிப்புணர்வுகள் அவை-

1 நிச்சியமாக அல்லாஹ்வின் பெயர்கள் வரையருக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்படவில்லை

கீழ் வரக்கூடிய ஹதீஸ்

«நீ உனக்கு பெயர் சூட்டி வைத்துள்ள அனைத்து பெயர்களையும் வைத்து நான் உன்னிடம் கேட்கின்றேன் அல்லது அந்தப் பெயரை படைப்பினங்களில் யாருக்காவது கற்றுக் கொடுத்திருப்பாய் அல்லது குர்ஆனிலே இறக்கி வைத்திருப்பாய் அல்லது மறைவான அறிவைக் கொண்டு உனக்கு நீ சூட்டியுள்ள அந்தப் பெயரைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன். ». (ஆதாரம் அஹ்மத்)

2 அல்லாஹ்வுடைய பெயர்கள் அவனை ஒருமைப்படுத்துவதைக் குறிக்கின்றது. அதற்கு இணையாக ஒன்றுமில்லை. அல்லாஹ்வுடைய பெயர்கள் அல்லாத பெயர்களைக் கொண்டு அழைக்ககூடாது. உதாரணமாக- அல்லாஹ், அருளாளன் இவை அல்லாத அவனுடைய பெயர்களைக் கொண்டும் அழைக்க முடியும். அந்த பெயர்கள்களும் பண்புகளும் அல்லாஹ்வுக்கு பூரணமானதாக இருக்க வேண்டும்.

3 அல்லாஹ்வுடைய பெயர்களின் மூலம் அவனுடைய பண்புகள் எடுக்கப்படுகின்றது. ஒவ்வொறு பெயரும் ஒரு பண்பைக் கொண்டுள்ளது .ஆனால் பண்புகளைக் கொண்டு பெயர்கள் எடுக்கப்படமாட்டாது. நாம் அல்லாஹ்வுக்கு கோவப்படுகின்றான் என்று கூறுகின்றோம் மாறாக அவன் கோவப்படக்கூடியவன் என்று கூறவில்லை. அல்லாஹ் இந்த விடயங்களை விட்டும் உயர்ந்தவன்.



Tags: