ஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்

 ஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்

ஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்

1 அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் கொண்டு வணங்குதல்- ஒரு அடியான் அதை அறிந்தான் என்றால் அதை நம்பிக்கை கொண்டு அவன் அவனுடைய இறைவன் நாடியவாறு மாறுகின்றான். அதனுடைய கருத்தை அறிந்தான் என்றால் அவனுடைய இறைவன் மீதுள்ள ஈமான் அதிகரிக்கும். அல்லாஹ்வை யார் அறிகின்றானோ அவனுடைய உள்ளத்தில் அவன் மகத்துவம் பெறுகின்றான். இதனால்தான் சொல்லப்படுகின்றது யார் அல்லாஹ்வை மிக அறிகின்றானோ அவன் அல்லாஹ்வை மிகவும் பயப்படுகின்றான்.

2 ஈமான் அதிகரித்தல்

அல்லாஹ்வுடைய அழகான பெயர்களையும் மேலும் உயர்ந்த பண்புகளையும் அறிவதனால் அல்லாஹ்வின் மகத்துவத்தை ஒரு அடியான் புரிந்து கொள்கின்றான். இதனால் அவனுடைய ஈமான் அதிகரிக்கின்றது மேலும் அல்லாஹ்வுக்கான பணிவும் அதிகரிக்கின்றது

{நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிகமாக்குகின்றான்,}

[ஸூரது முஹம்மத் 17]

3 அல்லாஹ்வின் ஞாபகம்

யார் அல்லாஹ்வை அறிகின்றானோ அவன் அவனை விரும்புவான். மேலும் யார் அவனுடைய இறைவனை ஞாபகம் செய்து விரும்புகின்றானோ அவனுடைய உள்ளத்தை அன்பு ஆட்சி செய்யும். மேலும் அது விரும்பக்கூடியதாக ஆகிவிடும் அதில் கோபம் என்பது இருக்காது.

4 அல்லாஹ்வுடைய அன்பு

அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.}. [ஸூரதுல் பகரா 165]

ஒரு அடியான் அவனுடைய இறைவனின் பண்புகளின் மகத்துவத்தை அறிந்தால் அவனுடைய உள்ளம் அவன் இறைவனின் பக்கம் திரும்பிவிடும். அல்லாஹ் அவனுடன் ஒன்றுபட்டு விடுவான் அழகான மகத்துவமான பூரணமான அவனுடைய இறைவனைக் கொண்டு அவனுடைய ஆத்மா சந்தோசப்படும். இவ்வாறு ஒரு அடியான் அவனுடைய இரக்கமான இறைவனுடன் போசுவதால் சந்தோசப்படுகின்றான். மேலும் அவன் துஆவைக் கொண்டும் பயத்தைக் கொண்டும் ஆதரவைக் கொண்டும் தூய்மை அடைகின்றான். நிச்சியமாக அல்லாஹ்வுடைய இரக்கம் இவை அனைத்தையும் கொடுக்கக்கூடியது. மேலும் அவனை அல்லாஹ்வை விரும்புபவனாக பெற்றுக் கொள்வாய். அவன் அல்லாஹ் விரும்புவதை விரும்புகின்றான் மேலும் அல்லாஹ் விரும்புபவர்களையே அவனும் விரும்புவான்.

5 அல்லாஹ்வுக்கு வெக்கப்படுதல்

அல்லாஹ்வுடைய கௌரவத்தை நீ அறிந்து கொள்ளும் போது அவனிடத்தில் உனது வெக்கமும் அதிகரிக்கும். நீ ஒரு அடியானையும் பாதுகாப்பாய் மரணத்தையும் அழுகையையும் அதிகம் நினைவு கூறுவாய். அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் வகையாக உனது உடல் உருப்புக்களையும் பாதுகாத்துக் கொள்வாய்.

6 உள்ளத்தால் பணிவாக நடந்து கொள்ளல்

நீ அவனுடைய கண்ணியத்தை அறிந்து கொண்டால் நீ உன்னுடைய அவமரியாதையையும் அறிந்து கொள். மேலும் அவனுடைய சக்தியை நீ அறிந்து கொண்டால் நீ உன்னுடைய பலகீனத்தையும் அறிந்து கொள். நீ அவனுடைய அரசாட்சியை அறிந்து கொண்டால் நீ உன்னுடைய ஏழ்மையையும் அறிந்து கொள். மேலும் நீ அவனுடைய பூரணத்துவத்தை அறிந்து கொண்டால் உன்னுடைய குறையையும் அறிந்து கொள் நீ அவனுடைய பூரணமான குணத்தையும் அழகான பெயர்களையும் அறிந்து கொண்டால் உன்னுடைய ஏழ்மையை அறிந்து கொள் இதுதான் உனது சிறுமை நீ ஒரு அடியானாகவே இருக்கினறாய்.

ஒருவருக்கு அல்லாஹ்வுக்கே உரிய விடயங்களை மொழிவது கூடாது மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி வர்ணிக்காததை வர்ணிக்கக்கூடாது. அவனுடைய விடயத்தில் அபிப்ராயத்தில் எதையும் சொல்லக்கூடாது. அகிலாத்தின் இறைவன் அல்லாஹ் இவை அனைத்தையும் விட உயர்ந்தவன்.

இமாம் அபூ ஹனீபா



Tags: