மனத்தூய்மை என்பதன் கருத்து

 மனத்தூய்மை என்பதன் கருத்து

மனத்தூய்மை என்பதன் கருத்து

மனத்தூய்மை என்பது நல்லடியார்களின் கேடயமாகும். அல்லாஹ்வை பயந்தவர்களுடைய ஆத்மாவாகும் மேலும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான இரகசியமாகும். முகஸ்துதி மற்றும் குழப்பம் போன்றவைகளை துண்டிக்ககூடியது. அது அல்லாஹ்வைன்றி வேறு யாருக்கும் தனது அமல்களை செலுத்தாமல் இருக்க வேண்டும். வேண்டுவதில் அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் உன்னுடைய உள்ளம் வேண்டாமல் இருக்க வேண்டும். மனிதர்களில் இருந்து புகழுக்குறிவனை தேடக்கூடாது. அல்லாஹ்விடமன்றி வேறு யாரிடமும் கூலியை எதிர்பார்க்கவும் கூடாது.

மனத்தூய்மை செயல்களின் பூரணமும் அழகுமாகும். அது உலகத்திலே சிலவற்ரை கண்ணியப்படுத்தும். அது வழிப்படுவதிலே அல்லாஹ் ஒருவனை நாடியதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வினுடைய கண்காணிப்பில் தொடர்ந்தும் இருக்ககூடிய படைப்பினத்தின் பார்வையின் மரதியாகும். அல்லாஹ் மகத்துவமான கூலியை வழங்கக்கூடியவன். ஏனையவை அனைத்தும் வீணாகவே செல்லக்கூடியது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும்.». (ஆதாரம் புகாரி).

அய்யூப் அஸ்ஸஹ்தானி இரவு முழுவதும் நின்று வணங்குபவாராக இருந்தார்கள் அவர் அதை மறைத்துவிட்டார் காலை நேரத்தில் நின்று வணங்கியவாறு சத்தம் செய்தார்.

மனத்தூய்மைக்கான இடம்

மனத்தூய்மைக்கு மார்க்கத்திலே ஒரு உயர்ந்த இடம் காணப்படுகின்றது. அதனுடைய இடம் நீங்காது. மனத்தூய்மை இல்லாமல் நற் செயல்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. குர்ஆனிலே அதிகமான இடங்களில்அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அதில் இருந்தும் உள்ளதுதான்

{வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.}. [ஸூரதுல் பய்யினா 5]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்

{"எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக}.
[ஸூரதல் அன்ஆம் 162-163]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகமரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்}. [ஸூரதுல் முல்க் 2].

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக! கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.}. [ஸூரது அஸ்ஸூமர் 2-3]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {மது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்''}.
[ஸூரதுல் கஹ்ப் 110].



Tags: