மூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்

 மூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்

மூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் ஸூரதுல் அஃராப்

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்}
[ஸூரதுல் அஃராப் 180]

அ- அல்லாஹ்வுடைய அழகான பெயர்கள் என்பன் கருத்து

அல்லாஹ்வுடைய பெயர்கள் அனைத்தும் புகழப்படக்கூடியது. அதை அல்லாஹ் அழகானது என்று வர்ணிக்கின்றான்

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்} [ஸூரதுல் அஃராப் 180]

வார்த்தையைக் கொண்டு மாத்திரம் அழகானதாக இருக்க முடியாது. மாறாக அதனுடைய பூரணத்துவத்தையும் வர்ணனைகளையும் அது அறிவிக்கின்றது. அவனுடைய பெயர்கள் அனைத்தும் புகழப்படக்கூடியவையாகவும் உயர்ந்ததாகவும் உள்ளது. இதன் காரணமாகத்தான் அழகானது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அவனுடைய பண்புகள் அனைத்தும் பூரணமானதாகும். அவனுடைய அனைத்து அடைமொழிகளும் கண்ணியமானதாகும். மேலும் அவனுடைய செயல்கள் அனைத்தும் நூட்பமானதும் அருளானதும் சீரானதும் மேலும் நீதியானதுமாகும்.

ஈமானில் இருந்தும் உள்ளதுதான் அல்லாஹ்வுடைய பெயர்களைக் கொண்டும் அவனுடைய பண்புகளைக் கொண்டும் ஈமான் கொள்வதாகும். நபியவர்களின் ஹதீஸிலும் அல்லாஹ்வுடைய குர்ஆனிலும் வந்திருப்பதைப் போல அது இரண்டு அடிப்படையான விதிகளைக் கொண்டது

முதலாவது விதி

அல்லாஹ்வுடைய பெயர்களை அவனது தகுதிக்கு ஏற்றவாரு உறுதிப்படுத்துதல். எவ்வித திரிவுபடுத்தல், மறுத்தல், ஒப்பாக்குதல், வடிவு கொடுத்தல் போன்ற எந்தக் காரணங்களையும் செய்யாமல் இருத்தல். {அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;பார்ப்பவன்.}. [ஸூரது அஷ்ஷூரா 11]

இரண்டாவது விதி

அதனுடைய கருத்தை விளங்கிக் கொள்ளுதல் மேலும் பண்புகளை உறுதிப்படுத்துதல் அது அவனுடைய மாதிரியை பற்றி ஆராயாமல் பெயரை மட்டும் உள்ளடக்கி உள்ளது.

அல்லாஹ் கூறிகின்றான்

{ அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்}
[ஸூரத் தாஹா 110]

அல்லாஹ் அவனுடைய அழகான பெயர்களையும் மேலும் உயர்ந்த பண்புகளையும் அறிந்து கொள்வது ஒரு உயர்ந்த நோக்கம் என்பதை தெளிவுபடுத்துகின்றான் அது ஒரு வணக்கமாகவும் மாறுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்

{ "அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்தபோதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'' } [ஸூரதுல் இஸ்ரா 110]

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் } [ஸூரதுல் அஃராப் 180]

ஆ - அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்

என்பதந் கருத்து

அல்லாஹ்வுடைய அழகான பெயர்களைக் கொண்டு அழைத்தல். அழைப்பு இரண்டு வகையாகும்- பிரார்த்தித்தல் ஒரு அடியானுடைய வார்த்தையைப் போல அல்லாஹ்வே எனக்கு தா, இரக்கமானவனே எனக்கு இரக்கம் காட்டு, சங்கையாளனே என்னை சங்கைப்படுத்து போனறவையாகும். மேலும் புகழ்வற்கும் வணங்குவதற்கும் அழைப்பது பிரார்த்திப்பதற்கு மாத்திரமில்லைமல் அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் கொண்டு அவனை புகழவும் வேண்டும். புகழ்ச்சி என்பது அல்லாஹ்வை அவனுடைய உயர்ந்த குணங்களாலும் மேலும் அவனுடைய பெயர்களாலும் நாவாலோ அல்லது உள்ளத்தாலோ புகழ்வதாகும்.

இ- அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! என்பதன் கருத்து

அல்லாஹ்வுடைய பெயர்களிலே திரித்துக் கூறுதல்- அது அல்லாஹ்வுடைய குர்ஆனிலே வந்திருக்கும் பெயர்களை மறுத்தல் அல்லது பொய்ப்பித்தல் ஆகும். அல்லது அவனுடைய படைப்பின்னங்களை வைத்து அவனுடைய பெயர்களுக்கு ஒப்பாக்குதல். அல்லது அவனுடைய குர்ஆனிலோ நபியின் ஹதீஸிலோ வராதவற்றை வைத்து வர்ணித்தல் அல்லது பெயர் சூட்டுதல் போன்றவையாகும்.Tags: