உளத்தூய்மையின் பலன்கள்

 உளத்தூய்மையின் பலன்கள்

உளத்தூய்மையின் பலன்கள்

1 நற்செல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

அது நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும். அது நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையாகும். அதாவது மனத்தூய்மை முக்கியமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நிச்சியமாக அல்லாஹ் ஒரு நற்செயலை அவன் தூய்மையானவனாக இருந்தாலே ஏற்றுக் கொள்வான். அதைக் கொண்டு அவனை அல்லாஹ் முற்படுத்துகின்றான்.». (ஆதாரம் நஸஈ).

2 உதவி மற்றும் வசதியாக்கிக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«இந்த சமூதாயத்தில் அல்லாஹ் பலகீனமானவர்களுக்கு அவர்களுடைய அழைப்பையும், அவர்களுடைய தொழுகையைக் கொண்டும், மனத்தூய்மையைக் கொண்டும் உதவி செய்கின்றான்.». (ஆதாரம் நஸஈ).

3 நோய்களில் இருந்து உள்ளத்தைப் பாதுகாத்தல்

உள நோய்கள் என்பது குரோதம், மோசடி, பொறாமை, வெருப்பு போன்றவைகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் பிரியாவிடை ஹஜ்ஜில் வைத்து கூறினார்கள்

«மூன்று விடயங்கள் ஒரு முஃமினுடைய உள்ளத்தை வெறுப்படையச் செய்யாது- அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் நற்செயல்கள் செய்தல், முஸ்லிம்களுடைய தலைவர்களுடன் ஆலோசனை செய்தல், அவர்களுடைய கூட்டத்தை பற்றிப் பிடித்து கொள்ளுதல். நிச்சியமாக அழைப்பு அவர்களுக்கு பின்னால் இருந்து சூழ்ந்து கொள்ளும்.».(ஆதாரம் திர்மிதி).

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ஒரு ஸஜ்தா அல்லது ஸதகா செய்வதையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான் என்பதை அறிந்தால் நான் மிகவும் விரும்பக்கூடிய மரணத்திலிருந்து என்னை மறைக்கமாட்டேன். யாரை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான் என்பதை நீங்கள் அறிவீர்களா? {"(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.}.[ஸூரதுல் மாயிதா 27]

4 உலக செயல்களை நற்செயல்களுடன் இணைத்துக்கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நீங்கள் உங்களுடைய பாலுருப்பை பயன்படுத்தும் விதத்திலும் ஸதகா உள்ளது. ஸஹாபாக்கள் கேட்டார்கள் ரஸூலூல்லாஹ்வே ஒருவருக்கு இச்சை ஏற்பட்டு அவர் தனது மனைவியிடம் வந்து செல்கின்றார் அவருக்கு அதற்கு கூலி வழங்கப்படுமா? நபியவர்கள் கூறினார்கள் அவர் அதை தடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தினால் அவருக்கு பாவம் உண்டுதானே அதே போன்றுதான் அவர் ஹலாலில் விழுந்தால் அதற்கு அவருக்கு கூலி வழங்ப்படும்.». (ஆதாரம் முஸ்லிம்).

5 ஊகங்களையும், ஷைத்தானின் மோசமான அபாயங்களையும் மேலும் அவனுடையஊசலாட்டங்களையும் விரட்டுதல்.

அல்லாஹ் ஷைத்தானை அவனுடைய அருளை விட்டு விரட்டியதற்கும் தூரமாக்கியதற்குமான காரணத்தை கூறுகின்றான். { "என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று கூறினான்}. [ஸூரதுல் ஹிஜ்ர் 39-40].

6 கஷ்டங்களையும் வேதனைகளையும் நீக்குதல். இரவிலே அடைக்கலம் தேடிய மூன்று பேர்களுடைய கதை அல்லது மழைக்காக குகைக்குள் ஒதுங்கியவர்களுடைய கதை போன்றவைகளை உதாரணமாக கூற முடியும். அவை இரண்டும் அடிப்பைடையிலே சரியானதாகும்.

7 வெற்றி மற்றும் சமாதனம் போன்றவைகள் பரச்சினைகளின் அபாயங்களாகும். எங்களுடைய நபி யூஸூப் (அலை) அவர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவாகும். அல்லாஹ் இதைக் கூறுகின்றான் {அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார் இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.}. [ஸூரது யூஸூப் 24].

உலகத்தை இறைவன் நீக்கி விடுகின்றான். அது உள்ளத்தில் கலந்துவிடும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றான் மேலும் இறைவன் கலந்த உலகத்தை உள்ளத்தை விட்டும் பிரிப்பதையும் தெளிவுபடுத்துகின்றான்......

8 பலகீனமான குறைந்த நற்செயலாக இருந்தாலும் அதனுடைய கூலியை அவர் அடைந்து கொள்வார்.

அல்லாஹ் கூறுகின்றான் {(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் "உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை'' என்று நீர் கூறியபோது, (நல்வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.}.[ஸூரதுத் தவ்பா 92],

நபர (ஸல்) அவர்கள் கூறினார்கள் «உண்மையாக யார் அல்லாஹ்விடம் வீர மரணத்தை கேட்கின்றாரோ அவர் அவருடைய விரிப்பிலே மரணித்தாலும் சரி அவர் வீரமரணமடைந்த இடத்தை அடைந்து கொள்வார். ». (ஆதாரம் முல்லிம்).

9 சுவர்க்கத்தில் நுளைவார்

அல்லாஹ் கூறுகின்றான்

{ நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.}
[ஸூரது அஸ்ஸாப்பாத் 39],

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள் மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும். அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும். அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள். அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்}.[ஸூரது அஸ்ஸாப்பாத் 40-49].

இந்த பிரயோசனம் உளத்தூய்மைக்கு கொடுக்கப்படக்கூடிய பிரயோசனங்களில் மகத்துவமானதாகும்.

அல்லாஹ்வுக்கு செய்யும் நற்செயல் சிறியது ஆனால் அதனுடைய எண்ணம் அதை அதிகமானதாக ஆக்கிவிடும் அதே போன்று நற்செயல் அதிகமானது அது எண்ணத்தை குறைத்து விடும்.

(அருள் பொழிந்தவன் எங்கே)

உன்னுடைய பாவங்களை மறைத்து விடுவதைப் போன்று உன்னுடைய நன்மைகளையும் மறைத்து விடு.

அபூ ஹஸிம் அல் மதனி



Tags: