அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-

 அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-

கீழ் வருபவையைக் கொண்டு அல்லாஹ்வுடைய உயர்வு, கண்ணியம், பண்பு, பெயர் போன்றவைகளை அறிவதின் முக்கியத்துவம் வெளியாகின்றது.

முதலாவது-

அறிவுகளில் மிகவும் உயர்ந்த சிறந்த அறிவு அல்லாஹ் அவனுடைய சிறந்த பெயர்கள் மேலும் அவனுடைய உயர்ந்த பண்புகள் போன்றவற்றோடும் அடியானுடைய அம்சங்கள் சம்பந்தமாக தொடர்புபட்ட அறிவுமாகும்

அல்லாஹ்வுடைய பெயர்களையும் குணங்களையும் கொண்டு ஒரு அடியான் அவனுடைய இறைவனுக்கு வணக்கத்தை செலுத்தும் போது நற்பேறை பெற்றுக் கொள்கின்றான். மேலும் அதைக் கொண்டு தூய்மைப்படுத்துகின்றான் மேலும் அவனுடைய இரக்கத்தையும் அவனுடைய மகத்துவத்தையும் பெற்றுக் கொள்கின்றான். அது அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் வெற்றியையும் சுவர்க்கத்தையும் தேடித்தருவதற்கு காரணமாக அமைகின்றது. மேலும் மறுமை நாளிலே அல்லாஹ்வுடைய சங்கையான மகத்துவமான திரு முகத்தை காணக் கிடைப்பதுமாகும். இந்த உயர்ந்த நோக்கம் அல்லாஹ்வுடைய ஆசிர்வாதம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது

அல்லாஹ்வுடைய பெயர்களைப் பற்றியும் அவனுடைய பண்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வதே அடிப்படை அறிவாகும். மேலும் ஈமானின் அடிப்படையும் முதலாவது கடமையுமாகும். யார் ஒரு மனிதன் அவனுடைய இறைவனை அறிந்து கொள்கின்றானோ அவன் உண்மையாகவே அவனை வணங்குவான்.

அல்லாஹ் கூறுகின்றான்

{"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்பதை அறிந்து கொள்வீராக! }
[ஸூரது முஹம்மத் 19]

மூன்றாவது

அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்வதின் மூலம் அவனுடைய ஈமானும் இறையச்சமும் அதிகரிக்கின்றது. மேலும் ஏகத்துவம் உண்மைப்படுத்தப்பட்டு வணக்கம் எனும் உணவின் சுவையையும் அவன் சுவைத்துக் கொள்ளுவான். இதுதான் ஈமானுடைய உயிர் நாடியும் அடிப்படையும் நோக்கமும் ஆகும். குர்ஆனில் இருந்து அல்லாஹ்வுடைய பெயரையும் பண்புகளையும் அறிவதின் மூலம் மார்க்கப் பாதையை நெருங்க முடியும். நிச்சியமாக அல்லாஹ் புகழுக்கு உரியவன். அவனுடைய பெயர் தூய்மையடைகின்றது இதனை அறிவதின் மூலம் அல்லாஹ் அவனுடைய அடியானை கண்ணியப்படுத்த நாடினால் அல்லாஹ்வுடைய அன்பைக் கொண்டு அவனுடைய உள்ளத்தை ஒன்று சேர்ப்பான். அல்லாஹ்வுடைய பண்புகளை ஏற்றுக் கொள்வதினால் அவனுடைய உள்ளத்தை விரிவுபடுத்துகின்றான் . மேலும் அவர்கள் வஹியுடைய ஒளியையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் ஏதாவது ஒன்று வந்தால் அவனை நிச்சியமாக ஏற்றுக் கொள்வான். மேலும் அவனை பொருந்தியவனாகவும் சாந்தியடைந்தவனாகவும் சந்திப்பான். மேலும் அவனை வழிப்படச் செய்து அவனுடைய உள்ளத்தை பிரகாசிக்கச் செய்வான்.

அவனுடைய உள்ளத்தை விரிவுபடுத்துகின்றான் மேலும் அதிலே சந்தோசத்தையும் அன்பையும் நிரப்புகின்றான். எனவே அவனுடைய சந்தோசம் அதிகரிக்கின்றது. அவனுடைய செல்வம் மகத்துவமடையகின்றது. மேலும் அவனுடைய அறிவு பலமடைந்து அவனுடைய ஆத்மா அமைதி பெறுகின்றது. மேலும் அவனுடைய உள்ளம் தங்கி விடுகின்றது. அவன் அறிவு எனும் கடலில் மூழ்குவான். அதனுடைய செலிப்பைக் கண்டு அவனுடைய கண்கள் குளிர்ச்சியடையும். ஒரு அறிவினுடைய சிறப்பு அதை சுமந்திருக்கும் பொருளில்தான் உள்ளது என்பதை அவன் கண்கூடாக கண்டு கொள்வான். அல்லாஹ்வுடைய பண்புகளை அறிந்து கொள்ளும் அறிவைத் தவிர ஏனைய அறிவுகளில் இது கிடைத்தாது. அல்லாஹ் சிறந்த பெயர்களையும் உயர்ந்த குணங்களையும் உடையவன். இந்த கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் தேவையின் நிமித்தம் உள்ளது ஒரு போதும் அடியார்களின் தேவைகளில் இல்லை. அந்த உயிர்கள் அவனை விரும்ப வேண்டும் அவனை ஞாபகம் செய்ய வேண்டும். அதன் மூலமாக சந்தோசமடைய வேண்டும். அவனிடத்தில் தேவைகளை முன் வைக்க வேண்டும். என்ற எந்த த்வையும் இல்லாமல்தான் அல்லாஹ்வுடைய தேவையின் நிமித்தம்தான் இருக்கின்றது. அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் போன்றவற்றை அறிவதின் மூலம் இவை அனைத்தும் கிடைப்பதற்கான சிறந்த வழி. இவை அனைத்தயும் ஒரு அடியான் அறியும் போது அவன் அல்லாஹ்வை அதிகமாக அறிகின்றான். அல்லாஹ்விடமே அதிகமான தேவைகளை முன் வைப்பான். அல்லாஹ்வை அதிகமாத நெருங்குவான். இவை நைத்தையும் அவன் மறுக்கின்ற போது அவன் அல்லாஹ்வையும் அறியாமல் அல்லாஹ்வை வெறுத்து அல்லாஹ்வை விட்டும் தூரமாகின்றான். ஒரு அடியான் தன் உள்ளத்தில் இருந்து அல்லாப்வை எவ்வாறு வெளியாக்கின்னோ அவ்வாறஅல்லாஹ்வும் தன் உள்ளத்திள் இருந்து அந்த அடியானை வெளியாக்கிவிடுவான்

அறிவின் சிறப்பை அதை அறிந்தவர்களிலே வைத்துள்ளான். மேலும் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறிவதன் மூலம் மாத்திரம் அது சிறப்பாகி விடாது. அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் அறிவதனால் உள்ளம் சீரடைந்து ஈமான் பூர்த்தியாகும்.

நான்காவது

அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒருவன் உண்மையிலே அவன் செய்வதற்கும் மார்க்கம் கடமையாக்கியதற்கும் அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிவதை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஏனென்றால் அல்லாஹ் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் வேண்டியவனாகவே அனைத்து விடயங்களையும் செய்கின்றான். அல்லாஹ்வுடைய செயல்கள் நீதியாகவும் நுட்பமாகவும் சிறப்பாகவும் இருக்கும். அல்லாஹ் புகழ் சிறப்பு நுட்பம் நீதி போன்றவைகளை வேண்டியவனாகவே சட்டங்களை கடமையாக்கி உள்ளான். அவனுடைய செய்திகள் அனைத்தும் உண்மையாகும். அவனுடைய ஏவல்களிலும் தடுத்தல்களிலும் நீதி நுட்பம் இரக்கம் போன்றவை காணப்படும். யார் இதிலே தெளிவு பெறுகின்றாரோ அவருக்கு இந்த அறிவு மகத்துவமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.

ஐந்தாவது

அல்லாஹ்வுடைய பண்புகளுக்கும் மறைமுகமான வெளிரங்கமான வணக்கங்கள் வேண்டி நிற்பதற்கும் இடையிலான உறுதியான ஒரு சாசனம். ஒவ்வொரு பண்புக்கும் குறிப்பான வணக்கம் ஒன்று உண்டு. அது கடமையாக்கப்பட்டதும் வேண்டப்பட்டதுமாகும். இது உடலாலும் உள்ளத்தாலும் செய்யக்கூடிய அனைத்து வகையான நல்லறங்களையும் நிலையானதாக்கும். ஒரு அடியான் அவனுடைய இறட்சகனை கஷ்டத்திலும் பிரயோசனத்திலும் மேலும் கொடையிலும் தடுப்பதிலும் , படைப்பிலும் , உணவளிப்பதிலும், உயிர்ப்பிப்பதிலும் மரணிக்கச் செய்வதிலும் ஒருமைப்படுத்துகின்றான். அல்லாஹ்வை இறையச்சத்துடன் வணங்குவது அவனுக்கு வெளிரங்கமாகவே பிரயோசனமளிக்கின்றது. மேலும் இறையச்சத்தைப் பற்றிப்பிடிப்பதால் அவனுக்கு வெளிரங்கமாகவே பிரயோசனம் அளிக்கின்றது. மேலும் அல்லாஹ் கேட்பதையும் பார்ப்பதையும் அவன் அறிந்திருக்கின்றான். அவன் அல்லாஹ்வுக்கு அணுவளவு கூட மறையாது என்றும் அவன் இரகசித்தையும் கண்களுக்கு மறையும்வற்றையும் அறிந்தவன் என்பதையும் அறிந்துள்ளான். மேலும் உள்ளத்தில் மறைக்கப்படுவது அவனுக்கு நாவையும் உடலையும் பாதுகாப்பதற்கும் உள்ளத்தை அல்லாஹ் பொருந்தாதவற்றை விட்டும் பாதுகாப்பதற்குமாகும். இந்த உறுப்புக்களுக்கு அல்லாஹ்வை விரும்புவதிலும் பொருந்துவதிலும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. இவை அனைத்தும் வெளிரங்கமான வெட்கத்திக்கு உண்டாக்குகின்றது. அந்த வெட்கம் தடுக்கப்பட்ட கெட்ட விடயங்களை விட்டும் விலகுவதற்கு பியோசனம்க இருக்கும். அவனுடைய தேவையற்ற தன்மை, உள்ளமை, கொடை, உபகாரம், அருள் போன்றவை அவனுடைய விசாலமான எதிர்ப்பார்ப்பை கடமையாக்குகின்றது. மேலும் அல்லாஹ்வுடைய கண்ணியம் மகத்துவம் போன்றவை அன்பையும் பயபக்தியையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றது. அதிலே வெளிரங்கமான நிலமைகளில் பலதரப்பட்ட வெளிரங்கமான வணக்கங்கள் உண்டு அது அவற்றை கடமையாக்கிவிடும் அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் வேண்டியதாக நிற்கின்றது.

ஆறாவது

அல்லாஹ்வுடைய பெயர்களைக் கொண்டும் பண்புகளைக் கொண்டும் அவனை வணங்குவதிலே உள்ளத்தின் அமைதிக்கு ஒரு கனிவான தாக்கம் உள்ளது. மேலும் அவனுடைய போக்குகளிலும் நற்குணங்களிலும் அமைதி உண்டு. அதே போன்று அதை யார் இயலாமல் ஆக்குகின்ரானோ அவனுடைய உள்ளம் நோயடைகின்றது.

ஏழாவது

அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்தவனுக்கு அது அவன் கஷ்டத்திலும் வெறுக்கத்தக்க விடயங்களிலும் விழும் போது அவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். ஒரு அடியான் அவனுடைய இறைவன் அறியக்கூடியவனாகவும் நுட்பமானவனாகவும் நீதுயானவனாகவும் யாருக்கும் அநியாயம் செய்யாதவனாகவும் பொருமையாளனாகவும் பொருந்தக் கூடியவனாகவும் இருக்கிறான் என்பதை அறிந்தால் அவனுக்கு ஏற்படக்கூடிய வெறுக்கத்தக்க விடயங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நலவுகளின் மற்றும் சீர்த்திருத்தங்களின் மூலமும்தான் இரங்குகின்றது என்பது அவனுடைய அறிவு அறிந்து கொள்ளாது. என்றாலும் அது அல்லாஹ்வுடைய அறிவையும் நுட்பத்தையும் வேண்டி நிற்கின்றது. அவனுடைய இறட்சகனின்பால் அமைதியாக இருப்பான். அவனுடைய ஏவல்களை அங்கீகரிப்பான்.

எட்டாவது

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளுடைய கருத்துக்களை அல்லாஹ்வை விரும்புவதினாலும் அவனுடைய மகத்துவத்தாலும் அவனுடைய ஆதரவினாலும் அவனுடைய பயத்தினாலும் அவன் மீது நம்பிக்கை வைப்பதாலும் அவன் மீது அங்கீகாரம் செலுத்துவதாலும் அவனுடைய கண்காணிப்பாலும் அதனுடைய கருத்தை விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிவதாலும் முடியும்

ஒன்பதாவது

அல்லாஹ்வுடைய பெயர் மற்றும் பண்புகளை ஆராய்வது அல்லாஹ்வுடைய குர்ஆனை ஆராய்வதற்கு பெரிய உதவியாக இருக்கும். அல்லாஹ் எங்களுக்கு குர்ஆனை ஆராயுமாறு ஏவியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் {இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்} [ஸூரது ஸாத் 29]

அல்லாஹ்வைப் பெற்றுக் கொண்டவன் எதை இழப்பான்?! மேலும் அல்லாஹ்வை இழந்தவன் எதைப் பெற்றுக் கொள்வான்?!

மேலும் நிச்சியமாக சங்கையான குர்ஆன் அதற்குப் பொருத்தமானவாரு அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் கூறியுள்ளது. அதை ஆராய்ந்தால் குர்ஆனிலே அதிகமான பகுதிகளை ஆராய்ந்தது போன்று ஆகிவிடும். நீங்கள் குர்ஆனை ஆய்வு செய்தால் ஏழு வானங்களுக்கு மேலால் தன்னுடைய அர்ஷின் மீது நிலையான ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வீர்கள். அவன் அவனுடைய அடியார்களின் எல்லா செயல்களையும் கண்கானிக்கின்றான் நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்றான். தூதுவர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை வழங்குகின்றான். அவர்கள் நன்மை செய்யும் போது பெருந்திக் கொள்கின்றான் தீமை செய்யும் போது கோவப்படுகின்றான். நன்மைகளுக்கு நற்கூலிகளையும் தீமைகளுக்கு தண்டனைகளையும் வழங்குகின்றான். கேட்பவர்களுக்கு வழங்குகின்றான் சிலருக்கு கொடுக்காமல் தடுக்கின்றான். சிலரை உயர்த்தி சிலரை தாழ்த்துகின்றான். ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து பார்க்கவும் கேட்கவும் செய்கின்றான். அனைத்து பரகசியங்களையும் இரகசியங்களையும் அறிகின்றான். அவன் நாடியவாரு செயற்படுகின்றான். அவனுடைய நாட்டம் இன்றி எந்த ஒரு அணுவும் ஒரு இடத்திற்கு அசையாது. அதே போன்று அவனுடைய நாட்டம் இன்றி மரத்தில் இருந்து ஒரு இலை கூட கீழே விழ முடியாது.

பத்தாவது

அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகனையும் அறிந்தவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடனான ஒழுக்கமும் மேலும் வெக்கமும் விதைக்கப்படும். அல்லாஹ்வுடனான ஒழுக்கம் என்றால் மார்க்கத்திலே இருந்து அதனுடைய வெளிரங்கமான மற்றும் மறைமுகமான முறையில் ஒழுக்கமாக இருத்தல். ஒருவருக்கு ஒழுக்கம் ஏற்படுவது மூன்று விடயங்களைக் கொண்டாகும்- அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்ளல், அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும் அவன் விரும்புவதையும் வெறுப்பதையும் அறிந்து கொள்ளுதல், உறுதியான மென்மையான முன்னோக்குவதற்கு நிலமையாலும் செயலாலும் சொல்லாலும் உன்மையாக ஏற்றுக் கொள்வதற்காக தயாராகும் ஒரு ஆத்மா.

பதினொன்னாவது

அல்லாஹ்வையும் அவனுடைய திருப் பெயர்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவது ஒரு அடியானுடைய ஆத்மாவின் குறைகளையும் ஆபத்துகளையும் அவனுக்கு தெளிவுபடுத்தும். அதை திருத்திக்கொள்வதற்கு அவன் முயற்சி செய்வான். அதை மறுப்பதற்கான காரணங்கள் நான்காகும் அவையாவன பெறுமை, பொறாமை, கோபம், இச்சை போன்றவையாகும். இந்த நான்கும் ஒரு அடியானுக்கு அவனுடைய இறைவனைப் பற்றி மடமையையும் அவனுடைய ஆத்மாவைப் பற்றிய மடமையையும் உருவாக்கும். அவனுடைய இறைவனை பூரணமான குணத்துடனும் கண்ணியமான அடைமொழிகளுடனும் அறிவதனால் அவனுடைய ஆத்மாவின் குறைகளையும் ஆபத்துகளையும் அறிந்து, அவன் பெறுமையடிக்கமாட்டான் அதைக் கொண்டு கோபப்படமாட்டான் மேலும் அல்லாஹ் கொடுத்தவற்றைக் கொண்டு பொறாமைப்படவும்மாட்டான்.

பண்ணிரெண்டாவது

ஒது அடியானுடைய அல்லாஹ்வின் திருப் பெயர்களிலும் பண்புகளிலும் இருக்கும் மடமையும் அதை விளங்கிக்கொள்ளாத தன்மையும். அதைக் கொண்டு அல்லாஹ்வை வணங்குவது மடைக்கும் வழிகேட்டுக்கும் காரணமாக அமையும். அல்லாஹ்வும் அவனுடைய ரஸுலும் அறியாத எந்த விடயத்தை ஒருவன் அறிகின்றானோ மேலும் இந்த உண்மையை விட்டுவிட்டு எந்த உண்மையை அடைந்து கொள்கிறானோ மேலும் அவனுடைய பொருத்தத்திற்காக அல்லாஹ்வுடைய அறிவையும் செயலையும் விட்டு விட்டு எந்த செயலையோ அல்லது அறிவையோ அடைந்து கொள்கின்றானோ அவன் செல்ல வேண்டிய பாதையை அறிந்தவனாக இருந்தும் இவ்வாறு செய்தால் அவன் அதை அடைந்ததின் பின் அவனுக்கு எந்தக் கூலியும் இல்லை. ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய உள்ளத்தின் வாழ்க்கையாகவும் ஆத்மாவின் வாழ்க்கையாகவும் உள்ளது. உள்ளத்துடைய வாழ்க்கை அல்லாஹ்வின் இயற்கைத்தன்மையையும் அன்பு வைப்பதையும் வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்த வேண்டும் என்பதையும் அவனின் பக்கமே ஒதுங்க வேண்டும் என்பதையும் அமைதி அவனை ஞாபகம் செய்வதைக் கொண்டே ஏற்படுகின்றது மேலும் அவனை நெருங்குவதின் மூலமே தூய்மை ஏற்படுகின்றது என்பதையும் அறிவதிலே உள்ளது. யார் இந்த வாழ்க்கையை இழக்கின்றாரோ அவர் அவருடைய வாழ்க்கையில் அனைத்து நலவுகளையும் இழக்கின்றார். அதை அவன் இழந்து விட்டால் உலகில் அனைத்து விடயங்களையும் இழந்துவிடுவான்.

பதிமூன்றாவது

அல்லாஹ்வுடைய திருப் பெயர்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதின் மூலம் ஏகத்துவத்தில் விழுவதற்கும் ஈமான் பூரணமடைவதற்கும் காரணமாக இருக்கும். அவனுடைய உள செயல்கள் அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை வைத்தல், ஆதரவு வைத்தல், பயப்படுதல், இரக்கம் வைத்தல், மனத்தூய்மை ஆகியவற்றினூடாகவே வெளிவரும். அது உள்ளத்தை சீர் செயவதற்கு மகத்தான பயமாக இருந்தும் கூட மேலும் அதன் மூலம் ஊசலாட்டங்கள் ஆபத்துக்கள் நீங்கும் என்று இருந்தும் இந்தப் பாடத்திலே கவனம் செலுத்துவதிலும் ஈடுபடுவதிலும் குறைவாகவே காணப்படுகின்றனர். மார்க்கத்தின் அடிப்படையை யார் ஆராய்கின்றாரோ அவர் உள செயல்களுக்கும் உடல் ரீதியான செயல்களுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை அறிந்து கொள்வார். அது எந்தப் பிரயோசனமும் அளிக்காது. ஒரு அடியானுக்கு உள செயல்கள் உடல் ரீதியான செயல்களை கடமையாக்குகின்றது. ஒரு முஃமீனையும் முனாபிக்கையும் வேறு பிரித்து பார்க்க முடியுமா அவர்கள் இருவருடைய உள்ளத்தில் இருக்கின்ற விடயங்கள் அல்லாததை வைத்து அவர்களை வேறு பிரித்து நோக்க முடியுமா ஒருவருக்கு அவருடைய உள்ளத்தால் செய்ய வேண்டிய அமல்களுக்கு முன்னால் உடலால் செய்யும் அமல்களைக் கொண்டு இஸ்லாத்தில் நுளைய முடியுமா உடலால் அல்லாஹ்வை வழிப்படுவதை விட உள்ளத்தால் வழிப்படுவது மிகவும் சிறந்தது மகத்தானதும் நிரந்தரமானதுமாகும். உள்ளத்தாள் வணங்குவதுதான் உடலுருப்புக்களால் வணங்குவதற்கு காரணமாக அமையும். இதனால்தான் அனைத்து நேரங்களிலும் இது கடமையாக இருக்கின்றது.

அல்லாஹ்வை அறிவது உள்ளங்களுக்கும் உடல்களுக்கும் சீர்த்திருத்தமாக அமையும்.

Tags: