நீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்?

 நீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்?

நீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்?

அனைத்து மறைவான விடயமும் வெளிரங்கமான விடயத்துக்கு முரணானதாகும் அது மார்க்கத்தில் முறிக்கக்கூடியது.

முதலாவது- அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தை உண்மைப்படுத்துதல்.

அல்லாஹ் கூறுகின்றான்

{உளத்தூய்மையஅல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குங்கள் கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. }. [ஸூரது அஸ்ஸூமர் 2-3]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.}
[ஸூரதுல் பய்யினா 5].

இரண்டாவது- ரஸூல் (ஸல்) அவர்களை பின்பற்றுவதை உண்மைப்படுத்துதல், மேலும் அவர் ஏவியதை பின்பற்றுவதும் அவர் தடுத்ததை விட்டும் விலகி நடத்தலும். மேலும் அவர் அறிவித்ததை உண்மைப்படுத்தவும் வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்}. [ஸூரதுன் நிஸா 59].

மூன்றாவது- நீ மனத்தூய்மை உடையவனாக ஆகுவதற்கு நாடினால் உன்னுடைய நல்லமல்களில் கவனமாக இரு மேலும் அல்லாஹ் நிலழே இல்லாத அந்நாளில் ஏழு பேருக்கு நிழல் கொடுப்பான் அதை நீ அதிகமாக நினைவு கூறு «.ஒரு மனிதன் ஒரு பொருளை ஸதகா செய்தான் என்றால் அது மறைந்து விடும்». (ஆதாரம் புகாரி).

மேலும் கூறினார்கள் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன».(ஆதாரம் புகாரி).

நான்காவது- உன்னுடைய உள்ளத்தைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வதை விரும்பி முன்னோக்கு மக்களுக்கு மத்தியில் அதைரியம் கொண்டவனாக இரு. உன்னை படைத்த இறைவனுடன் ஒன்றுபட்டவனாக இரு. ஒரு மனத்தூய்மைவாதி உலக விடயங்களை அடைந்து கொள்வதிலோ அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதிலோ ஆசை கொள்ளமாட்டான். மாறாக அவனின் ஆசை அல்லாஹ்வுடைய அருளிலே உள்ளது.

ஐந்தாவது- உன்னுடைய இறைவனுக்கு சிரம் பணிவது உன் மீது கடமையாகும். இழிவின் வாசளை தேவையற்றதாக ஆக்கி அல்லாஹ்விடத்தில் மனத்தூய்மையை தருமாறு பிரார்த்திக்க வேண்டும். முகஸ்துதியை விட்டும் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முன் செய்த பெரிய, சிறிய பாவங்களை விட்டும் பாவமன்னிப்பு தேடவேண்டும்.

மனத்தூய்மை என்பது. அல்லாஹ்வின் பக்கம் உன்னுடைய செயல்களை செலுத்த வேண்டும். அவன் அல்லாதவைகள் மீது செலுத்தக்கூடாது.

ஆறாவது- முகஸ்துதியையும் எச்சிரித்து இருப்பதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஒரு அடியான் முகஸ்துதியின் பாதையையும் அதன் ஆத்தமாக்களின் நுளைவாயிலையும் அறிந்தால் மனத்தூய்மையின் பாதையை விட்டும் தூரமாக வேண்டும். எனவேதான் சில மனிதர்கள் தன்னை பொறுப்பாளன் என்று வர்ணிக்கின்றனர் அல்லது பொருத்தமானவன் என்று வர்ணிக்கின்றனர். அல்லது அவனுடைய செயலையோ வழிப்படுவதையோ அறிவித்து அவனை வர்ணிக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்

{இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக்கான பலன்)களை இங்கேயே முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும்.}. [ஸூரது ஹூத் 15-16].

மமுகஸ்துதி ஒரு சிறிய இணைவைப்பாகும். அதன் கடுமையான விளைவும் செயல்கள் வெளிப்படையாக நல்லதாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. அது அதனுடைய தோழர்களின் மீதே வந்துள்ளது.

ஏழாவது- நற்குணம் உடைவர்களுடன் தோழமை கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«ஒரு மனிதன் அவனுடைய தோழனுடைய மார்க்கத்தில் இருக்கின்றான்»

(ஆதாரம் திரமிதி).

நெருப்பும் தண்ணீரும் எவ்வாறு ஒன்று சேராதோ அதே போன்று புகழ்ச்சிக்குறிய அன்பு மற்றும் மனத்தூய்மை ஆகிய இரண்டும் ஒன்று சேராது.

எட்டாவது- வணக்கத்தையும் அதன் ரகசியத்தையும் மறைத்தல்.

அல்லாஹ் கூறுகின்றான். {தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது}. [ஸூரதுல் பகரா 271].

ஒன்பதாவது சுய ஆராய்வு கடுமையானதாக இருக்க வேண்டும். இது ஒவ்வொறு நாளும் நடக்க வேண்டும்

அல்லாஹ் கூறுகின்றான் {நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம்.}. [ஸூரதுல் அன்கபூத் 69].

அல்லாஹ் அந்த வசனத்தை பூர்த்தியாக்குகின்றான் { நம் விஷயத்தில் }.

பத்தாவது- அல்லாஹ்வை அழைப்பது அவனை ஏற்றுக்கொள்வது போன்றவைகளை பற்றிப்பிடிப்பது. மேலும் அதை தொடர்ந்தும் செய்ய வேண்டும். ஒரு ஏழை அடியான் அவனுடைய தலைவனை ஆதரித்தால் அவன் அந்த அடியானின் மீது இரக்கம் காட்டி அவனுடைய தேவைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுப்பான். பிரார்த்தனை என்பது அது அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும்.



Tags: